நிர்வாணம் என்பது கண்களுக்கு தெரிந்த ஸ்தூல உடல் நீக்குவது மட்டுமல்லாது கண்களுக்குத் தெரியாத அத்தனை சூட்சும உடலையும் நீக்குதல் நிர்வாணம் ஆகும்.சமாதி என்பது சமம்+ஆதி=சமாதி ஆகும். நிர்வாணம் அல்லது சமாதி என்பது நமக்குள் இருக்கின்ற இயற்கை மலமாகிய மும்மலமும் முற்றிலும் அழிந்து சிவம் சிவன் தன்மையை அடைந்தால் தான் சமாதி என்னும் நிர்வாணத்தை அடைய இயலும். சிவனை வழிபட வழிபட்ட சிவன் சார்ந்த அறிவினை பெறப்பெற மும்மலம் ஆகிய இயற்கை மலமானது மிக வேகமாக அழிந்து ஒழிக்கப்படும். இந்த உலகில் எல்லா ஆன்மீக மார்க்கமே அதன் அதன் தன்மையில் கடினமாகத்தான் இருக்கும். அதற்காக அனைவரும் அடைந்தே ஆக வேண்டிய இலக்கினை அடையாமல் இருக்க முடியாது. மோட்சம் என்னும் பிரம்மலோகமோ, முத்தி என்னும் வைகுண்ட மோ, கயிலாயமோ, மீண்டும் பிறவா பேரின்ப பெரு விட்டையோ அடைந்தே ஆகவேண்டும் என்ற இலக்கு இல்லை. அவை ஆன்மீகத்தின் பல படிநிலைகள் ஆகும். ஆனால் நிர்வாணம் என்னும் சமாதியை அடைந்தே தீரவேண்டும்.

+3 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 0 शेयर

🌺🌺#அன்பு_குழந்தையே..…… வாழ்வில் நடக்கும் இன்ப துன்பங்களை உள்ளது உள்ளபடி ஏற்கும் மனப்பான்மையை முழுமையாக வளர்த்துக் கொள். நீ எந்நேரமும் கவலைகளாலும் விரக்தியிலும் மூழ்கியே இருப்பதால் தான் உன்னுடைய கடமைகளில் கவனம் சிதறுகின்றது. எப்பொழுதும் வீழ்ந்து கொண்டே இருக்கிறோமே என்று அருவிகளோ, காலையில் பூத்து மாலையில் வாடி விடுவோமே என்று மலர்களோ வருந்துவதில்லை.. வீழ்ந்த அருவியே அகண்ட ஆறாக நம் வாழ்வதற்க்கு தேவையான வற்றாத ஜீவநதியாக ஒடுகிறது. ஒரு நாள் மட்டுமே பூத்தாலும் அப்பூக்கள் தான் இறைவன் அடி சேருகிறது. எனவே, நான் அடிக்கடி கூறுவது இங்கு எதுவும் நிரந்தரம் அல்ல. எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள். இவ்வுலகம் நம்மை எப்படி பார்க்குமோ என்று வருந்தாதே இங்கு உள்ளவர்களின் பார்வைக்கு நீ விளக்கம் அளிக்க முடியாது. சிலர் உன்னை திமிர் பிடித்தவர், கெட்ட எண்ணம் உடையவர் என்றும், சிலர் உன்னை அற்புதமானவர், அன்பானவர் என்றும் கூறுவார்கள். யார் எதைக் கூறினாலும் நீ உன் வாழ்வில் நேர்மையாகவும் உண்மையாகவும் இரு. உன் உழைப்பு என்றும் வீணாகாது. வாழ்க்கையில் முன்னேற வேண்டுமேயானால் உன்னைப் பற்றிய மற்றவர்களின் மதிப்பீடுகளில் இருந்து, உன்னை மேம்படுத்த தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாதே... உனக்கு தேவையற்ற வீண் சொற்களை மனதில் இருந்து அழித்து விடு. அச் சொற்களை உன் மனதில் தேக்கி வைத்து உன் வளர்ச்சிக்கு நீயே தடையாக இருக்காதே. கவலைபடாதே நான் இருக்கிறேன் உன்னோடு என்றும் என்றென்றும். நல்லதே நடக்கும்.. நீ என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை. #ஓம்_ஸ்ரீ_சாய்_ராம்...……🌾🌾🌺🌾

