திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு திரட்டில் இருந்து திரட்டிய ஒரு அமுதமான சிறு கதை! #திருநீற்றின்மகிமை! ஒரு ஏழை அன்றாட வயிற்றுப்பாட்டிற்கே ஒன்றுமிலாது வறுமையில் வாடிக்கொண்டிருந்தான்! ஆனால் அவன் சோம்பேறி அல்ல... எந்த ஜென்ம பிரதிபலனோ, அவன் எங்கு சென்றாலும் வேலை கிடைக்காது. இல்லை அவனை எல்லோரும் வெறுப்பர்! ஏனென்றால் அவனுக்கு பொய் பேசத் தெரியாது!! ஒருநாள் தன் வாழ்வினையும், கடவுளையும் நொந்து நடந்துகொண்டிருந்தான்! அவனுக்கருகில் மேனியெங்கும் திருநீற்றை அணிந்தபடி ஒரு சிவனடியார் சென்றார். அவரை பார்த்ததும் நம்ம கதையின் கதாநாயகன்..."ஐயா..சற்று எனக்காக நிற்க முடியுமா" என கேட்டான்! அவ்வடியவரும்" என்ன வேண்டும் உனக்கு" எனக்கேட்டு வா "என்னிடம் இருப்பதை தருகிறேன்" என்று பக்கத்தில் இருந்த பாறையின் மீது அமர்ந்தார்."ஐயா எனக்கு ஏதும்..,வேண்டாம்! சிறிய...சந்தேகம் தீர்த்து அருள்வீராக" என்று அவரை வணங்கினான்! "ஐயா தாங்கள் ஏன் இப்படி சாம்பலை பூசிக்கொண்டிருக்கிறீர்கள்..அதுவும் மேனி முழுதும்?" என்றான்! சிவனடியாரும்.."குழந்தையே..இது மனித உடல் இறுதியின் வெளிப்பாடு! அதன் அடையாளமே இது! நாம் இறந்த பிறகு சாம்பலாய் போய்விடுவோம் என நம் மனம் எப்போதும் நினைக்கவேண்டும்..ஆகவே இந்த உடலால் அடுத்தவர்க்கு தீமை செய்யக்கூடாது என்பதை அறியவும்...இன்னும் உயிருள்ளவரை இதையணிந்தால் செல்வம்பெருகும் என்பதற்காகவும்.. திருநீறு அணிகிறேன்!" என்றார். "சுவாமி எங்கள் வழக்கத்தில் இதை அணிய மாட்டார்களே .. நானும் வறுமையில் வாடுகிறேன்..என்ன செய்யவேன்" என்று சிவனடியாரிடம் புலம்பி அழுதான் நம் கதாநாயகன்! சிவனடியாரும் "சரியப்பா..நீ அணியவில்லை என்றாலும் பரவாயில்லை..அணிந்தவர் நெற்றியையாவது பார் உன் வறுமை நீ்ங்கிவிடும்" என சொல்லி எழுந்து நடக்கத்தொடங்கினார்! நம் கதாநாயகன் சிந்தித்தான்! நாம் பூச முடியாது...அப்படியெனில் நம் தெரு முனையில் திருநீறணிந்து அதிகாலை மண்ணெடுக்கச் செல்லும் குயவரின் நெற்றியை தரிசித்திட வேண்டியதுதான் என முடிவு செய்து வழக்கம்போலவே மனைவியிடம் நடந்ததைக் கூறி உறங்கினான்! அதிகாலை எழ வேண்டும் என்ற முனைப்பில்! நம்கதாநாயகன் அதிகாலை எழுந்து தெருமுனையில் குயவரின் நெற்றித்திருநீறு பூச்சை காண காத்திருந்தான். குயவரும் அன்று சற்று இவனுக்கு முன்பாகவே கிளம்பிப் போய்விட்டார் என்பதை அறியாதவனாக! காலம் கடந்தும் அவரை காணாது...சரி "நாம்தான் தாமதமாக எழுந்துவிட்டோமோ? சரி..நாம் மண்ணெடுக்கும் இடத்திற்கே போய் தரிசனம் செய்யலாம்" என எண்ணியவாறு வயலை நோக்கி நடந்தான்! கதையில் அதற்கு முன் நாம் மண்ணெடுக்கும் இடம் செல்வோம்! குயவர் தோண்டிக்கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக புதையல் பானை அவருக்கு சிக்கியது! அவர் அந்த தங்கப்பானை புதையலைக்கண்டு அதிர்ச்சியும் சந்தோஷமுமாக.."இதை எப்படியாவது வெளியில் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு கொண்டு சென்றுவிட வேண்டுமே...ஆனால் பானை இருவர் சேர்ந்தால்தான் தூக்கமுடியுமே.." என்று குழிக்குள்ளிருந்து யார் வருகிறார்கள் என எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்! நம் கதாநாயகன் அவ்விடம் வந்து சேர்ந்தான்...அவர் எட்டிப்பார்க்கவும் நமது கதாநாயகனும் எதார்த்தமாக அவர் நெற்றியைப்பார்த்து "பார்த்துட்டேன்" என ஆவலாய் கூற.... குயவர்..."