கடவுள் என்பவர் யார் ? கோவில்கள் எல்லாம் ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடிக் கிடக்கின்றன. கடவுள் எங்கே இருக்கிறார் ? இப்போது அவருக்கு பசிக்காதா ? படையல் தேவை இல்லையா ? குளிக்க வேண்டும் என்ற அவசியமில்லையா ? அபிஷேகம் செய்ய வேண்டாமா ? கொரோனா வைரஸை கடவுளால் ஒழிக்க முடியாதா ? அவரிடம் சக்தி இல்லையா ? அல்லது மக்கள் மீது கருணை இல்லையா என்று சில பகுத்தறிவு வாதிகள் அதிமேதாவி போல் தங்களை நினைத்து கொண்டு சமூக வலைத்தளங்களில் கேள்வி கணைகளைத் தொடுத்து ஆஸ்திகனை பதில் சொல்ல முடியாமல் திணற வைத்து விட்டோம் என்று தங்களுக்கு தாங்களே அறிவு ஜீவி என்று பட்டம் வைத்து கொண்டு தற்பெருமை கொள்கின்றனர். இவர்களுக்கு பழங்கால ரிஷிகள் முனிவர்கள் போன்றவர்கள் சொன்ன பதிலை சுருக்கமாக தருகிறோம். முதலில் கடவுள் என்பவர் யார் என்று அறிந்து கொள்வோம். நாம் நினைப்பது போல் கோவில் என்ற ஒரு சிறிய கூண்டில் அடைக்கப்பட்ட கிளி அல்ல. கடவுள் என்பவர் முழு சுதந்திரம் உடையவர். அவர் கோயிலில் தான் இருக்கிறார் தற்போது கொரோனா வைரஸிற்கு பயந்து கொண்டு மூடி விட்டு தன்னை தனிமைப்படுத்தி கொண்டார் என்று வீண் கற்பனை செய்து பார்க்க கூடாது. சுதந்திரமான அந்த கடவுள் எங்கும் இருக்கிறார்.நமக்கு உள்ளே வெளியே என்று எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை கோவில் என்ற சிறிய வட்டத்தில் நாம் அடைக்க முடியாது. தானே கடவுள் அஹம் பிரம்மாஸ்மி என்று ஞானிகள் ரிஷிகள் முனிவர்கள் போன்றவர்கள் உண்மையை உணர்ந்து உலகிற்கு உபதேசித்து சென்று விட்டார்கள். பிறகு கோயில் எதற்காக உண்டாக்கப்பட்டது ? என்று கேட்டால் அகத்தில் இருப்பது தான் புறத்தில் இருக்கிறது. உதாரணமாக நம் உடலில் காற்று இருக்கிறது.பிறகு நாம் மின்விசிறி போட்டு கொள்கிறோம். கரண்ட் கட் ஆனாலும் விசிறி உபயோகிக்கிறோம். ஆகவே நமக்கு உள்ளே காற்று இருந்தாலும் நமக்கு வெளியே இருந்தும் காற்று வர வேண்டும்.அப்போது தான் நாம் உயிர் வாழ முடியும். நமக்கு உள்ளே காற்று இருந்தாலும் சைக்கிள் டியூப் வண்டி டயர்கள் ஆகியவற்றில் காற்று இருந்தால் தான் வண்டியில் பயணம் செய்ய முடியும். அதுபோல நமக்கு உள்ளே கடவுள் இருந்தாலும் நமக்கு வெளியேயும் கடவுள் வழிபாடு செய்தால் தான் ஒரு சமூகம் நன்றாக வளர்ச்சி அடையும். ஆகவே ஆலயம் என்பது மனித சமுகத்தில் நல்ல பண்புகள் கலாச்சாரம் ஒழுக்கம் ஆகியவற்றை நிலைநாட்டி மனிதர்களை நல்வழியில் செல்ல வைக்க வேண்டும் என்று முன்னோர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பயிற்சி கூடம் ஆகும். இங்கே நாம் நமது மனதை பக்குவப்படுத்த பயிற்சி செய்ய வேண்டும்.இங்கே தான் கடவுள் இருக்கிறார் அவருக்கு நாம் அபிஷேகம் செய்து சோறு வைக்க வேண்டும் இல்லை என்றால் அவர் பசியால் இறந்து விடுவார் என்று வீண் கற்பனை செய்ய கூடாது. அபிஷேகம் செய்யும்போது ஆலயம் தூய்மை ஆக இருக்கும்.