+8 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 9 शेयर

*நாம் சொர்க்கத்தை அடைய முடியும்...* இந்த பணம் புழுவுக்கு சமம் என்றால்.. பணத்தை புழுவுக்கு சமமாக மதிக்கும் பக்குவத்தைப் பெற வேண்டும். அதற்கு ஏதாவது வழியிருக்கிறதா என்றால், நிச்சயமாக இருக்கிறது. அதுதான் ஜானஸ்ருதி என்ற மன்னனின் கதை. இந்த மன்னன் தான தர்மத்தில் உயர்ந்தவன். பகல் முழுக்க தானம் செய்வான். இரவானால், உப்பரிகையில் போய் படுத்துக் கொள்வான். இவன் தானம் செய்ய செய்ய, புண்ணியத்தின் அளவு உயர்ந்து கொண்டே போனது. ஒருநாள், இவன் உப்பரிகையில் நிலா வெளிச்சத்தில் படுத்திருந்தான். அப்போது, இரண்டு அன்னப் பறவைகள் பேசியபடியே பறந்தன, பறவைகளின் மொழி இவனுக்கு தெரியும். ஒரு அன்னம், இன்னொன்றிடம்,இதோ படுத்திருக்கிறானே, ஜானஸ்ருதி. இவனைப் போன்ற புண்ணியவான் யாருமில்லை, என்றது. இன்னொன்று அதனிடம்,என்ன பெரிசா புண்ணியம் பண்ணிட்டான், இவனுக்கு மறுபிறவி உறுதி. என்ன தான் இருந்தாலும் நம்ம ரைக்வருக்கு இவன் ஈடாவானா? என்றது. ஜானஸ்ருதி எழுந்துவிட்டான். தன்னை விட ஒரு புண்ணிய ஆத்மாவா! அவர் நம்மை விட கூடுதல் தானம் செய்திருப்பாரோ! ஒருவேளை, ராத்திரி கூட தானம் செய்வார் போலிருக்கிறது! எதற்கு சந்தேகம்! அவரைப் பார்த்து விட்டால் விஷயம் தெரிந்து விடப்போகிறது! ஏவலர்களை அழைத்தான். ரைக்வர் எங்கிருக்கிறார் என விசாரித்து வரச்சொன்னான். அவர்களும் ஊர் ஊராக சுற்றினார்கள். ஒரு கிராமத்தில், ரைக்வர் என்ற பெயரில், ஒரு தொழுநோயாளி படுத்துக் கிடந்தார். உடம்பெல்லாம் புழுக்கள் நெளிந்தன. ஊர் மக்களிடம் விசாரித்தார்கள். எங்களுக்கு தெரிந்து இவர் பெயர் தான் ரைக்வர். இவரைத் தவிர வேறு யாரும் அந்தப் பெயரில் இல்லை, என்றனர் மக்கள். ஏவலர்கள் மன்னனிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அவனுக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம். யாராயிருந்தால் என்ன! பார்த்து விடுவோம் என தங்கத் தாம்பாளம் ஏழில் நவரத்தினங்களை அள்ளி வைத்து பயபக்தியோடு அவரருகே சென்றான். சுவாமி! நான் இந்நாட்டு மன்னன் ஜானஸ்ருதி. இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், என்றான். ரைக்வர் எழுந்தார். தன் உடலில் இருந்து ஒரு புழுவை எடுத்து கீழே போட்டார். மன்னா! உனக்கு இந்தப் பொருட்கள் பெரிதாக இருக்கலாம். ஆனால், எனக்கு இது இந்த புழுவுக்கு சமமானது, என்றார். அப்படியா! இந்த ஐஸ்வர்யத்தை புழுவுக்கு சமமாக மதிக்கிற ஒரு நிலை கூட இருக்கிறதா சுவாமி என்றான் அவன். ஏனில்லை! அந்த நிலையை அடைய