ஒருவேளை இவன் புதையலைப்பார்த்துவிட்டானோ"? என்று பயந்து... "நிஜமாகவே நீ பார்த்தாயா"? எனக்கேட்க... "ஆமாம் நிறைவாகக் கண்டுவிட்டேன்" எனக்கூற.... "அப்படியென்றால் குழிக்குள் இறங்கி இந்தப் பானையை ஒரு கைப்பிடி..ஆளுக்குபாதி எடுத்துக்கொள்வோம்" எனக்கூற...நம்ம கதாநாயகனுக்கு உண்மை விளங்கியது! அப்போது சிந்தித்தானாம் அவன்! "நெற்றியைப் பார்த்ததற்கே பாதி கிடைத்ததே..இன்னும் நாம் பூசினால் என்னவெல்லாம் கிடைக்குமோ" என்று வேற்றுமையை தூரத் தள்ளி வைத்து உடல் முழுதும் திருநீற்றை பூசினானாம்! #வானவர்மேலதுநீறு! **ஈசன் அடி தேடி பின்பற்றி** ஆலவாயர் அருட்பணி மன்றம். மதுரை. மாதம் ஒருமுறை சித்தர்கள், நாயன்மார்கள் வழிபட்ட பழம்பெருமை வாய்ந்த சிவனார் ஆலயத்தில் மூலிகை அபிடேக பெருந்திருவிழா நடைபெறுகிறது அனைவரும் வருக

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு திரட்டில் இருந்து திரட்டிய ஒரு அமுதமான சிறு கதை! #திருநீற்றின்மகிமை! ஒரு ஏழை அன்றாட வயிற்றுப்பாட்டிற்கே ஒன்றுமிலாது வறுமையில் வாடிக்கொண்டிருந்தான்! ஆனால் அவன் சோம்பேறி அல்ல... எந்த ஜென்ம பிரதிபலனோ, அவன் எங்கு சென்றாலும் வேலை கிடைக்காது. இல்லை அவனை எல்லோரும் வெறுப்பர்! ஏனென்றால் அவனுக்கு பொய் பேசத் தெரியாது!! ஒருநாள் தன் வாழ்வினையும், கடவுளையும் நொந்து நடந்துகொண்டிருந்தான்! அவனுக்கருகில் மேனியெங்கும் திருநீற்றை அணிந்தபடி ஒரு சிவனடியார் சென்றார். அவரை பார்த்ததும் நம்ம கதையின் கதாநாயகன்..."ஐயா..சற்று எனக்காக நிற்க முடியுமா" என கேட்டான்! அவ்வடியவரும்" என்ன வேண்டும் உனக்கு" எனக்கேட்டு வா "என்னிடம் இருப்பதை தருகிறேன்" என்று பக்கத்தில் இருந்த பாறையின் மீது அமர்ந்தார்."ஐயா எனக்கு ஏதும்..,வேண்டாம்! சிறிய...சந்தேகம் தீர்த்து அருள்வீராக" என்று அவரை வணங்கினான்! "ஐயா தாங்கள் ஏன் இப்படி சாம்பலை பூசிக்கொண்டிருக்கிறீர்கள்..அதுவும் மேனி முழுதும்?" என்றான்! சிவனடியாரும்.."குழந்தையே..இது மனித உடல் இறுதியின் வெளிப்பாடு! அதன் அடையாளமே இது! நாம் இறந்த பிறகு சாம்பலாய் போய்விடுவோம் என நம் மனம் எப்போதும் நினைக்கவேண்டும்..ஆகவே இந்த உடலால் அடுத்தவர்க்கு தீமை செய்யக்கூடாது என்பதை அறியவும்...இன்னும் உயிருள்ளவரை இதையணிந்தால் செல்வம்பெருகும் என்பதற்காகவும்.. திருநீறு அணிகிறேன்!" என்றார். "சுவாமி எங்கள் வழக்கத்தில் இதை அணிய மாட்டார்களே .. நானும் வறுமையில் வாடுகிறேன்..என்ன செய்யவேன்" என்று சிவனடியாரிடம் புலம்பி அழுதான் நம் கதாநாயகன்! சிவனடியாரும் "சரியப்பா..நீ அணியவில்லை என்றாலும் பரவாயில்லை..அணிந்தவர் நெற்றியையாவது பார் உன் வறுமை நீ்ங்கிவிடும்" என சொல்லி எழுந்து நடக்கத்தொடங்கினார்! நம் கதாநாயகன் சிந்தித்தான்! நாம் பூச முடியாது...அப்படியெனில் நம் தெரு முனையில் திருநீறணிந்து அதிகாலை மண்ணெடுக்கச் செல்லும் குயவரின் நெற்றியை தரிசித்திட வேண்டியதுதான் என முடிவு செய்து வழக்கம்போலவே மனைவியிடம் நடந்ததைக் கூறி உறங்கினான்! அதிகாலை எழ வேண்டும் என்ற முனைப்பில்! நம்கதாநாயகன் அதிகாலை எழுந்து தெருமுனையில் குயவரின் நெற்றித்திருநீறு பூச்சை காண காத்திருந்தான். குயவரும் அன்று சற்று இவனுக்கு முன்பாகவே கிளம்பிப் போய்விட்டார் என்பதை அறியாதவனாக! காலம் கடந்தும் அவரை காணாது...சரி "நாம்தான் தாமதமாக எழுந்துவிட்டோமோ? சரி..