sankariarul May 26, 2020

🌈💟திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்💟🌈 🌺💟12 : எம்பெருமான் என்றேனோ பட்டர்பிரானைப் போலே💟🌺 🌺ஆழ்வார்களில் பட்டர்பிரான் என்றால் அது பெரியாழ்வார் எனப் போற்றப் படும் விஷ்ணு சித்தரையே குறிக்கும். 🌺இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தார் 🌺வேறு எந்த ஆழ்வாருக்கும் இல்லாத பெருமை இவருக்கு உண்டு. 🌺பெரியபிராட்டியை மகளாகவும், ஸ்ரீரங்கநாதரை மாப்பிள்ளையாகவும் அடையும் பேறு பெற்றவர், 🌺கருடனின் அம்சம் எனக் கருதப் பட்டார் 🌺எப்போதும் வில்லிபுத்தூரிலுள்ள வடபத்ரசாயி பெருமானைச் சிந்தனையில் கொண்டிருந்ததால் விஷ்ணு சித்தர் எனப்பட்டவர் ஆவார் 🌺தாய் மாமன் கம்சனின் அழைப்பை ஏற்று கண்ணன் , பலராமனுடன் கோகுலத்திலிருந்து புறப்பட்டார்.வழியில் ஒருவர் 🌺கண்ணனுக்கும், பலராமனுக்கும் மாலைகள் அணிவித்தார்.அதை ஏற்றுக்கொண்ட கண்ணன், 🌺அந்த பூ வியாபாரிக்கு அருள் செய்தார்.அவ்வியாபாரி வீடு பேறு பெற்றார் என்ற கதையைக் கேட்ட 🌺விஷ்ணு சித்தரும், தானும் பெருமாளுக்கு புஷ்ப கைங்கரியம் செய்ய விரும்பினார்.அதனால், தன் குடிலை ஒட்டி பூந்தோட்டம் அமைத்து.. 🌺பூக்களை இ றைவனுக்கு சமர்ப்பித்து வந்தார் 🌺வல்லபதேவ பாண்டிய மன்னன் ஒரு வைணவ பக்தன். 🌺ஒருநாள் அவன் மாறு வேடத்தில் இரவில் நகர் வலம் வந்தான்.அப்போது வைதீக அந்தணன் ஒருவன் ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான். 🌺வேறு ஊர்க்காரன் என்பதால் மன்னன் அவனை எழுப்பி, அவன் யார்? என விசாரித்தார் 🌺அதற்கு அவன் காசி சென்று விட்டு திரும்புவதாகவும், சேதுவிற்கு செல்வதாகவும் கூறினான் 🌺மன்னனும் "பல ஊர்களுக்கு சென்றுள்ள நீ..எனக்கு ஏதேனும் நன்மொழிக் கூறு" என்றார் 🌺அந்தப் பயணியும், "மழை காலத்திற்கு வேண்டியவற்றை மற்ற எட்டு மாதங்களிலும் இரவுக்கு வேண்டியதை பகலிலும், 🌺முதுமைக்கு வேண்டியதை இளமையிலும் சேர்த்து வைப்பவனே புத்திசாலி" என்றிட்டான் 🌺மன்னன் அதை மனதில் இருத்திக் கொண்டான் 🌺அரண்மனை வந்ததும் யோசித்த மன்னன், தன்னிடம் செல்வம் இருந்தாலும், மறுமை உலகிற்கு ஏதும் சேர்க்காமல் வறியனாக இருக்கிறேனே என எண்ணினான்.. 🌺உடனே, தன் நண்பரும்,சிறந்த வேதவித்துவுமான செல்வனம்பி என்பவரை அழைத்து 🌺"மறுமைக்கு உண்டானதைச் சேர்த்துத் த்ருபவன் யார்? " என்றான் 🌺செல்வனம்பியும், இதை ஒரு போட்டியாக அறிவித்தார்.சரியான விடை கூறுபவருக்கு, கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள பொற்கிழி பரிசளிக்கப் படும் என அறிவித்தார் 🌺யார் யாரோ வந்து என்னென்னவோ சொல்லியும் மன்னன் மனம் அவற்றை ஏற்கவில்லை. 🌺இந்நிலையில், இறைவன் விஷ்ணுசித்தரின் கனவில் வந்து, 🌺"இம்மைக்கும், மறுமைக்கும் உள்ள செல்வம் நான் தான் என உன் திறமையால் நிரூபித்து... 🌺பொற்கிழியைப் பெற்று செல்" என்றார் 🌺"என்றைக்கும், ஏழேழு பிறவிக்கும் உள்ள செல்வன் நாராயணனே: என மன்னனுக்கு விளக்கிவிட்டு , 🌺பொற்கிழி கட்டியிருக்கும் கம்பத்தின் அருகேச் சென்றார் 🌺கம்பம், அவர் பொற்கிழியை எடுக்கும் விதத்தில் வளைந்து கொடுத்தது. 🌺அதைக் கண்டு மன்னனும், மற்றோரும் மகிழ்ந்தனர் 🌺பொற்கிழியை எடுத்துக் கொண்டு விஷ்ணு சித்தர் கிள்ம்பினார்மன்னன் தன் பட்டத்து யானையில் அவரை அமர்த்தி மதுரைத் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்றான் 🌺அப்படி விஷ்ணுசித்தர் சொன்னது போல "எம்பெருமான் நாராயணனே பரம்பொருள் என்றேனா? இல்லையே" என்றாள் அப்பெண். 🌺சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்🌺 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

+6 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
sankariarul May 26, 2020