சாம்பிராணி முதலிய தூபம் போட்டால் அங்கு வாசனை இருக்கும் கிருமிகள் இல்லாமல் போகும்.இவை அனைத்தும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நலனுக்காக வகுக்கப்பட்ட நெறிமுறைகள். நாம் அபிஷேகம் செய்யவில்லை என்றால் கடவுள் அவஸ்தைப்படுவார் என்று தப்புக்கணக்கு போடக் கூடாது. நாம் நைவேத்தியம் செய்து உணவு படைக்கவில்லை என்றால் கடவுள் பசியால் இறந்து விடுவார் என்று நினைக்கக் கூடாது. இறைவனுக்கு நைவேத்தியம் செய்வதன் நோக்கம் என்ன என்றால் அது பிரசாதம் என்று பக்தர்களுக்கு விநியோகம் செய்வதன் மூலம் பிறருக்கு கொடுத்து உணவைப் பகிர்ந்து உண்ண வேண்டும் தான் மட்டும் சாப்பிடக்கூடாது என்ற நல்ல பண்புகளை குழந்தை பருவத்தில் இருந்தே கற்பிக்க வேண்டும் என்று தான் இறைவனுக்கு நைவேத்தியம் செய்து விட்டு பிறகு விநியோகம் செய்யும் வழக்கம் உண்டானது. இப்படி ஆலய வழிபாடு அங்கு உள்ள சம்பிரதாயங்கள் அனைத்தும் நமது நன்மைக்கே.கடவுளுக்கு நம்மால் ஆக வேண்டிய காரியங்கள் எதுவும் இல்லை. எனவே தற்போது மனித சமூகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றால் நாம் தான் ஆலய வழிபாட்டில் சிறிது காலம் விலகி இருக்க வேண்டும் இனிமேல் ஆலயத்தில் தூய்மையை பராமரிக்க வேண்டும்.சமூக இடைவெளி விட்டு தரிசனம் செய்ய வேண்டும் என்ற நல்ல பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். கடவுளால் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாதா அல்லது மக்கள் மீது கடவுளுக்கு கருணை இல்லையா என்று கேட்டால் பதில் இது தான். நாம் செய்த தவறுகளை நாம் தான் திருத்திக்கொள்ள வேண்டும். கிருமி மனிதன் செய்த தவறால் வந்தது. கடவுளுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. கடவுள் கருணை உள்ளவர் என்றாலும் அவரவர் வினைப் பயன்களை அவரவர் அனுபவிக்க தான் வேண்டும். இதேபோல் சுனாமி பூகம்பம் புயல் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் உண்டாவதற்கு மனிதன் தான் காரணம். நாம் இயற்கையை அழித்தால் அது நம்மை அழிக்க தான் செய்யும். இது இறைவன் வகுத்த நியதி. அதற்கு இறைவனும் கட்டுப்பட்டவன். உதாரணமாக சிவன் பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்து எறிந்தார்.அதனால் பிரம்ம ஹத்தி தோஷம் வந்து அந்த தலை பிக்ஷை பாத்திரம் ஆக மாறியது.ஆகவே சிவன் கபாலம் ஏந்தி பிக்ஷை எடுக்க வேண்டும் என்று ஆகிவிட்டது. இவ்வாறு இறைவனும் விதிக்கு உட்பட்ட ஒருவன் என்றால் மற்ற ஜீவராசிகள் விதியை வெல்ல முடியுமா ? ஆகவே இன்று ஆலயங்கள் மூடிக் கிடப்பதை பார்த்து இறைவனை சக்தி இல்லாதவன் என்று தவறாகக் கருதக்கூடாது. நம்மை நாம் தான் பக்குவம் செய்து கொள்ள வேண்டும்.அதற்கு தான் ஆலயமே தவிர அது தான் இறைவன் இருக்கும் இடம் என்று குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்க கூடாது. எனவே தேவை இல்லாத கேள்வி பதில் போன்ற ஆராய்ச்சிகளை விட்டு விட்டு நம்மை சரி செய்வோம். நலம் பெறுவோம். வாழ்க வளமுடன்.