நாம் மண்ணெடுக்கும் இடத்திற்கே போய் தரிசனம் செய்யலாம்" என எண்ணியவாறு வயலை நோக்கி நடந்தான்! கதையில் அதற்கு முன் நாம் மண்ணெடுக்கும் இடம் செல்வோம்! குயவர் தோண்டிக்கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக புதையல் பானை அவருக்கு சிக்கியது! அவர் அந்த தங்கப்பானை புதையலைக்கண்டு அதிர்ச்சியும் சந்தோஷமுமாக.."இதை எப்படியாவது வெளியில் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு கொண்டு சென்றுவிட வேண்டுமே...ஆனால் பானை இருவர் சேர்ந்தால்தான் தூக்கமுடியுமே.." என்று குழிக்குள்ளிருந்து யார் வருகிறார்கள் என எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்! நம் கதாநாயகன் அவ்விடம் வந்து சேர்ந்தான்...அவர் எட்டிப்பார்க்கவும் நமது கதாநாயகனும் எதார்த்தமாக அவர் நெற்றியைப்பார்த்து "பார்த்துட்டேன்" என ஆவலாய் கூற.... குயவர்..."ஒருவேளை இவன் புதையலைப்பார்த்துவிட்டானோ"? என்று பயந்து... "நிஜமாகவே நீ பார்த்தாயா"? எனக்கேட்க... "ஆமாம் நிறைவாகக் கண்டுவிட்டேன்" எனக்கூற.... "அப்படியென்றால் குழிக்குள் இறங்கி இந்தப் பானையை ஒரு கைப்பிடி..ஆளுக்குபாதி எடுத்துக்கொள்வோம்" எனக்கூற...நம்ம கதாநாயகனுக்கு உண்மை விளங்கியது! அப்போது சிந்தித்தானாம் அவன்! "நெற்றியைப் பார்த்ததற்கே பாதி கிடைத்ததே..இன்னும் நாம் பூசினால் என்னவெல்லாம் கிடைக்குமோ" என்று வேற்றுமையை தூரத் தள்ளி வைத்து உடல் முழுதும் திருநீற்றை பூசினானாம்! #வானவர்மேலதுநீறு! **ஈசன் அடி தேடி பின்பற்றி** ஆலவாயர் அருட்பணி மன்றம். மதுரை. மாதம் ஒருமுறை சித்தர்கள், நாயன்மார்கள் வழிபட்ட பழம்பெருமை வாய்ந்த சிவனார் ஆலயத்தில் மூலிகை அபிடேக பெருந்திருவிழா நடைபெறுகிறது அனைவரும் வருக

+6 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 8 शेयर

#63நாயன்மார்களும் #அவர்களின்_பூசை_தினமும் ! சிவபெருமானை போற்றுவதே தம் வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து உயர்ந்த நாயன்மார்கள். 1. அதிபத்தர் நாயனார் - ஆவணி ஆயில்யம் 2. அப்பூதியடிகள் - தை சதயம் 3. அமர்நீதி நாயனார் - ஆனி பூரம் 4. அரிவாட்டாயர் - தை திருவாதிரை 5. ஆனாய நாயனார் - கார்த்திகை ஹஸ்தம் 6. இசை ஞானியார் - சித்திரை சித்திரை 7. மெய்ப்பொருள் நாயனார் - கார்த்திகை உத்திரம் 8. இயற்பகையார் - மார்கழி உத்திரம் 9. இளையான்குடி மாறார் - ஆவணி மகம் 10. உருத்திர பசுபதியார் - புரட்டாசி அசுவினி 11. எறிபத்த நாயனார் - மாசி ஹஸ்தம் 12. ஏயர்கோன் கலிகாமர் - ஆனி ரேவதி 13. ஏனாதிநாத நாயனார் - புரட்டாசி உத்திராடம் 14. ஐயடிகள் காடவர்கோன் - ஐப்பசி மூலம் 15. கணநாதர் நாயனார் - பங்குனி திருவாதிரை 16. கணம்புல்லர் நாயனார் - கார்த்திகை கார்த்திகை 17. கண்ணப்ப நாயனார் - தை மிருகசீரிஷம் 18. கலிய நாயனார் - ஆடி கேட்டை 19. கழறிற்றறிவார் - ஆடி சுவாதி 20. காரி நாயனார் - மாசி பூராடம் 21. காரைக்கால் அம்மையார் - பங்குனி சுவாதி 22. கழற்சிங்கர் நாயனார் - வைகாசி பரணி 23.குலச்சிறையார் - ஆவணி அனுஷம் 24. கூற்றுவர் நாயனார் - ஆடி திருவாதிரை 25. கலிக்கம்ப நாயனார் - தை ரேவதி 26. குங்கிலிக்கலையனார் - ஆவணி மூலம் 27. சடைய நாயனார் - மார்கழி திருவாதிரை 28. சிறுத்தொண்ட நாயனார் - சித்திரை பரணி 29. கோச்செங்கட் சோழன் - மாசி சதயம் 30. கோட்புலி நாயனார் - ஆடி கேட்டை 31. சக்தி நாயனார் - ஐப்பசி பூரம் 32. செருத்துணை நாயனார் - ஆவணி பூசம் 33. சண்டேசுவர நாயனார் - தை உத்திரம் 34. சோமாசிமாறர் - வைகாசி ஆயில்யம் 35. சுந்தரமூர்த்தி நாயனார் - ஆடி