🌍💜108 திவ்ய தேசங்கள் வரலாறு💜🌍 💝🙏கோவிலுக்கு போலாம் வாங்க.!🙏💝 💟தினம் ஒரு திவ்ய தேசம் -💟 💟உ.வே. ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்...💟 💟17) அருள் மிகு ஸ்ரீ சௌரிராஜ பெருமாள் திருக்கண்ணபுரம்💟 ❤️பூலோக வைகுந்தம், முக்தி தரும் தலங்களில் முதன்மை தலம், பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று என்று அடுக்கடுக்கான பெருமைகளைப் பெற்ற தலம் திருக்கண்ணபுரம். ❤️108 வைணவ தலங்களில் வடக்கே திருவேங்கடம் என்றும், தெற்கே திருமாலிருஞ்சோலைமலை என்றும், ❤️ திருவரங்கம் மேலை வீடு என்றும் திருக்கண்ணபுரம் கீழை வீடு என்றும் அழைக்கப்படுகிறது. 💟கம்பீர கோபுரம்💟 ❤️95அடி உயரமும் 7 நிலைகளையும் கொண்டு கம்பீரமாய்க் காட்சி தருகிறது. ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் கோயிலின் ராஜ கோபுரம். கருவரை மூலவர் ‘நீலமேகப் பெருமாள் ‘ஸீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். ❤️தாயார் ‘கண்ணபுர நாயகி‘ தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றாள். 💟சௌரிராஜப் பெருமாள்:💟 ❤️திருக்கண்ணபுரக் கோயில் உற்சவருக்கு ‘சௌரிராஜ பெருமாள்‘ என்று பெயர். ❤️ இவ்வாறு இவர் அழைக்கப்படுவதற்கான வரலாறு மிகவும் சுவையானதும், இறைவன் தீன தயாபரன் என்பதை நிரூபிப்பதாகவும் உள்ளது. 💟ஸ்ரீசௌரி வந்த கதை...💟 ❤️பொதுவாக கோயில்களை நிர்மாணிப்பதும் நிர்வாகம்செய்ய இறையிலியாக ❤️நிலங்களை மான்யமாய் அளித்து செலவினங்களுக்கான வருவாய்க்கு வழிசெய்வதும் மன்னர்கள் ❤️தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர். இதற்கு நன்றியாக இறைவனுக்கு அடுத்த நிலையில் மன்னர்களை மதித்து மரியாதை செய்துவந்தனர் கோயில் நிர்வாகிகள். ❤️ இறைவனுக்கு அணிவித்த மாலையை மன்னனுக்களித்து மரியாதை செய்வர். ❤️கோயில் அர்ச்சகர் வழக்கம்போல் ஒரு நாள் உத்சவருக்கணிவித்த மாலையை மன்னரிடம் கொண்டுபோய்க் கொடுக்க ❤️அதில் ஒரு தலைமுடியைக் கண்டு அர்ச்சகரிடம் அது பற்றிக் கேட்ட போது, மன்னர் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக ❤️‘தலைமுடி இறைவனுடைய முடிதான்’ என்று கூறிவிட்டார். ❤️மன்னன் இதை நம்ப மறுத்து நேராகக் கோயிலுக்குச் சென்றான். ❤️ உத்சவருடைய தலையிலிருந்த நீண்ட குழற்கற்றையைக் கண்டான். ❤️அது உண்மையான முடியா என்றறிய தலையிலிருந்து ஒரு முடியை எடுத்துக் காண்பிக்குமாறு அர்ச்சகரைக் கேட்டான். ❤️அவரும் ஒரு முடியைப் பிடித்திழுக்க அந்த இடத்திலிருந்து ரத்தம் பீரிட்டுத் தெறித்தது. ❤️அஞ்சி நடுங்கிய மன்னன் தன் தவறினை உணர்ந்தான். ❤️திருக்கடவூரில் அபிராம பட்டருக்கு அமாவாசையை பௌர்ணமியாகத் திகழச் செய்த இறைவனின்அருளுக்கு ஒப்ப, ❤️இங்கும் அர்ச்சகர் இயலாமைக்கு இரக்கப்பட்டு திருமால் சௌரி முடியுடன் காட்சி தந்தார். ❤️அன்று முதல் உத்சவருக்கு தலையலங்காரம் சௌரிமுடியுடன் தான், ❤️ பெயரும் சௌரிராஜப் பெருமாள் என்று வழங்கப்படலாயிற்று. ❤️நடையழகு❤️ ❤️இராவண வதம் முடிந்தபின் அயோத்தி திரும்பும் இராமனைப் பிரிய மனமில்லாது வருந்திய விபீஷணனுக்கு இராமபிரான் தன் நடை அழகைக்காட்டி அருள் செய்த தலம் இத்திருக்கண்ணபுரம் . ❤️ இதனை நிறுவுவதுபோல் இக்கோயிலில் விபீஷணனுக்கென்றே தனியாக ஒரு சன்னிதி உள்ளது. ❤️ இராமானுஜருக்கும் தனிக்கோயில் உள்ளது. ❤️சக்கரத்தின் பெருமை!