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

கல்லை வணங்குகிறார்கள் என்று கேலியும் கிண்டலும் செய்யும் அனைவருக்கும் இது சமர்ப்பணம்!!!! பிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி? - ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல. கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற் சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது. அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள். கல் ஒன்று கடவுளாக மாறும் வழிமுறையைதான் இங்கு காணவிருக்கிறோம். சிலைகளை ஸ்தாபிக்கும் அந்த தெய்வீக வழிமுறைகளைப் பற்றி கீர்த்திவர்மன் ஸ்தபதி அவர்கள் கூறும்போது "சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது. அதாவது 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும். ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும். இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம். இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும். அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம். 48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள். அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்ய வாசம். இதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம். ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம். பின்னர் பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தன வாசம். பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்யும். இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகா மஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்கொள்ளப்படுகிறது. எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது. சரி... ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும். நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும். தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்து விடும். அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். அதைப்போல தான் ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும். அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும். 6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வ சிலைகளின் கண்கள், பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான் திறக்கப்படும்..." என்றார். தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்யும் முறையைப்பற்றி சுந்தரேச சர்மா சிவாச்சாரியார் அவர்கள் கூறும்போது "இன்றும் தெய்வ சிலைகள் வடிக்கப்பட்டப்பின்னர் அவை ஒரு நாளில் ஜலவாசம், தான்யவாசம் எனும் அறிவியல் முறையிலான ஐதீகப்படி வைத்து குளிர், உஷ்ணம் இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்கு கொண்டு வருவார்கள். இதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது. அதன்பிறகு, 7 நாட்கள் வரை புஷ்பாதி வாசத்தில் சிலையை வைக்கிறார்கள். பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை இருக்கும்போது, அந்த சிலைக்கு வாசம் மட்டுமில்லாது மலர்களின் சத்தும் ஊறி, அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறுகிறது. புஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது. நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள். இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது. தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது. அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது. பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது. ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த காரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார். கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது" என்றார். கல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை. அதுவே இத்தனை இத்தனை புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் தான் அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது. மனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன. நன்றி,