வேண்டுமானால், நீ இந்த பதவியையே உதறிவிட்டு வர வேண்டும். வருவாயா? என்றார். மன்னன் உடனடியாக பதவியைத் துறந்து விட்டு, அவரிடம் உபதேசம் பெற்றான். அவ்வாறு அவன் பெற்ற உபதேசம் என்ன தெரியுமா? நரசிம்மரை வழிபடும் முறையை அவர் உபதேசித்தார். அவனும் நரசிம்மரை வழிபட்டு மோட்சத்தை அடைந்து விட்டான். அவன் செய்த தானத்தின் அளவிற்கு அவனுக்கு குபேர பதவி கூட கிடைக்கும். ஆனால், தவறேதும் நிகழ்ந்தால், மீண்டும் பிறக்க நேரிடும். ஆனால், இப்போது கிடைத்த சொர்க்க பதவியோ, இறைவனின் அருகிலேயே இருக்கக்கூடிய பெரிய பதவி. பணத்தை யாரொருவர் புழுவாக எண்ணி, இறைவழிபாட்டில் இறங்குகிறானோ அவனே சொர்க்கத்தை அடைய முடியும் என்பது இந்தக் கதை காட்டும் நீதி. *நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”* *ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!*

+6 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

⚽⚽⚽எல்லா உலகத்திலும், எல்லாக் காலத்திலும் சஞ்சரிக்கும் ஆற்றல் பெற்றவரான நாரதர், ஒரு சமயம் பூலோகத்திற்கு வந்திருந்தார். ஒவ்வொரு இடமாக சுற்றிப் பார்த்துக்கொண்டே வந்தவர், கால் பந்தாட்ட மைதானம் ஒன்றில் பலர் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். இரண்டு பக்கத்திலும் இருந்தவர்களுக்கு இடையே ஒரு பந்து மாறி மாறி உதைபட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த அவருக்கு வேடிக்கையாக இருந்தது. கால் பந்துக்குள் அடைப்பட்டிருந்த கால் அதாவது காற்று இங்கும் அங்கும் அடிபட்டுக் கதறுவதாகத் தோன்றியது நாரதருக்கு. கொஞ்ச நேரம் விளையாட்டை ரசித்துவிட்டு வேறு இடத்துக்குப் போனார். அங்கே புல்லாங்குழல் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. மேடையில் இருந்த இசைக்கலைஞர் ஆழ்ந்து வாசிக்க, குழலில் இருந்து வெளிப்பட்ட இசையை பெரும் கூட்டம் மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தது. இப்போது நாரதருக்கு ஒரு சந்தேகம் வந்தது. முதலில் பார்த்த கால்பந்தாட்டத்தில் பந்துக்குள் இருந்ததும் காற்றுதான். இங்கே புல்லாக்குழலில் இருந்து வெளிப்படுவதும் காற்றுதான். ஆனால் அங்கே அது உதைபடுகிறது. இங்கே ரசிக்கப்படுகிறது. ஏன் இந்த நிலை? நாரதருக்கு சந்தேகம் வந்தால் எங்கே போவார்? வேறு எங்கே, வைகுந்தம்தான். அங்கே போய் திருமாலைப் பார்த்தார். திருமகளும் அவள் நாயகனும் என்ன என்பதுபோல் பார்க்க, திருதிரு என்று விழித்தபடியே தன் சந்தேகத்தைச் சொன்னார், நாரதர். புன்னகைத்தார், புருஷோத்தமன். நாரதா, கால்பந்து, காற்றைத் தனக்கு மட்டுமே சொந்தமாக உள்ளேயே அடைத்து வைத்துக்கொண்டது. அதனால் அது