❤️ ❤️அரக்கர் தொல்லையிலிருந்து தங்களைக் காத்தருளுமாறு வேண்டிக் கொண்ட முனிவர்களுக்காக பெருமாள் தன் சக்ராயுதத்தைப் பிரயோகித்து ❤️’வீகடாக்ஷன்’ என்ற அசுரனை அழித்த தலம் என்பதால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் வலக்கரத்தை நீட்டி ❤️சக்ராயுதத்தை வீசுவதுபோல் காட்சி தருவது மற்றொரு விசேஷம். ❤️முனையதரையன் பொங்கல் வந்த கதை... ❤️முனையதரையன் என்ற பக்தன் ஒருவன் இரவு தான் உண்ணக் கையில் எடுத்த பொங்கலின் நறுமணத்தை வியந்து, ❤️இது இறைவன் சுவைக்க வேண்டிய பொங்கல் என்று எண்ணிய மாத்திரத்தில் மானசீகமாக அவனால் அது இறைவனுக்கு நிவேதனம் ஆயிற்று. ❤️அடுத்த நாள் காலையில் இறைவன் மேனியில் முந்தைய நாளின் மானசீகமாய் நிவேதனமான பொங்கல் நெய்யோடு வழிந்திருப்பது கண்டு ❤️மக்கள் திகைத்ததுடன் அன்று முதல் தினமும் அர்த்தசாம பூஜையின் போது ❤️இந்த பக்தன் செய்து தரும் பொங்கலையே நிவேதனம் செய்ய ஏற்பாடாயிற்று. ♥️ஆழ்வார்கள் பாடிப்பரவிய தலம் :♥️ ❤️தமிழ்க் குடும்பங்களில் குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டு பாடும் தாய்மார்கள் ❤️ குலசேகர ஆழ்வார் பாடிய தாலாட்டைத்தான் பாடுவார்கள் ‘மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே‘ என்று தொடங்கி ❤️10 பாசுரம் பாடியுள்ள குலசேகர ஆழ்வார் இத்திருத்தலத்து பெருமாளைத்தான் தாலாட்டிப் பாடியுள்ளார். ❤️‘சிலைவலவா சேவகனே‘ என்றும், ‘ஏ மருவும் சிலை வலவா‘ என்றும் ‘ஏ வரி வெஞ்சிலை வலவா‘ என்றும் இராமபிரான் வில்லாற்றலைத்தான் புகழ்ந்து பாடுகிறார். ❤️கண்ணனைக் குழந்தையாகவும் தன்னை யசோதையாகவும் பாவித்து கண்ணனை சீராட்டி, நீராட்டி தாலாட்டிப் பெரியாழ்வார் பாடும் பாசுரங்கள்தாம் ❤️ பிற்காலப் பிள்ளைத் தமிழ் என்னும் சிற்றிலக்கியத்திற்கு வித்திட்டது. ❤️ பிள்ளைத்தமிழில் கூறப்படும் 10 பருவங்களில் செங்கீரைப் பருவம் தவழ்ந்துவரும் குழந்தை தலை நிமிர்த்தி முன்னும் பின்னும் ஆடும் அழகைப் பாடுவதாகும். ❤️ பெரியாழ்வாரும் இத்தலத்து இறைவனை அழைத்து, ❤️கண்ணபுரத்தமுதே ஆடுக செங்கீரை ஏழுலகும் உடையாய் ஆடுக ஆடுகவே‘ என்று பாடுகிறார். ❤️தந்தை பாடி மகிழ்ந்த அதே கண்ணபுரப் பெருமாளை மகள் கோதை நாச்சியாரும் ’நாச்சியார் திருமொழி’யில் கூடலிழைத்துப் பார்த்துப் பாடுகிறாள். ❤️தான் எண்ணிய எண்ணம் நிறைவேறுமா என்பதைக் கூடலிழைத்துப் பார்க்கும் வழக்கம் உண்டு. ❤️கோதையும் தான் கண்ணனை மணத்தல் சாத்தியமா என்றறிய ‘காட்டில்வேங்கடம் கண்ணபுரநகர் வாட்டமின்றி மகிழ்ந்துறைவாமனன் ❤️ஒட்டாரவந்து என்கைப்பற்றி தன்னோடும் கூட்டுமாகில் நீகூடிடுகூடலே‘ என்று பாடுகின்றாள். ❤️திருக்கண்ண புரத்தைப் போற்றி அதிக எண்ணிக்கையில் பாசுரங்கள் பாடியிருப்பவர் திருமங்கை ஆழ்வார் ❤️100க்கும் மேற்பட்ட பாசுரங்கள் இவர் பாடியவை. நம்மாழ்வாரும் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். ❤️பூலோக வைகுந்தம்!❤️ ❤️திருமால் இத்தலத்தில் எட்டு அக்ஷரங்களிலும் உருக்கொண்டு உறையும் தலமாதலால் ❤️ ‘அக்ஷ்டாக்ஷர மகா மந்திர ஸித்தி ஷேத்திரம்‘ என்று பேசப்படுகிறது. ❤️பூலோக வைகுந்தம் என்பதால் இங்கு சொர்க்க வாசல் தனியாகக் கிடையாது. ❤️திருவிழாக்கள்:❤️ ❤️15 கி.மீ.தூரத்திலுள்ள திருமலைராயன்பட்டினக் கடற்கரையில் ❤️மாசி மாத பௌர்ணமி தினத்தில் பெருமாளைத் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்து தீர்த்தவாரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ❤️வைகாசிமாதத்தில் பிரம்மோத்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாதப் பிறப்பு, ❤️ஏகாதசி மாதத்தில் இரண்டு நாள்களில் திருமஞ்சனமும் உத்சவர் புறப்பாடும் உண்டு. ❤️இத்தலத்து அமாவாசை உத்சவம் குறிப்பிடத்தக்க ஒன்று. விபீஷணனுக்கு பெருமாள் தன் நடை அழகைக் காட்டி அருள் செய்தது ஒரு அமாவாசை நாளில் என்பதை நினைவுகூறும் விதத்தில் ❤️ஒவ்வொரு அமாவாசை அன்றும் திருமஞ்சனம் செய்து சௌரிமுடி அணிவித்து உற்சவர் புறப்பாடு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. 💟துயர் துடைக்கும் ஊர்!