சுவாதி 36. திருக்குறிப்பு தொண்ட நாயனார் - சித்திரை சுவாதி 37. சிறப்புலி நாயனார் - கார்த்திகை பூராடம் 38. திருநாளைப் போவார் - புரட்டாசி ரோகினி 39. திருஞான சம்பந்தர் - வைகாசி மூலம் 40. தண்டியடிகள் நாயனார் - பங்குனி சதயம் 41. சாக்கிய நாயனார் - மார்கழி பூராடம் 42. நமிநந்தியடிகள் - வைகாசி பூசம் 43. புகழ்ச்சோழ நாயனார் - ஆடி கார்த்திகை 44. நின்றசீர் நெடுமாறர் - ஐப்பசி பரணி 45. திருநாவுக்கரச நாயனார் - சித்திரை சதயம் 46. நரசிங்க முனையர் - புரட்டாசி சதயம் 47. திருநீலகண்ட நாயனார் - தை விசாகம் 48. திருமூல நாயனார் - ஐப்பசி அசுவினி 49. திருநீலகண்ட யாழ்ப்பாணர் - வைகாசி மூலம் 50. திருநீலநக்க நாயனார் - வைகாசி மூலம் 51. மூர்த்தி நாயனார் - ஆடி கார்த்திகை 52. முருக நாயனார் - வைகாசி மூலம் 53. முனையடுவார் நாயனார் - பங்குனி பூசம் 54. மங்கையர்க்கரசியார் - சித்திரை ரோகினி 55. பெருமிழலைக் குறும்பர் - ஆடி சித்திரை 56. மானக்கஞ்சாறர் - மார்கழி சுவாதி 57. பூசலார் நாயனார் - ஐப்பசி அனுஷம் 58. நேச நாயனார் - பங்குனி ரோகினி 59. மூர்க்க நாயனார் - கார்த்திகை மூலம் 60. புகழ்த்துணை நாயனார் - ஆனி ஆயில்யம் 61. வாயிலார் நாயனார் - மார்கழி ரேவதி 62. விறன் மீண்டநாயனார் - சித்திரை திருவாதிரை 63. இடங்கழி நாயனார் - ஐப்பசி கார்த்திகை திருச்சிற்றம்பலம்

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 1 शेयर

உயிர் பிரியும் போது தச வாயுக்களின் பங்கு : உடலை விட்டு , இந்த இடத்தில் உயிர் பிரிய வேண்டும் என முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் உயிர் உடலை விட்டு பிரியும். மனித உடலில் பத்துவித வாயுக்கள் உண்டு . இவை தச வாயுக்கள் எனப்படும். 1. உயிர் காற்று. (பிராணன்) 2. மலக்காற்று. (அபானன்) 3. தொழில் காற்று. (வியானன்) 4. ஒலிக்காற்று. (உதானன்) 5. நிரவுக்காற்று.( சமானன்) 6. தும்மல் காற்று. (நாகன்) 7. விழிக்காற்று. (கூர்மன்) 8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்) 9. இமைக் காற்று. (தேவதத்தன்) 10. வீங்கற் காற்று. (தனஞ்சயன்) உயிர் வெளியே புறப்படும் நாள் , நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செல்களும் முடக்கப்பட்டு, எல்லாவித வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும். உதாரணமாக . . . . ஒரு வீட்டை நாம் காலி செய்யும்போது எப்படி எல்லா பொருள்களையும் ஒழுங்காக அடுக்கி கட்டி கொண்டுவந்து நடு வீட்டில் வைத்து பின் அங்கிருந்து சரியாக எண்ணி ஒவ்வொன்றாக வெளியே கொண்டு செல்வது போல , நமது அனைத்து அவயங்களும் ஒவ்வொன்றாக முழுச் செயலையும் , ஒவ்வொன்றாக நிறுத்தி , நமது நடுநெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும். சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும் , இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும் , மூத்திர வாசல் வழியாகவும் , காதின் வழியாகவும் , மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும் . ஒன்பது காற்றும் நிறுத்தப்பட்டு , அவயங்களும் முழு நிறுத்தம் கண்டு , எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ அந்த வழியாக தனஞ்சயன் என்ற அந்த வாயு மற்றவற்றையும் வெளியே அழைத்து செல்லும்.