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

மனிதர்கள் மூன்று வகை உண்டு., 1.கஜ கர்ணம்🐘 2.அஜ கர்ணம்🐏 3.கோ கர்ணம்🐂 ****** 1. கஜகர்ணம் : - யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது! அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல், பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்புவார்கள்... அவர்களை 'கஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் . 2. அஜகர்ணம் : - ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையைத் தொங்கப்போடும். அதுபோல மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுப்பார்கள்.... திரும்பிப் பார்க்க மாட்டார்கள். அவர்களை 'அஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் . 3.கோகர்ணம் :- பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும், அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும் ! அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள் . இவர்களை 'கோகர்ணம் 'போடுபவர்கள் என்று அழைக்கிறோம். -கிருபானந்த வாரியார் சுவாமிகள். [25/5, 7:55 AM] Boopathy: 🆎விளக்கு ஏற்றினால் தீரும் பிரச்சனைகள்...!! 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ பாலா ✍️🕉️ 25-05-2020 🌟 தீப கதிர் வீச்சு சுற்றுப்புறத்தில் காந்த சக்தியினை காற்றில் சேர்க்கும். இக்காற்று மனித உடலிலும், மனதிலும் நல்ல ஆக்கப்பூர்வ மாற்றங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகின்றது. 🌟 குறிப்பாக பசு நெய் தீபத்திற்கு இப்புனித தன்மை மிகக் கூடுதலாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. 🌟 நெய் தீபம் ஏற்றினால் உடல் நலம், மனவளம், தீய சக்தி விலகுதல், மகாலட்சுமி கடாட்சம் போன்றவற்றிக்கு உகந்ததாகக் கூறுகின்றனர். 🌟 நல்லெண்ணெயால் ஏற்றப்படும் தீபத்தினால் அனைத்து தோஷங்களும், தீய சக்திகளும் நீங்குகின்றது. மேலும் நீண்ட கால தீராத பிரச்சனைகளை உடையவர்கள், பூர்வ ஜென்ம கர்மங்களால் பாதிக்கப்படுபவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம், சனி போன்றவற்றின் பாதிப்பில் உள்ளவர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. 🌟 வேப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் குலதெய்வ வழிபாடு, பராசக்தி வழிபாட்டிற்கு உகந்தது. சத்ருக்களால் பாதிக்கப்படுபவர்கள் அமாவாசை அன்று வேப்ப எண்ணெயில் 8 விளக்கேற்றி பைரவரை வழிபடலாம். 🌟 விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றினால் குடும்ப வளம், குடும்ப உறவுகள் ஒற்றுமை ஆகியவை உண்டாகும். 🌟 தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றினால் பிள்ளையாரின் ஆசீர்வாதம் கிடைக்கும் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். 🌟 பஞ்சதீப எண்ணெயில் ஏற்றப்படும் தீபம் கண்திருஷ்டி, வறுமை, நோய் ஆகியவற்றை நீங்கும். 🌟 பொதுவாக நெய் தீபமும், நல்லெண்ணெய் தீபமும் வீடுகளில் ஏற்றுவது நடைமுறையில் உள்ளது. 🌟 கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் ஒருவரை இந்திரன் போல் ஆக்கிவிடுமாம். 🌟 மேற்கு நோக்கி தீபம் ஏற்றினால் கடன்தொல்லை, சனி தோஷம் நீங்கும். 🌟 வடக்கு நோக்கி தீபம் ஏற்றினால் திருமண தடைகளை நீங்கும். 🌟 தெற்கு நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது. 🌟 மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும். 🌟 வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் திருமகள் வாசம் செய்வாள். 