💟 ❤️‘பாதம்நாளும் பணியத்தணியும்பிணி ஏதம்சாரா எனக்கேலல் இனியென்குறை? ❤️வேதநாவர்விரும்பும் திருக்கண்ணபுரத்து ஆதியானை அடைந்தார்க்கு அல்லலில்லையே ❤️"இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன் கல்லிலேயந்த மதில் சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே” 💟திருவாய்மொழி💟 ❤️திரு கண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலே எனது துயர்கள் எல்லாம் பாழடைந்துவிட்டன. 💟தமிழ் வருடப்பிறப்பு திருமஞ்சனம்💟 ♥️ஒவ்வொரு வருடமும் தமிழ் வருடப்பிறப்பு அன்று மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். ❤️சரியாய் நண்பகல் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும். ❤️புராணமும் திருக்கண்ணபுரமும் ❤️பாத்ம புராணத்தின் ஐந்தாவது காண்டத்தில் 96 முதல் 111 வரை உள்ள அத்தியாயங்களில் இத்தலம் விதந்து விதந்து பேசப்படுகிறது. ❤️விரைந்துமோட்சம் அளிக்க வல்லவர் யாரென்று நைமி சாரண்ய முனிவர்கள் ஒருங்கே திரண்டு ஸு த முனிவரைக் கேட்க, அவர் இத்தலத்துப் பெருமையைப் பரக்கப் பேசுகிறார். ❤️வஸு என்னும் ஒரு மஹராஜன் வானத்தில் பறக்கும் சக்தி பெற்றிருந்ததால், ❤️ அவன் உபரிசரவசு என்றழைக்கப்பட்டான். ஒரு காலத்தில் தேவர்கட்கும ❤️அசுரர்கட்கும் நடந்த யுத்தத்தில் தோற்றுப்போன தேவர்கள் உபரிசரவசுவின் உதவியை நாட இம்மன்னின் உதவியால் தேவர்கள் வெற்றிபெற்றனர். ❤️போர் முடிந்து திரும்பிய வசு தாகவிடாய் தீர்க்க கிருஷ்ணாரண்யத்தில் இறங்க அங்கு (“ஒரு விரலில் தம் உலர்ந்த சரீரத்தை உலர்த்துமாப் போல்”) ❤️மெலிந்த தேகத்தினரான முனிவர்கள் தவம் செய்துகொண்டிருக்க, அவர்களைச் சாமைக் கதிர்கள் என்று எண்ணிய உபரிசரவசுவின் வீரர்கள் தம் வாளால் கொய்ய, ❤️முனிவர்களின் அபயக் குரல் கேட்ட எம்பெருமான் 16வயது பாலகனாய் வந்து படையைத் துவம்சம் செய்ய அசுரர்களை வென்ற நமக்கு இச்சிறுவன் ❤️ஒரு பொருட்டோ என்றெண்ணிய உபரிசரவசு பல அஸ்திரங்களையும் ஏவி அதிர்ந்து போக இறுதியில் அஷ்டாச்சர மந்திரத்தை ஜெபித்து நாராயணஸ்திரத்தை ஏவ அது ❤️ சுழன்று சுழன்று அப்பாலகனின் காலடியில் சரணடைய தன்னோடு போரிட்டவன் மஹாவிஷ்ணுவே என்றறிந்த வஸு மன்னன், ❤️பாலகனின் பாதத்தில் வீழ்ந்து பாவமன்னிப்பு வேண்டினான். ❤️என் பக்தர்களான மஹரிஷிகள் உலர்ந்த மாமிசத்தை உடையவர்களாய் தபஸ் பண்ணி இந்த விமானத்தைச் சேவிப்பதால் ❤️இதற்கு உத்பலவதாக விமானம் என்றும் இங்கு ஸாநித்யம் கொண்ட எனக்கு சௌரி என்றும் திருப்பெயர். ❤️ உமது தவறை மன்னித்தோம். நீ வேண்டிய வரம்கேள் என்று பெருமாள் அருள, ❤️ தன் மகளை திருமணம் புரிய வேண்டும் என்று மன்னன் கேட்க, ❤️மாயவனும் அதற்கிசைந்து அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு. 💟மூலவர்💟 ❤️நீலமேகப் பெருமாள், சௌரிராஜன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம். 💟உற்சவர்💟 ❤️சௌரி ராஜாப் பெருமாள் 💟தாயார்💟 ♥️கண்ணபுர நாயகி 💟தீர்த்தம்💟 ♥️நித்ய புஷ்கரிணி 💟💝நல்ல கோவில் சுற்றி சுற்றி பாா்த்தீங்களா || சௌரிராஜ பெருமாள் கும்பிட்டு கொள்ளுங்கள்.💝💟 💟💖சர்வம் கிருஷ்ணார்பணம்💖💟 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

+6 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
sankariarul May 26, 2020

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
sankariarul May 25, 2020

