+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 1 शेयर

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

ஓ மனிதா ! இன்னுமா புத்தி வரவில்லை உனக்கு ? கொடிய கிருமி உலகையே வதைக்கிறது உன் கொடிய வினைகளால். இன்னமும் நீ தீவினைகள் தொடர்ந்து செய்தால் மண்ணுக்குள் மடிந்து மாண்டுவிடப் போகிறாய். ஊரடங்கு தளர்ந்து உழைக்க வழி பிறந்ததும் ஊரையே மீண்டும் குப்பை ஆக்குகிறாய். காவிரியில் கலந்து விட்டாய் கழிவு நீரை கங்கையை கலக்கி விட்டு எச்சில் துப்பி எல்லாம் கழிவு மயம் என்று ஆக்கி விட்டாய். இயற்கை அன்னை இனியும் பொறுக்க மாட்டாள் இறைவன் இனியும் மன்னிக்க மாட்டான். நீ திருந்தப் போவதும் இல்லை தவறுக்கு வருந்தப் போவதுமில்லை. இயற்கை இறைவன் ஜீவன் எல்லாம் சக்தியில் சமம் தான். எதற்கு தீங்கிழைத்தாலும் அதற்கு நீ அனுபவித்தே ஆக வேண்டும். இறைவனின் உடமைகளை கொள்ளையடிப்பதும் இயற்கை வளங்களை சுரண்டுவதும் இதயங்கள் நோகப் பிறரை வருத்துவதும் அப்படியே அதேபோல் அடைய வேண்டும் எதிர்காலத்தில். தப்பு மனிதா ! நீ செய்வது தப்பு. தப்பு செய்யாமல் இதிலிருந்து தப்பு. இல்லையேல் இனி உனக்கு இதையும் விடக் கொடிய இன்னல் இருக்கிறது என்று உணர்ந்து சவக்குழி நீயே தோண்டு. எதை விதைத்தாயோ அதைத்தான் அறுவடை செய்வாய். கொடிய கிருமி வந்தது நீ பிற உயிர்களைக் கொன்றதால் . இனிய அமிர்தம் கிட்டும் இதயத் தூய்மையுடன் இருந்து இறைவனை வழிபட்டால். புரிந்து கொண்டு புனிதமான தெய்வீக நெறி செல்வாய். தெரிந்து தெளிந்து வினைகள் இரண்டையும் வேரறுத்து இயற்கையை சுதந்திரமாக இயங்க விடு. இன்பம் என்பது உன் கையில் நலம் புரிந்து நாளும் அதைப் பெறலாம். துன்பமும் உன் கையில் தீமை புரிந்து தேடாதே அதை. இனி வரும் காலங்களில் இனிய இதயம் கொண்டு இன்னல் நீக்கி இன்பம் பெற இன்றே செய்வாய் நன்றே . என்றே கொள்வாய் உறுதி.

+6 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 1 शेयर

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 2 शेयर