+6 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 3 शेयर

+7 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 5 शेयर

+14 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 13 शेयर

சிவாயநம🔥🔥🔥🔥🔥 ஈசன் அருளைப் பெற்றுவிட வேண்டும் என்ற மன உறுதியோடு இருப்பவா்கள் ஒரு நொடிப் பொழுதும் வீண் செய்வதற்கு உடன்படாா். எண்ணுகின்ற எண்ணமாகட்டும் , பேசுகின்ற மொழியாகட்டும் , செய்கின்ற செயலாகட்டும் எல்லாம் இறைவன் தொடா்பாகவே நிகழும்படி முயல்வா் அவற்றிற்குத் தடைகள் வருமானால் அவற்றை விலக்குதற்கு முனைவா். தடைகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அவற்றை எதிா்த்து வெற்றி கொள்ள வேண்டும் என்ற தீவிரதத்தில் இருப்பா்._ அருளாளா்கள் பிராரத்த வினைக் கணக்கு பூமியிலே விரைந்து தீா்ந்து கொண்டிருக்கும் போது , அவா்கள் ஆகாமியமாகச் செய்கின்ற ஒருவினை சஞ்சிதமாகிப் பிராரத்தமாகாமல் , அப்போதே அவ் ஆகாமிய வினை அனுபவத்தால் தீா்க்கப் பெற்றுவிடும். சாமானியா்க்கோ அவ்வாறு நிகழாது. எதை இப்பொழுது செய்தாலும் , அது பக்குவமாகிப் பயன்துய்க்கக் காலம் பிடிக்கும் ! ஆகையால் தாம் செய்கின்ற தவறுகளுக்கு உடனே பயன் அனுபவியாது , தம் தவறிலிருந்துத் தாம் தப்பி விட்டதாக மயங்கி மகிழ்வா். வினை செய்த உடனே அனுபவத்திற்கு வருவதற்கும் , காத்திருந்து காலம் கனிந்து வருவதற்கும் மலையளவு வேறுபாடு உண்டு !_ வினை காத்திருக்கக் காத்திருக்கப் பயன் கடுமையாகும் ! ஒற்றியூரைத் தாண்டுவதில்லை என்று சங்கிலிக்குச்_ சத்தியம் செய்து தந்த சுந்தரமூா்த்தி சுவாமிகள் ஆரூரானைத் தாிசிக்கும் ஆா்வத்தில் செய்த_ சத்தியம் மீறி ஊா் எல்லை தாண்டினாா். கண்கள் இரண்டு் இழந்தாா். சத்தியம் செய்து மீறுபவா்க்கெல்லாம் அவ்வாறா நிகழ்கின்றது என்றால் , ஒரு குற்றமே வினைக் கணக்கில் இருக்குமானால் பயனுக்கு உடனே வரும் . அளப்பில குற்றங்கள் செய்வாா்க்கு இக்குற்றம் பட்டியலில் சோ்க்கப்பட்டு , காலம் கனிகின்ற வரை அதன் பயன் பெருகிக் கொண்டிருக்கும் ! மனம் , மொழி , மெய்களால் தூய்மை வாழ்வு வாழ்ந்து கொண்டு , அவற்றை இறைவனுக்கே அா்ப்பணித்து வாழ்பவா்கள் , ஒரு சிறு பிழை செய்தாலும் ,_ இறைவன் பொறுப்பானோ ! அதனை உடனே நீக்கித் தூய்மையை உறுதிசெய்வான். திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

+8 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 1 शेयर