🌍பாகவத புராண கதைகள்:-🌍 🤹👲பிரகலாதனின் பேரன் மகாபலி:--👲🤹 👲❤️பிரகலாதனுடைய பேரனாகிய பலி என்ற அசுரராஜன் ஆண்டு வந்த காலம் வாமன அவதார காலம் ஆகும். 👲♥️ இந்திரனுடன் போர் செய்து பலி தோற்றான். மீண்டும் பலம் பெற்று எப்படியாவது தேவர்களை ஜெயிக்க வேண்டும் எனத் தனக்குள் ஒரு பிரதிக்ஞை எடுத்துக் கொண்டான். 👲♥️பிருகு வம்சத்தில் தோன்றிய சுக்ராச்சாரியார் முதலிய அந்தணர்களை அணுகி ஆலோசனை செய்தான். 👲♥️ அவர்கள் பலிச் சக்கரவர்த்தியிடம் விக்ரஜித் என்ற ஒரு பெரிய வேள்வியை நடத்தும்படி உபதேசம் செய்தார்கள். 👲♥️அவ்வாறு அவர் வேள்வி செய்யவே அதில் இருந்து ஓர் பொன் ரதம் வெளிவந்தது. அந்த ரதத்தில் கணக்கற்ற வில்லும், அம்பும், கவசமும் இருந்தன. 👲♥️அதில் சிங்கத்துவஜம் கட்டப்பட்டு இருந்தது. அச்சமயம் பலியினுடைய தாத்தாவாகிய பிரகலாதன் அவன் முன் தோன்றி அவனுக்கு என்றும் வாடாத தாமரை மலர் மாலையைக் கொடுத்தார். 👲 ♥️சுக்கிராச்சாரியார் ஒரு சங்கைக் கொடுத்தார். பலிச்சக்கரவர்த்தி வேள்விக்கு வந்திருந்த அந்தணர்களை வணங்கினான். சுக்கிராச்சாரியாருடைய ஆசியையும் பெற்றான். இரதத்தில் ஏறினான். 👲♥️கவசத்தைத் தரித்துக் கொண்டான். ஒரு கையில் வில்லையும், மறுகையில் சங்கையும் தாங்கிக் கொண்டான் 👲♥️அசுர சேனைகள் புடைசூழ நேரே தேவலோகம் சென்றான். அமரர் உலகத் தலைநகர் ஆன அமராவதியை முற்றுகையிட்டான்.  👲♥️பலி எழுப்பிய யுத்த சன்னத்தமாகிய சங்கு ஒலி கேட்டதும் இந்திரனுக்கு அச்சம் ஏற்பட்டது. 👲♥️உடனே குல பிரகஸ்பதியாகிய வியாழ பகவானைப் போய்க் கலந்து ஆலோசித்தான். 👲♥️தேவேந்திரன் பிரகஸ்பதியிடம், குருபகவானே! பலி முன்பைவிட அதிக பராக்கிரமத்துடன் அசுர சேனைகளைத் திரட்டிக் கொண்டு நம்மை முற்றுகையிட்டிருக்கிறான். 👲♥️அவன் செய்த வேள்வியின் ஓமகுண்டத்திலிருந்து தோன்றிய ரதத்தில் ஏறி வந்திருப்பதைப் பார்த்தால் நாம் அவனை ஜெயிக்க முடியாது என்று கருதுகிறேன். 👲♥️ஆகவே, நான் தங்களிடம் அடைக்கலம் தேடி தேவ சைன்யத்துடன் வந்திருக்கிறேன். 👲 ♥️இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? சரியான உபாயம் சொல்லுங்கள்! என்றான். 👲♥️தேவேந்திரனே! நீ பலிச் சக்கரவர்த்தியை இந்த நிலையில் மோதுவது என்பது உகந்தது அல்ல. அவன் 👲♥️பிருகு வம்சத்து மகரிஷியின் பரிபூரண ஆசியைப் பெற்று வந்திருக்கிறான். அளவிலாப் பராக்கிரமம் பெற்றிருக்கிறான். 👲♥️இப்போது நீ யுத்தம் செய்ய வேண்டாம். நீங்கள் எல்லோரும் சுவர்க்கத்தை விட்டுப் போய் விடுங்கள். 👲♥️அவனுக்கு எப்படியாவது சொர்க்கத்தை தான் கட்டி ஆள வேண்டும் என்ற ஆசை. அந்தக் குறிக்கோளை அவன் அடைவது உறுதி. 👲♥️இருந்தாலும் காலப்போக்கில் அவனே தன்னை அழித்துக்கொள்வான். 👲♥️எந்த மகரிஷிகளினால் அளப்பரிய பலத்தைப் பெற்றானோ அந்த மகரிஷிகளுக்கு அர்ப்பணம் செய்து, 👲♥️அவர்களாலேயே அவன் அழிவைத் தேடிக் கொள்வான். கவலை வேண்டாம். 👲♥️நீயும், உன் ஆட்களும் ஸ்ரீமந்நாராயணனைத் தேடி சரண் அடையுங்கள். அவர்தான் பலிக்கு அழிவைத் தரக்கூடியவர் என்று பிரகஸ்பதி அறிவுரை செய்தார். 👲♥️குருதேவருடைய வார்த்தைகளைத் தட்டாமல் இந்திரன் தேவர்களுடன் தேவலோகத்தை விட்டு வெளியேறினான்.  பலி இதனால் தேவலோகத்தை எளிதில் கைப்பற்றினான். மூன்று உலகங்களையும் கட்டி ஆண்டான். 👲♥️அந்தணர்களும் மகரிஷிகளும் தத்தம் கர்மாவை குறைவின்றி நடத்திக் கொள்ளவும் பலி வழி செய்து கொடுத்தான். 👲♥️அதனால் ஜீவராசிகளும் அவனைப் போற்றிப் புகழ்ந்தன. பிருகு வம்ச அந்தணர்கள் தங்கள் சீடனுக்கு வந்த இந்திர பதவியைப் பார்த்து மகிழ்ந்தனர். 👲♥️அவன் இந்தப் பதவியில் இருந்து நழுவாமல் இருக்கும்படியாக நூறு அசுவமேத யாகங்களைச் செய்யுமாறு அவனிடம் கூறினார்கள். 👲♥️பலியும் அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினான்.  தேவர்கள் தட்சன் மகளாகிய அதிதி என்பவளுக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவர்கள். 👲♥️இதனால் தன் மக்களுக்கு ஏற்பட்ட எளிய, இழிநிலை வாழ்க்கையை எண்ணி அதிதி மிகவும் வருந்தினாள். 👲♥️இதைக் கண்ட கச்யபர், அதிதி! உன் முகம் வாடி இருக்கிறதே! நீ ஏதோ மனவருத்தம் அடைந்ததாக நினைக்கிறேன். 