🌟 பஞ்சலோக விளக்கில் தீபம் ஏற்றினால் தேவதை வசியமாகும். 🌟 வெண்கல விளக்கில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும். 🌟 இரும்பு விளக்கினால் தீபம் ஏற்றினால் சனி தோஷம் நீங்கும். 🌟 சூரியகாந்தி எண்ணெய் மற்றும் கடலைஎண்ணெய்யில் விளக்கேற்றக்கூடாது. இதனால் கடன் தொல்லை அதிகரித்து நிதி நிலையில் பற்றாக்குறை ஏற்படும். 🌟 குத்து விளக்கினை நடு முற்றத்தில் போட்ட கோலத்தின் மீது வைத்து சந்தனம், குங்குமம் இட்டு மஞ்சள் திரி கொண்டு நெய் ஊற்றி விளக்கேற்றி, பூ சுற்றி வழிபட வறுமை நீங்கும். [25/5, 10:19 AM] Boopathy: *சஞ்சீவினி இரகசியம்* ( *Secret of Sanjeevini* ) ஸ்வாமி ரிஷியோகி அவர்களோடு நாங்கள் பயணித்த இனிய காலகட்டத்தில் பல அற்புதங்களை காணும் பாக்கியங்களை பெற்றோம். அதில் ஒன்றுதான் *'சஞ்சீவினி இரகசியம்'* தமிழகத்தில் மூலிகைகளுக்கு பெயர்பெற்ற பகுதியது. அங்கு எங்களை அழைத்து சென்ற ஸ்வாமி ரிஷியோகி அவர்கள், எங்களுக்கு அந்த பெரியவரை அறிமுகம் செய்து வைத்தபோது யாரோ ஒரு அம்பாள் உபாசகர் அல்லது பக்தர் என்றுதான் நாங்கள் நினைத்தோம். ஸ்வாமிஜி, 'உங்களை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று தனது பார்வையாலேயே அவருக்கு குறிப்பை தர எங்கள் முன்னால் ஒரு எலுமிச்சை கனியையும் கூர்மையான ஒரு அரிவாளையும் எடுத்து வைத்தார். எங்களை எலுமிச்சையின் மீது அரிவாளின் கூர்மையான பக்கத்தை வைக்கக்கூறினார். எலுமிச்சையின் மீது அரிவாளை வைத்ததுதான் மாயம் எலுமிச்சை இரண்டாக பிளந்தது. அந்த அரிவாளின் கூர்மை அந்தளவு இருந்தது. அந்த அரிவாளை எடுத்து தனது வயிற்றை அவர் சரசரவென்று வெட்டிக் கொண்டார். ஆனால், வயிற்றில் வெட்டியதன் அடையாளமாக கோடுமட்டும் உருவாகியிருந்தது. சிறு காயமில்லை. துளி இரத்தம் இல்லை. ஆச்சரியத்தோடு நாங்கள் அதை பார்த்து கொண்டிருந்தோம். பிறகு திருநீற்றைக் கொண்டு சில விந்தைகளை நிகழ்த்தி எங்களது எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதையும் கூறினார். 'நீங்கள் மிகப் பெரிய விஷயங்களை அடையப் போகிறீர்கள். உலகத்தில் நல்லவர்களுக்கு கவசமாக நீங்கள் இருப்பீர்கள். தர்மத்தை ஸ்தாபிப்பீர்கள்' என்றார். ஸ்வாமிஜியைப் பார்த்து இப்படிக் கூறியவர். எங்களது மனதில் இருந்த பல ஐயங்களுக்கும் விடைகூறினார். 'இதையெல்லாம் நானா சொல்லல இங்கிருக்கிறவ காட்டித்தர்றா..' என்று தனது தொடைப் பகுதியை காட்டினார். எங்களுக்கு புரியவில்லை. விளக்கம் தந்தார் ரிஷி யோகி, "அங்குதான் அவர் சஞ்சீவி மூலிகையை தைத்து வைத்திருக்கிறார். சஞ்சீவினி காளியம்சம் என்பதால் அப்படி கூறுகிறார்." என்றார். (மேலும் நடந்த பல நிகழ்வுகளை வேறொரு சந்தர்ப்பத்தில் கூறுகிறோம்.) நாங்கள் அவரிடம் விடைபெற்றுத் திரும்பினோம். சஞ்சீவினியை வைத்திருக்கும் ஒருவரை அறிந்துகொண்ட மகிழ்ச்சியும் பிரமிப்பும் எங்களுக்குள் வெகுகாலம் இருந்தது. திரும்பி வரும்போது ஸ்வாமிஜி என்னிடம் கூறினார்‌. "குருவின் அருள் இருந்தால் சஞ்சீவினி மூலிகையை விட சக்தி வாய்ந்ததை அடைய இயலும்" இந்த நிகழ்வு நடந்து சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு, ஒருநாள் அடியேனுக்கும் இன்னும் இருவருக்கும் 'யோக சஞ்சீவினி' வழங்கப்பட்டது. அந்த அனுபவத்தை வெறும் வார்த்தையால் விவரிக்க இயலாது. சஞ்சீவினி சதாசிவனின் கருணையால் யோகசஞ்சீவினியாக வழங்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த காணொளியில் விவரித்துள்ளேன். காணுங்கள். யோக சஞ்சீவினியை பெற தொடர்பு கொள்ளுங்கள்.. கிருஷ்ணதாசர், (குரு சேவகர்) சிவன் இராஜ யோகம் 9361062620