உயிர் பிரியும் . மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும்போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் வேலையும் அந்த தனஞ்சயன் செய்வது தான் . உயிரற்ற உடல்களை ஸ்ரீராகவேந்திரர் போன்ற மகான்கள் பிழைக்க வைப்பதுவும் இந்த தனஞ்சயனை தம் யோக சக்தியால் ஊக்கி விட்டு மற்ற ஒன்பது வாயுக்களை அழைத்து வரச்செய்து உடலினுள் புகுத்தி உயிர் அளிப்பதே ஆகும் .இவ்வாறாக புனரபி ஜனனம் , புனரபி மரணம் . என்ற நிலை அமைகிறது . பிறப்பின் துவக்கம் ஆசையின் தூண்டலால் அமைகிறது. பாபங்களும் , புண்ணியங்களும் அற்ற சம நிலையை அடைவதே பிறப்பற்ற நிலையைத் தரும் , அதுவே ஒவ்வொரு மனிதரும் காண வேண்டிய உன்னதமான முக்தி நிலையாகும். தச வாயுக்களின் சுற்று: 1. பிராணன் - மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பூச உதவமு குரல்வளையில் உள்ளது. கை,கால்களை வேலை செய்ய பெரு விரல் உள்ளது. 2. அபானன் - சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும்.குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும். 3. வியானன் - தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையாபொருளில் உருப்புக்களைநீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக்காக்கும். 4. உதானன் - உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு. 5. சமானன் - நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது. 6. நாகன் - அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தால் துப்புதல் ஆகிய வேலை செய்யும். 7. கூர்மன் - மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண்திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும். 8. கிருகரன் - நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டுபண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண. 9. தேவதத்தன் - சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல். 10. தனஞ்செயன் - மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல், இறந்த மூன்றாம் நாள் தலை வழியாகவெழியே செல்லுதல். குழந்தை கருவில் உற்பத்தியாகும் போது தச வாயுக்கள்தான் அவற்றின் வளர்ச்சியை நிர்மானிக்கின்றன. #ஹரிஓம்.#ஓம்நமசிவாய!🙏🙏

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 3 शेयर

💃🏽 *யார் சுகவாசி....???* 💃🏽 ☻ சிரித்து மகிழ்ந்து வாழ்பவன் சுகவாசி! ☻ அதிகாலையில் எழுபவன் சுகவாசி! ☻ இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன் எப்போதும் சுகவாசி! ☻ முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன் சுகவாசி! ☻ மண்பானைச் சமையலை உண்பவன் சுகவாசி! ☻ உணவை நன்கு மென்று உண்பவன் சுகவாசி! ☻ உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன் சுகவாசி! ☻ வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன் சுகவாசி! ☻ கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன் சுகவாசி! ☻ மலச்சிக்கல் இல்லாதவன் சுகவாசி! ☻ கவலைப்படாத மனிதன் சுகவாசி! ☻ நாவடக்கம் உடையவன் சுகவாசி! ☻ படுத்தவுடன் தூங்குகிறவன் சுகவாசி! ☻ எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும் சுகவாசி! ☻ தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன் சுகவாசி! ☻ கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன் சுகவாசி! ☻ கற்பு நெறி தவறாது வாழ்பவன் என்றும் சுகவாசி! ☻ மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன் சுகவாசி! ☻ ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன் சுகவாசி! ☻ வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன் சுகவாசி! ☻ இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன் சுகவாசி! ☻ தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன் சுகவாசி! ☻ உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன் சுகவாசி! ☻ வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன் சுகவாசி! ☻ 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன் சுகவாசி!

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 4 शेयर

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில், சிவகாசி, தொழில் வளம் தரும் விஸ்வநாதர் கோவில் வடக்கே காசி, தெற்கே தென்காசி, நடுவில் சிவகாசி ஆகிய மூன்றும் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. சிவகாசியில் காசி விஸ்வநாதர் கோவில் இருக்கிறது. சிவன் காசியில் இருந்து வந்து தங்கிய இடம் என்பதால், இந்த திருத்தலம் ‘சிவன் காசி’ என்று அழைக்கப்பட்டது, அதுவே நாளடைவில் ‘சிவகாசி’ என்று உருப்பெற்றதாக கூறப்படுகிறது. காசி லிங்கம் : பொதிகை மலைப் பகுதியில் உள்ள தென்காசியில் சிவன் கோவில் ஒன்றைக் கட்டினான் அரிகேசரி பராங்குச மன்னன். அங்கு பிரதிஷ்டை செய்ய காசியில் இருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வர, தன் மனைவியுடன் சென்றான். கங்கையில் புனித நீராடி ஒரு காராம் பசு மீது லிங்கத்தை ஏற்றிக்கொண்டு தென்காசி நோக்கி சென்றான். பலநாள் பயணம் செய்து வரும் வழியில், தற்போது சிவகாசி நகரம் உள்ள இடத்தில் தங்கினான். அப்போது சிவகாசி வில்வ வனக் காடாக இருந்தது. மறுநாள் அரசனின் மனைவிக்கு பயணம் செய்ய முடியாதபடி உடல்நிலை ஏற்பட்டது. உடன் வந்த காராம் பசுவும், மன்னனுடன் வர மறுத்தது. இதனால் சிவலிங்கத்தை தென்காசிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உருவானது. இதையடுத்து மன்னன், காசியில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கத்தை வில்வ வனக் காட்டிலேயே பிரதிஷ்டை செய்தான். அந்த சிவலிங்கமே காசி விஸ்வ நாதர் என்று அழைக்கப்படுகிறது. அரிகேசரி பராங்குச மன்னனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த பாண்டிய மன்னர்கள், இந்தக் கோவிலில் மண்டபங்கள், பிரகாரம், தீர்த்தம், சுற்றுமதில், ரத வீதிகளை அமைத்து திருப்பணிகளைச் செய்தனர். இந்துக்கள் அனைவரும் தன் வாழ்வில் ஒரு நாளேனும் காசி யாத்திரை சென்று வர வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள். ஆனால் இன்றைய நவீன வசதி படைத்த காலத்திலும் கூட பலரால் காசிக்கு சென்று வர முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள், சிவகாசியில் உள்ள காசி விஸ்வநாதரை வணங்கி வழிபட்டாலே போதுமானது. காசியில் வழிபட்ட பலனைப் பெறலாம். இந்த ஆலயத்தில் காசி விஸ்வநாதருடன், விசாலாட்சி அம்மனும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இறைவனையும், இறைவியையும் சேர்த்து வணங்கினால் மன அமைதி கிடைக்கும். பவுர்ணமி, சங்கடஹர சதுர்த்தி மற்றும் பிரதோஷ நாட்களில் இந்த ஆலயத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. சிவகாசியில் கோவிலைக் கட்டிய பராங்குச மன்னன், தன் தவ வலிமையில் ஆகாய மார்க்கமாகச் செல்லும் ஆற்றலைப் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது. துறவு நிலைக்குப் பின்னர், மன்னன் பராசரர் என்று