👲♥️மேலும் உனக்குத் தெரியும், அந்தணர்களுக்கும் சாதுக்களுக்கும் எந்தவிதத் துன்பமும் ஏற்பட நியாயம் இல்லை என்றார். 👲♥️தேவர்களும் உமது புத்திரர்கள், அசுரர்களும் உமது புத்திரர்கள். இருவரும் உமக்கு சமமே! 👲♥️எனினும் எனக்குக் கண் கண்ட தெய்வமாகிய உங்களிடம் ஒன்றை வேண்டுகிறேன். 👲♥️தேவலோகத்தில் எனது புத்திரர்களான தேவர்கள் பதவி, சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து தவிக்கிறார்கள். 👲♥️அவர்கள் மீண்டும் பழைய நிலையை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாகக் கூறுங்கள் என்றார். அதிதியின் வார்த்தைகளைக் கேட்டு சிரித்தார் கச்யபர். பிரியே! உன் விருப்பம் நிறைவேற வேண்டுமானால் 👲♥️நீ பரந்தாமனை தியானம் செய். அவர் உனக்கு வழியைத் தந்தருள்வார். 👲♥️பரந்தாமனை அடையவேண்டுமானால் எத்தகைய விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என அதிதி வினவினாள். 👲♥️பயோவ் விரதம் எனப்படும் விரதத்தை பங்குனி மாதம் சுக்லபட்சம் பிரதமை திதி வரும் நாளில் ஆரம்பித்து தொடர்ந்து 👲♥️பன்னிரெண்டு நாள்கள் கடைபிடித்து ஸ்ரீஹரி நாராயணனை சந்தோஷப்படுத்துவாயாக என்றார் கச்யபர். அதிதியும் அதை மேற்கொண்டாள். 👲♥️விரதத்தை தவறாமல் கடைபிடித்தாள். கடைசி நாள் அன்று பகவான் சங்கு சக்ரதாரியாக அவளுக்கு காட்சி கொடுத்தார். 👲♥️அப்போது அவள் மனம் மிக மகிழ்ந்தது. தேவ மாதா! அதிதி தேவியே! உன் விரதத்தை கண்டு மகிழ்ந்தேன். நீ எதனால் இந்த விரதத்தை அனுஷ்டித்தாய் என்பதை நான் அறிவேன். 👲♥️இப்போது உன் தேவகுமாரர்கள் பதவியிழந்து, கதியிழந்து நின்கின்றனர். 👲♥️அவர்களை மீண்டும் சொர்க்க லோக ஆட்சிக்கு ஆளாக்க வேண்டும். உன் புதல்வன் தேவேந்திரன் மீண்டும் அமராவதி நகரில் ஆட்சி செய்ய வேண்டும் என நீ ஆசைப்படுகிறாய். 👲♥️ஆனால் தற்சமயம் அது இயலாது. அசுரர்கள் யாரும் வெல்ல முடியாதபடி பராக்கிரமம் பெற்றிருக்கிறார்கள். 👲♥️ அவர்கள் நல்ல காலம், அந்தணர்கள் பராமரிப்பில் ஆட்சி நடத்தி வருகிறார்கள். எனவே போர் செய்து பயன்பெற முடியாது. 👲♥️ஆயினும் நீ என்னை வழிபட்டதற்குரிய பலன் உனக்கு நிச்சயம் உண்டு. ஆகவே உன் விருப்பத்தை வேறொரு விதத்தில் நிறைவேற்றித் தருகிறேன். 👲♥️நானே உனக்குப் புத்திரனாகப் பிறக்கவேண்டும் என்று மனத்திலே எண்ணி தியானம் செய். 👲♥️ அதன்படியே பிறந்து தேவர்களை நான் காப்பாற்றுகிறேன். இது தேவரகசியம். எவரிடமும் வெளியிடாதே. உன் ஆசை நிறைவேறும். 👲♥️வரம் கொடுத்தது போல பரந்தாமனும் அவளுடைய கர்ப்பத்தை அடைந்தார்.  👲♥️அதிதியும், கச்யபரும் பல மகரிஷிகளை அழைத்து வரச்செய்து வைதீக கர்மாக்களைச் செய்து வாமனன் என்று பெயரிட்டனர்.  👲♥️தேவர்களை காப்பது தனது கடமை என கருதிய மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்தார். 👲♥️மண்ணுலகில் விஷ்ணுவின் அவதாரமாக காஸ்யப முனிவர், திதி தம்பதிக்கு மகனாக அவதரித்திருந்தார். 👲♥️மகாபலி சக்கரவர்த்தி தன் வேள்வி நிறைவு செய்யும் விதமாக, மக்களுக்கு தான, தர்மங்கள் செய்ய தொடங்கினார். 👲♥️இதில் தான தர்மங்கள் செய்து முடிக்கும் போது வாமனன் அங்கு வந்தார். 👲🤹மூன்றடி மண்:🤹👲 👲♥️வாமனனைப் பார்த்ததும், மகாபலி தாமதமாக வந்துவிட்டீர்க்ளே. 👲♥️இப்போது தான் தானம் கொடுப்பதை நிறைவு செய்தேன் என்றார். 👲♥️அதற்கு வாமனனோ, நானோ மூன்றடி உயரம் கொண்ட சிறுவன். நான் பெரிதாக எதையும் கேட்க மாட்டேன், 👲♥️என் உயரத்தைப் போலவே மூன்றடி நிலம் மட்டும் கொடுத்தால் போதும் என்றார். 👲♥️அப்போது அசுர குரு சுக்ராசாரியார், இவர் விஷ்ணுவின் அவதாரமாக தோன்றுகிறது. 👲♥️அவருக்கு தானம் அளிப்பதற்கு முன் சற்று யோசியுங்கள் என்றார். 