உதைபடுகிறது. ஆனால், புல்லாங்குழல் தனக்குள் வரும் காற்றை, சுயநலமாகத் தானே வைத்துக்கொள்ளாமல் பிறருடன் பகிர்ந்து கொள்கிறது. அதனால் அது ரசிக்கப்படுகிறது! புரிந்ததா? என்று சொல்லிச் சிரித்தார். நாதா, சுயநலத்தோடு சேர்ப்பவை வெறுக்கப்படும், கிடைப்பதை பிறரோடு பங்கிட்டுக் கொள்வது ரசிக்கப்படும் என்ற நீதியை உங்கள் திருவாயால் கூறவேண்டும்; அது மக்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காகவே நாரதன் இப்படி ஒரு சந்தேகத்தை உங்களிடம் கேட்டிருக்கிறான்! அப்படித்தானே நாரதா? கேட்ட மகாலட்சுமியைப் பார்த்து ஆம் தாயே என்பதுபோல் தலையசைத்துவிட்டு நகர்ந்தார், நாரதர்.🎺🎺🎺

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 1 शेयर

வாலை தெய்வம் தாய் சித்தர்கள் வாலை பற்றி என்ன கூறுகிறார்கள்? மகான்களும் யோகிகளும் ஒருபோதும் மறைவதில்லை, தமது உடலை ஆடைகளை களைவதை போல களைந்து சூக்கும உடலோடு சிவனுடன் ஒன்றி வாழ்கின்றனர். இதனையே திருமூலர் "யோக சமாதி உகந்தவர் சித்தரே"என்கிறார். இன்றைய காலகட்டத்தில் பல பேர் தனது பெயருக்கு முன்பு ஸ்ரீ, ஸ்ரீலஸ்ரீ, வாலை என்றும், பெயருக்கு பின்னால் சித்தர் என்றும் பட்டங்களை போட்டுக்கொண்டு அலைவதை மக்களை ஏமாற்றி பிழைப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். அவர்களுக்கே தெரியுமோ தெரியாதோ வாலையை சித்தி செய்த ஒருவன் ஒரு மஹா சித்தர் ஆகிவிடலாம். நாம் போற்றி வணங்கும் பதினென் சித்தர், நவ நாத சித்தர் தொட்டு கடந்த நூற்றாண்டு தோன்றிய கடைப்பிள்ளை சித்தர் வரை வாலை சித்தி செய்துதான் பல சித்துக்களை உலகத்துக்கு செய்து கட்டினர். வாலை சித்தி பெற்ற தவசீலர்கள் அடையாத பலன்கள் உலகில் எதுவுமில்லை, சகல காரிய சித்தி, ரசம், ரசாயனம், அஞ்சனம், பாதுகா சாதனம், மூலிகை, குளிகை, கட்சம், சரஸ்வதம், முதலிய சித்துகளும் அணிமா, மகிமா, லகிமா, கிரிமா, ஈஸித்வம், வசித்வம், பகுரூப சித்தி, சுரூப சித்தி என்னும் அஷ்ட மஹா சித்தி பெற்று சித்தனுக்கு சித்தனாய் பெரும் புகழ் பெற்று இம்மை இன்பத்தை அனுபவித்து தேவி சயுச்யம் அடைவார் என சாஸ்திரங்கள் உரைக்கின்றன. இன்று பெயருக்கு முன் வாலை என்றும் சித்தர் என்றும் போட்டு கொள்ளும் நபர்கள் மேலே சாஸ்திரம் சொல்லும் ஒரு சித்தினையாவது செய்து காட்ட இயலுமா? இவையெல்லாம் மக்களை ஏமாற்றும் தந்திரம் என்று வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நம்முடனேயே தற்கலத்தில் வாழ்ந்த ரமண மகரிஷி, யோகிராம் சுரத் குமார், ஓஷோ, யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி, சச்சிதானந்த சுவாமிகள் முதல் இன்று வரை வாழ்ந்து வரும் பல சித்திகளை பெற்ற மஹா புருஷர்களும் கூட தன் பெயருக்கு முன்னால் வாலை என்றோ சித்தர் என்றோ அடைமொழிகளை போட்டுக் கொண்டதில்லை என அறியவும். ஏன் சிவனே ஆதிசங்கரராக அவதரித்தும் தன் பெயரை இன்றுவரை ஆதிசங்கரர் என்றே நிலைப்பெற செய்தார் எனவும் அறிக. சித்தர்கள் தமக்காக வாழாதவர்கள், தமக்காக காசு பணம் தேடாதவர்கள், என்றும் இறைவனுக்காகவும், இன்னலுற்ற மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்து கொண்டவர்கள். "நாணயமாய் நடப்பவரே ஞானி யோகியமாய் நடப்பவரே யோகி சகலமும் தள்ளியவரே சந்நியாசி ஆண்டவனை அறிந்தவரே ஆண்ட ஒழுக்கம் உடையவரே துறவி சிந்தை தெளிந்திருப்பவன் அவனே சித்தன் செகமெல்லாஞ் சிவமென்று அறிந்தோன் சித்தன்" "வாலையைப் பூசிக்க சித்தரானார் வாலைக் கொத்தாசையாய் சிவகர்த்தரானார் வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார் இந்த விதம் தெரியுமோ? வாலைப் பெண்ணே..... வாலைக்கு வுருவமில்லை் என்றால்? உயர் தெய்வத்தைப் பற்றி கொங்கணவர் ஏன் இந்த பாடலை எழுதி உள்ளார் கருவூரார் தனது கருவூரார் பூஜாவிதி என்னும் நூலில் வாலை தெய்வம் பற்றி இப்படி சொல்கிறார்.... பத்து வயதாகும் வாலையவள் மர்மம் வைத்து பூசை பண்ண மதியுனக்கு வேணுமடா அதிகமாக கனரிது சிறு பிள்ளை கன்னி கன்னி ஆமிவளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர் அறிந்ததுமே மன அடக்கம் வந்து சேரும் நாட்டிலே சொன்னாயானால் நகைப்பர்.... வாலை தெய்வம் புற வழிபாடு ஓம் ஐயும் கிலியும் சவும் சவும் கிலியும் ஐயும் வா வா வாலை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி நமக வாலைதெய்வம் என்று வாலைபரமேஸ்வரி இவள் சித்தர்களுக்கு முழு முதற்கடவுள்.இவளைக் கொண்டே அறுபத்து நாலு கலைகளையும் சித்தர்கள் அறிந்தனர். இவளை திரிபுரை என்றும் , வாலை என்றும் ,பத்து வயதாளென்றும், பதினாறு வயதாள் என்றும், கன்னியென்றும்,பச்சைநிறத்தாளென்றும் ,சக்கரத்தாளென்றும் , வாமியென்றும் ,தேவியென்றும், மாயையென்றும்,புவனையென்றும்,அன்னையென்றும், ஆவுடையாளென்றும், தாரையென்றும் , அமுதக் கலசமென்றும்,தாயென்றும் உண்ணாமுலையென்றும் ,கோவுடையாளென்றும் , அண்ட பேரண்டங்களைக் கட்டிக் காக்கின்ற அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி என்றும் அழைப்பார்கள். வைத்தீஸ்வரனான ஈஸ்வரனே இவள் தயவில்தான் மண்ணையே மருந்தாகக் கொண்டு வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியம் புரிந்து வருகிறான்.