அழைக்கப்பட்டான். தினமும் ஆகாய மார்க்கமாகச் சென்று, காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து விட்டு, திரும்பும் வழியில் சிவகாசி விஸ்வநாதரையும் வணங்கி விட்டு, பின்னர் தென்காசி செல்வதை பராசரர் வழக்கமாக வைத்திருந்தார். விமானப் பயணம் மேற்கொள்பவர்கள், வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள், தொடர்ந்து 11 வாரங்கள் சிவகாசி காசி விஸ்வநாதரை வணங்கினால், அவர்களின் பிரார்த்தனை நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சிவகாசிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, பல ஊர்களைச் சேர்ந்த வணிகர்கள் வியாபாரம் தொடர்பாக வந்து போனார்கள். அவர்கள் இங்குள்ள விஸ்வநாத சுவாமியை வழிபாடு செய்ய தவறுவதில்லை. அவர்களின் தொழில் வளம் பெருக, இந்த ஊர் தொழில் வளம் மிகுந்த ஊராக, இந்த இறைவனே காரணம் என்பது அவர்களின் நம்பிக்கை. இன்றும் தொழில் வளம் பெருக, வணிகர்கள் பலரும் விஸ்வநாதரை 11 வாரம் தொடர்ச்சியாக வழிபட்டு சிறப்பு பெற்று வருகின்றனர். இந்த ஆலயத்தில் துர்க்கை அம்மன், வள்ளி- தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், விநாயகர், நடராஜர், மீனாட்சி அம்மன், வீரபத்திரர், பைரவர், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு தனித் தனி சன்னிதிகள் உள்ளன. இக்கோவிலானது காலையில் 6 மணி முதல் 12 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். முழுநிலவு அன்று மட்டும் நாள்முழுதும் திறந்திருக்கும். இங்கு தினந்தோறும் நான்கு வழிபாடுகளும் வருடத்திற்கு மூன்று திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன. இத்திருவிழாக்களுள் தமிழ்மாதமாகிய வைகாசி மாதம் (மே - ஜூன்) நடைபெறுகின்ற பிரம்மோஸ்தவத் திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இக்கோவில் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறையினரால் பராமரிக்கப்பட்டும் நிர்வகிக்கப்பட்டும் வருகிறது. சிவகாசி 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிர்மாணிக்கப்பட்டதாகும். கி.பி.1428 முதல் கி.பி.1460 வரையிலான காலத்தில். சிவகாசி உள்ளிட்ட மதுரை மண்டலத்தின் தெற்குப் பகுதிகளை பாண்டிய அரசன் அரிகேசரி பராக்கிரமப் பாண்டியன் ஆண்டான்.16ஆம் நூற்றாண்டில் சிவகாசி மதுரை மண்டலத்தின் ஒரு பகுதியாக ஆனது. 1559 ஆம் ஆண்டில் மதுரை விஜயநகரப் பேரரசிடமிருந்து விடுபட்டு மதுரை நாயக்கர்களின் அரசான பின்பு நாயக்க அரசர்களிடமிருந்து இக்கோவிலுக்கு கொடைகள் கிடைக்கத் தொடங்கின. 1736 ஆம் ஆண்டில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தபின்பு இக்கோவிலைப் பற்றியான வரலாற்று நிகழ்வுகள் ஏதும் இல்லை. மதுரையானது 18 ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் சந்தா சாகிப் (1740 - 1754), ஆற்காட்டு நவாப்பு மற்றும் முகம்மது யூசூப் கான் (1725 - 1764) ஆகியோரால் மீண்டும் மீண்டும் பலமுறை கைப்பற்றப்பட்டது. 1801 ஆம் ஆண்டு மதுரைப் பகுதியானது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. காசிலிங்கம் எழுந்தருளியுள்ள கிளை சிறிய உருவில் முதன் முதலாக சீரமைத்தவர் ஆனையப்ப ஞானி என்ற பெரியார் ஆவார். பின்னர் நாயக்க மன்னர் காலத்தில் இக்கோயில் பெரிதாக வளர்ந்தது. கி.