👲♥️ஆனால் மகாபலி சக்கரவர்த்தியோ, மகாவிஷ்ணுவே என்னிடம் தானம் பெற வந்துள்ளார் என்றால் எந்தளவிற்கு, 👲♥️நான் சிறந்தவன். நான் தானம் கொடுத்தே தீருவேன் என்றார். 👲♥️தானம் கொடுக்க கமண்டலத்திலிருந்து நீரை வார்க்க மகாபலி சக்கரவர்த்தி முயன்ற போது, 👲♥️நீர் வராத மாதிரி, வண்டு அவதாரம் எடுத்து சுக்ராச்சாரியர் கமண்டலத்தை அடைத்துக் கொண்டார். 👲♥️அப்போது வாமனன் அங்கிருந்த ஒரு குச்சியை எடுத்து கமண்டல நீர் வரும் குழாயை குத்தினார். 👲♥️இதனால் சுக்ராச்சாரியரின் ஒரு கண் பறிபோனது. 👲♥️அதன் பின் ஒரு அடியால் மண்ணுலகையும், மற்றொரு அடியால் விண்ணுலகத்தையும் அளந்தார் வாமனன். 👲♥️மூன்றாவது அடியை எங்கு வைப்பது என கேட்க, மகாபலி தன் தலை மீது வைக்குமாறு சொன்னார். 👲♥️மகாபலியின் தலையில் வாமனன் கால் வைத்ததும், மகாபலி பாதாளலோகம் சென்றார். 👲♥️அசுரராக இருந்தாலும், மக்களுக்கு நல்லனவற்றை செய்த மகாபலிக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார். 👲♥️அதற்கு மகாபலி சக்கரவர்த்தி, என் மக்களை நான் ஆண்டுக்கு ஒருமுறை வந்து பார்த்து, அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என பார்த்து செல்ல விரும்புகிறேன் என கூறினார். 👲♥️அதற்கு அப்படியே ஆகட்டும். நீ உன் மக்களை வந்து பார்ப்பதை மக்கள் ஓணம் பண்டிகையாக கொண்டாடுவார்கள் என மகாவிஷ்ணு வரம் அளித்தார். 👲♥️யாகம் நிறைவேறியதும் பலி எல்லோருக்கும் அஞ்சலி செய்தான். அனைவரும் அவனைப் பாராட்டினார்கள். அடுத்து பிரகலாதனோடும் தன் உற்றார் உறவினரோடும் சுதல லோகத்திற்குப் பலி போனான். 🌺சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்🌺 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
sankariarul May 25, 2020

🌈💟கிருஷ்ண பக்தி கதைகள்🌈💟 🤹ஒரு குட்டி கதை🤹 🌴🌴வாழைக்கு மோக்ஷம்🌴🌴 🌴🌴குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர், பூந்தானம் எனும் பக்தர். 🌴🌴மலையாள மொழியில் குருவாயூரப்பனின் பெருமையைச் சொல்லும் பாடல்களை எழுதியவர் பூந்தானம். சிறந்த கவிஞர். 🌴🌴பாகவத பாராயணம், ப்ரவசனம் செய்து கொண்டே இருப்பார். 🌴🌴ஒருநாள் பூந்தானம் உறங்கும்போது, அவருக்கு ஒரு கனவு வந்தது. 🌴🌴கனவில், வானரதம் வருகிறது. விஷ்ணுதூதர்கள் இருவர் வந்து அவரை வைகுண்டத்திற்கு அழைக்கிறார்கள். 🌴🌴அவர் அவர்களை வரவேற்று ரதத்தில் ஏறுகிறார். ரதம் பல உலகங்களைக் கடந்து, வைகுண்டத்தை அடைகிறது. 🌴🌴அங்கு பக்தி யோகத்தால் பகவானை அடைந்த பலரைப் பார்க்கிறார். 🌴🌴 வைகுண்டத்தின் வாயிலை அடைந்ததும், இருவர் அவரை வரவேற்று வணங்குகின்றனர். 🌴 🌴வைகுண்டத்தில் இருக்கும் நீங்கள் பூஜிக்கப்பட வேண்டியவர்கள், 🌴 🌴என்னை வணங்குகிறீர்களே, நானல்லவோ உங்களை வணங்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்கிறார். 🌴🌴அப்போது அவ்விருவரும், நாங்கள் முந்தைய ஜென்மத்தில் உங்கள் வீட்டில் இரண்டு வாழை மரங்களாக இருந்தோம். 🌴🌴தினமும் உங்கள் பாகவத பாராயணம் கேட்டு, அப்புண்ணியத்தின் பலனாக, 🌴🌴இந்த உன்னதமான நிலையை அடைந்துள்ளோம், 🌴🌴அதனால் நீங்களே எங்கள் குரு, அதனால் வணங்கினோம் என்று கூறினார்கள். 🌴🌴இதைக் கேட்டதும், பூந்தானத்தின் கனவு கலைந்தது. 🌴🌴தூக்கத்திலிருந்து விழித்தார். வீட்டின் வெளியே சென்று பார்க்கும்போது 🌴🌴அங்கே இருந்த இரண்டு வாழைமரங்கள் கீழே விழுந்திருந்தன. 🌴🌴 பகவன் நாமத்தை கேட்பதால் உண்டாகும் பலனைக் கண்கூடாகக் கண்ட பூந்தானம், 🌴🌴 முன்னிலும் தீவிரமாக, பகவானை வணங்கி அவன் நாமத்தைப் பாடினார். 🌺சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்🌺 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
sankariarul May 25, 2020