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 5 शेयर

பிராமண சாபத்திற்கு பரிகாரம்/பிராயச்சித்தம் இல்லை கீழே படிக்கவும் 👇🏿👇🏿👇🏿 ஶ்ரீபாகவத மஹா புராணம் : ஸ்கந்தம்--10. அத்யாயம்--64. ஸ்லோகங்கள்--1 to 42. இக்ஷ்வாகு குல அரசன் நிருகன், ஒரே பசுவை இரண்டு பிராமணர்களுக்கு தெரியாமல் கொடுத்ததினால், ஓணானாக பிறக்க நேரிட்டது பகவான் ஶ்ரீகிருஷ்ணனால் சாப விமோசனம் ஏற்பட்டது அப்போது பகவான் ஶ்ரீகிருஷ்ணர் யாதவர்களுக்குச் செய்த உபதேசம் : 1.அக்னியைப் போல திறமை உடையவன் ஆனாலும், ஒரு பிராமணரின் பொருளை சிறிதளவு அனுபவித்து இருந்தாலும், அதை அவனால் செரிக்க முடியாது. 2.ஆலகால விஷத்தை நான் விஷமாகக் கருதவில்லை.அதன் வலிமை / வீர்யத்தை மாற்ற, மாற்று மருந்து, அதாவது antidote உண்டு ஆனால், பிராமணரின் சொத்தே பெரும் விஷம் என்பர் ஏனெனில், உலகில் அதற்கு மாற்று மருந்து எதுவும் இல்லை. 3.விஷம் உண்டவனை மட்டுமே அழிக்கும்.நெருப்பு தண்ணீரால் தணியும். பிராமணரின் சொத்து என்பது அரணியைக் கடைந்து எடுத்த நெருப்பு / பெரு நெருப்பு அது குலத்தை வேருடன் எரித்து விடும். நெருப்பு நிலத்திற்கு மேல் உள்ளதை எரிக்கிறது.ஆனால், பிராமணரின் சொத்து என்ற நெருப்பு, நிலத்தடி வேரையும் எரிக்கும் திறன் கொண்டது 4.தெரியாமல், அனுமதி பெறாமல் அனுபவிக்கப்படும் பிராமணர் சொத்து, மூன்று தலைமுறை வரைதான் அழிக்கும் ஆனால், பலாத்காரமாக, பறிக்கப்பட்டு அனுபவித்தால், அது நம் தந்தையார் முதல் முந்திய பத்து முன்னோர்களின் தலைமுறைகளையும், நம் மகன் முதல் பின் வரும் பத்து தலைமுறைகளையும் அழிக்கும் அதாவது, மொத்தம் 10 + 1 + 10 = 21 தலைமுறைகளை அழிக்கும் 5.தன் பொருளை பிறருக்கு வாரி வழங்குகின்ற குடும்பிகளான பிராமணர்கள்---தங்கள் உடைமைகளை இழந்து, வாடி வருந்தும்போது, அவர்களது கண்களிலிருந்து பெருகுகின்ற கண்ணீர்த்துளிகள் நிலத்தில் விழுந்து, எந்த அளவு மண் துளிகளை நனைக்கின்றனவோ, அத்தனை வருஷங்கள்--- அவரது சொத்துக்களை தர்ம நெறி தவறிப் பறித்த அரசர்களும், அவரது குடும்பத்தவரும் தடை இல்லாமல், கும்பீபாக நரகத்தில் வீழ்ந்து துன்புறுவர் 6.தானே முன் அளித்ததாயினும், பிறர் அளித்ததாயினும், பிராமணரின் வாழ்க்கைக்கு உதவுகிற உடைமைகளைப் பறிப்பவன், 60,000 வருஷங்கள் மலப்புழுவாக நெளிவான் 7.நான் பெரிதும் விரும்புவது, என் பொக்கிஷத்தில், பிராமணர்களின் செல்வம் தவறியும் கலக்கக் கூடாது என்பதே பேராசையினால் அதைப் பறிக்க நினைப்பவன்--- ஆயுள் குன்றி, பதவி அல்லது ராஜ்யத்தை இழந்து, நாடு கடத்தப்பட்டு தவிப்பார்கள் மறு பிறவியில் கொடும் பாம்புகளாகப் பிறப்பார்கள் 8.யாதவர்களே ! என்னைச் சார்ந்த பிராமணர்கள் தவறு செய்திருந்தாலும், அவரிடம் பகை / விரோதம் பாராட்டாதீர்கள் கொல்ல வந்தாலும், வெகுவாக சபித்தாலும் அவர்களை தினமும் வணங்குங்கள் 9.நான் எவ்வாறு ஒன்றுபட்டு கவனத்துடன் மூன்று வேளையும் பிராமணர்களை வணங்குகிறேனோ, அவ்வாறு நீங்களும் வணங்குங்கள். இதில் தவறுபவர்கள் எனது தண்டனைக்கு உரியவர்களே. ஆதாரம் : ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம், Volume----3, ஸ்கந்தம்---10, அத்தியாயம்---64, ஸ்லோகம்----1 to 42. பக்கம்---443 to 449. Gita Press, Gorakhpur publication.

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 6 शेयर

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 1 शेयर

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

*இந்து மதத்தைப் பெருமை படுத்திய கலாம்*🚩 🙏Ⓜ️🙏🌀🙏🌀🙏🌀🙏🌀🙏🚩 சிவனைப் பற்றி அப்துல் கலாம் கூறியவை :- இந்திய விஞ்ஞானிகள் உட்பட கடவுள் துகள் என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்து பல நூறு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த ஆராய்சியின் நோக்கம் பூமி எப்படி உருவானது என்பது தான். அதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். உலக நாடுகள் அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்சியை மேற்க்கொள்ளக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் இந்த ஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத் தோண்டும் போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர். உடனடியாக விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை வைத்து ஆராய்சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார், ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க...?! அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவத்திலேயே இந்த உலகம் இயங்குகிறது. மேலும் தமிழ்ப் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பாதக கூறினார். விஞ்ஞானிகள் 1938 ஆம் ஆண்டு தான் அணுவையே கண்டறிந்தனர். அதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார், மேலும் இந்த உலகத்தைப் படைத்தது சிவபெருமான் தான் அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார். அவர் கூறியபடியே, அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப் போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல் பரிசையும் தட்டிச் சென்றுள்ளனர் அந்த ஆய்வை செய்த விஞ்ஞானிகள் அன்புடன் Mg.🙏🚩

+6 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 32 शेयर