இவளை அறிய ஏழு பிறப்பில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள் சித்தர்கள். கண்டு கெட்ட வன்கோடி காணாமல் கெட்ட வன் கோடி கேட்டு கெட்ட வன் கோடி கேட்காமல் கெட்ட வன் கோடி பார்த்து கெட்டவன் கோடி பார்க்காமல் கெட்ட வன் கோடி கோடியிலே ஒருவனுக்கு விளங்கு மய்யா வாலை தெய்வம்★ ★வாலையை பணியாமல் சித்தராக முடியாது! ★அவளை யறியா அமரரும் இல்லை ★அவளின்றிச் செய்யும் அருந்தவம் இல்லை ★அவளின்றி ஐவரால் ஆவதொன் றில்லை ★அவளின்றி யூர் புகு மாறறி யே னே" ★அவள் - சக்தி - வாலை - தாய் - 'உ' இடது மணி ஒளி! சக்தியை அறியாத தேவர் யாருமில்லை? ஏன் தெரியுமா? சக்தி அருளால் அமுதம் உண்டு தான் அமரத்துவம் பெற முடியும்! ★அப்படியாயின் அமரர் சக்தியை வாலையை அறியாமலிருப்பரா? ★ சக்தியில்லையேல் நம்மால் எதுவுமே செய்ய முடியாதே! ★உடலில் சக்தி இருந்தால் தானே நடமாட முடியும்! ★பின்னரல்லவா தவம் செய்வது?! ஆக சக்தி இல்லையெனில் ஒன்றும் செய்ய இயலாது! ★சக்தி - வாலை துணையின்றி பஞ்சகிர்த்தியம் புரியும் மூர்த்திகளாலும் ஒன்றும் செய்ய இயலாது! ★பஞ்ச பூதங்கள் இயங்க சக்தி வேண்டும். நம் புலன்கள் இயங்க சக்தி வேண்டும்!. ஏன்? சிவத்தோடு சக்தி இருந்தாலே இயக்கம்! எங்கும் சிவமயம்! சிவம் சக்தி மயம்! ★அவளே வாலை! தாய்! ★அந்த தாய் வாலை அருள் தந்து அமுதம் ஊட்டி அவள் ஆசி பெற்றே சிவன் இருக்கும் ஊருக்கு போக முடியும்! ★சிவனருள் பெற முதலில் சக்தியருளே வேண்டும்! ★நம்மை கருவாய் வயிற்றில் சுமந்து பெற்ற தாயை விட கோடி கோடி பங்கு நம்மை அன்புகாட்டி அமுதூட்டி அரவணைபவள் வாலைதாயே! ★நமது உடலுக்கு சக்தி யூட்டிய தாய்! ★உலக அன்னை ! அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி ! ★அவளை அறியாத பேர்க்கு மாயை! மகாமாயை அவளே! அறிந்து பணிந்தவருக்கு அமுதூட்டும் அன்னை! ★வாலையை பணியாமல் யாரும் தேவராக முடியாது! சித்தராக முடியாது! ஞானியாக முடியாது! சிவமே சக்தியை தன்னோடு சரிபாதி யாக கொண்டார் எனில் சக்தியின் மகத்துவம் புரியவேண்டாமா? ★"சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி செம்பவள மேனி கொண்ட சக்தியவள் வாலையே! முக்கடலும் சங்கமிக்கும் முக்தி யருள் தலமாம் கன்னியவள் குமரி யிலே கண்டு கொள் பணிந்தே" “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஆன்ம நேய ஒருமைப்பாடு உலகெங்கும் ஓங்குக.” இன்புற்றிருக்க ஈசனுடன் உறைந்ந அன்னையை சரனடைவோம் சிவ சக்தி போற்றி. அம்மா தாயே சரணம் வாலையைக்கும்பிட்டு சித்தரானார்.. வாலைக்கொத்தாசையாய் சிவகர்த்தரானார்... வாலைக்கு மேலான தெய்வமில்லை.... கொங்கண சித்தர் ... தாயிர் சிறந்த கோயிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை சக்தி இல்லையேல் சிவம் இல்லை அவளை அறிய முதலில் ஐவரை அறிய வேண்டும் இருப்பிடம் உள்நாக்கு இயக்குவது காற்று கன்னி வாலை பெண்ணாகி தாயுமாகி உயர்ந்து நிற்கும் உன்னத தாய்மை பொருந்திய உண்மை தெய்வம்.

+21 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 5 शेयर