🌍💜108 திவ்ய தேசங்கள் வரலாறு💜🌍 💝🙏கோவிலுக்கு போலாம் வாங்க.!🙏💝 💟தினம் ஒரு திவ்ய தேசம் -💟 💟உ.வே. ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்...💟 💟16வது திவ்யதேசம்💟 💟பக்தவத்சல ப்பெருமாள் கோவில், திருக்கண்ணமங்கை💟 , ❣️தமிழ்நாட்டில்தி ருவாரூர் மாவட்டத்திலுள்ள, ❣️திருக்கண்ண மங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். ❣️மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். ❣️12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாகத் தொகுத்தளித்த நாதமுனிகளின் மாணவர் திருக்கண்ண மங்கை ஆண்டான், ❣️பெருமாளை வழிப்பட்டு வாழ்ந்த தலம் என்பதால் இவ்வூர் அவரது பெயரால் வழங்கப்படுகிறது. ❣️ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற பக்தவத்சலப்பெருமாள் திருக்கோவில், ♥️திருக்கண்ண மங்கை பெயர்புராண பெயர்(கள்):♥️ 🌷லட்சுமி வனம், ♥️ஸப்தாம்ருத ஷேத்ரம்பெயர்:♥️ 🌷பக்தவத்சல ப்பெருமாள் திருக்கோவில், திருக்கண்ணமங்கை ♥️அமைவிடம்ஊர்: 🌷திருக்கண்ணமங்கை ♥️மாவட்டம்:♥️ 🌷திருவாரூர் ♥️நாடு:♥️ 🌷இந்தியநாடு ♥️தகவல்கள்மூலவர்:♥️ 🌷பக்தவத்சலப் பெருமாள், 🌷பத்தராவிப் பெருமாள் (விஷ்ணுநின்றகோலம்,பிரமாண்ட திருவுருவம்) உற்சவர்: 🌷பெரும் புறக் கடல்தாயார்: 🌷கண்ணமங்கை நாயகிஉற்சவர் ♥️தாயார்:♥️ 🌷அபிஷேகவல்லி ❤️தீர்த்தம்:❤️ 🌷தர்சன புஷ்கரணி ❤️மங்களாசாசன ம்பாடல் வகை:❤️ ♥️நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்மங்களாசாசனம் செய்தவர்கள் 🌷திருமங்கையாழ்வார் ♥️பண்பாடும் வடிவமைப்பு:♥️ 🌷திராவிட கட்டடக்கலை விமானம்:- 🌷உட்பல (உத்பல) ❤️ கல்வெட்டுகள்:-- 🌷உண்டு ❣️மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சலப் பெருமாளைக் கைப்பிடித்த தலம் என்பதால் இவ்விடம் லட்சுமி வனம் என்றும் அழைக்கப்படுகிறது. ❣️சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்கமைந்த புஷ்கரணியில் நீராடி சாபவிமோசனம் பெற்றான் என்பது தொன்நம்பிக்கை. ❣️திருமணக் கோலம் தினசரி காண முனிவர்கள் தேனீ வடிவில் உள்ளனர். ❣️பாத்ம புராணம் 5வது காண்டத்தில் ❣️81 முதல் 87 முடிய உள்ள 7 அத்தியாயங்களில் இத்திருத்தலம் குறித்து கூறப்படுகின்றது. ❣️மூலவரின் ஒரு பெயரான பத்தராவி (பக்தர்+ஆவி) என்பது பக்தர்களுக்கு வேகமாக வந்து அருளுவதால் அமைந்தது. ❣️இக்கோவில் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திலுள்ள திருக்கண்ணமங்கை ஊரில் உள்ளது. ❣️கும்பகோணத்தி லிருந்து சுமார் 25 மைல் தொலைவிலும், ❣️ திருச்சேரை யிலிருந்து சுமார் 15 மைல் தொலைவிலும் ❣️திருவாரூர் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. ❤️மங்களாசாசனம்:--❤️ ❣️திருமங்கையாழ்வார் தனது 14 பாசுரங்களில் இத்தலத்தினை, பாடியுள்ளனர். ❣️பஞ்சகிருஷ்ண தலங்கள் மிழ்நாட்டிலுள்ள தமிழ்நாட்டிலுள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்று. ❣️ஏனைய நான்கு பஞ்சகிருஷ்ண தலங்கள் கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம் ஆகிய ஊர்களிலுள்ள பெருமாள் கோவில்கள் ஆகும். ♥️கோவில்:--♥️ ❣️லோகநாதப் பெருமாள் கோவில்திருக்கண்ணங்குடிகஜேந்திரவரதர் கோவில்கபிஸ்தலம்நீலமேகப்பெருமாள் ❣️கோவில்திரு கண்ணபுரம்பக்தவக்ஷலப்பெருமாள் ❣️கோவில்தி ருக்கண்ணமங்கைஉலகளந்தபெருமாள் ❣️கோவில்திரு க்கோவிலூர் ❣️சப்தமிர்த தலம் இத்தலத்தில், 🌷விமானம் 🌷மண்டபம் 🌷வனம் 🌷ஆறு 🌷கோவில் அமைவிடம் 🌷ஊர் 🌷புஷ்கரணி ❣️ஆகிய ஏழும் மரணமில்லா வாழ்வைத் தரும் அமிர்தத்தின் ❣️சிறப்பைக் கொண்டமைந்துள்ளதால், இத்தலம் சப்தமிர்த தலம் என அழைக்கப்படுகிறது. 💟💝நல்ல கோவில் சுற்றி சுற்றி பாா்த்தீங்களா || ♥️பக்தவத்சலப்பெருமாள்♥️ கும்பிட்டு கொள்ளுங்கள்.💝💟 💟💖சர்வம் கிருஷ்ணார்பணம்💖💟 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 2 शेयर