பி.1659-ல் முத்து அலிகாத்திரி என்ற முத்து வீரப்ப நாயக்கரால் கோவிலிக்கு தேர் அமைக்கப்பட்டது. தேராடும் வீதிகளும் ஒழுங்குப்படுத்தப்பட்டது என்பது வரலாற்றுச் செய்தி. சிவகாசி கிராமமாகி, ஊராகி, நகரமாகி, தாலுகாவின் தலைநகரமாகவும் மாறியுள்ளது. மக்களின் சுறுசுறுப்பு மற்றும் அயராத உழைப்பினால் அச்சுத் தொழில், நாள் காட்டி படங்கள், தீப்பெட்டிகள், வான வேடிக்கைப் பொருட்கள் போன்ற உற்பத்தியில் முதன்மை பெற்றதால் சிவகாசி "குட்டி ஜப்பான்" என்றும் புகழ்படுகிறது. தற்போது சிவகாசி நகர மக்கள் ஆன்மிகப் பணியில் முன்னோடியாகத் திகழ்கின்றனர். வார வழிப்பாட்டுச் சங்கங்கள் பல ஆன்மிக வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்து வருகின்றன. அருள்மிகு சிவகாசி காசி விஸ்வநாத சுவாமி அருள்மிகு விசாலாட்சி அம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா 04-09-1966 ல் நடைப்பெற்றது. இறை அருளாலும், தெய்வீக பேரவை என்ற அமைப்பின் அயராத உழைப்பாலும், தனி அன்பர்களின் தனிப்பட்ட உபயங்களாலும், தமிழக அரசின் ஆதரவாலும், எல்லா சமூக மக்களின் பொருள் உதவியாலும், சீரிய முறையில் திருப்பணி 03-06-1996 ல் நடைப்பெற்றது. தற்போது மீண்டும் சிவகாசி தெய்வீகப் பேரவை என்ற அமைப்பின் அயராத உழைப்பாலும், எல்லா சமூக மக்களின் பேருதவியாலும், திருப்பணி வேலைகள் செய்து முடிக்கப்பட்டு 06-06-2011 அன்று மகாகும்பாபிசேகம் நடைப்பெற்றது சிவகாசி ஆகிய இரண்டு தெய்வீக தலங்களின் பெயர்கள் மட்டுமே முதல் எழுத்தையும், இறுதி எழுத்தையும் ஒரே எழுத்தாகக் கொண்டுள்ளது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். வாழ்நாளில் 1008 கோபுர தரிசனம் செய்தவர்களுக்கும், 108 கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டவர்களுக்கும் மறுபிறவி என்பது கிடையாது. இது ஆன்மீக பூமி, சித்தர்களும்,மகான்களும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண். ௐ நமசிவாய

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

#அசைவம்சாப்பிடலாமா இறை நம்பிக்கை உள்ளவர்கள் ??? அசைவம் சாப்பிடலாமா கூடாதா ???? ... இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை இதற்கு பதில் தராத குருவும் இல்லை ஆயினும் கேள்வி தொடர்கிறது ... பதில் ... உணவுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. ... உணவுக்கும் கடவுள் கோபிப்பார் என்பதற்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை... .... உணவுக்கு கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ... உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு.. .. உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு .. உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு .. உணவுக்கும் அவன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு... .. உணவுக்கும் அவன் ஆயுளுக்கும் சம்மந்தம் உண்டு .. உணவுக்கும் மனதிற்கும் சம்மந்தம் உண்டு.. .. மனதிற்க்கும் இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு.. ------------ கர்மாவின்காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்.. அந்த அதைக் கரைக்கவே மனித பிறவி... தாவர உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள்குறைவு மாமிச உயிரினங்களுக்கு அதிகம் எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே அடைக்க வேண்டும். ----------- ------------ அதிக பாசம் உள்ள ஆடு கோழி மீன் இவைகளை மனிதன் உண்பது பாச தோஷம் ஆகும். ..... அம்மாவை தேடி அலையும் குஞ்சுகள் குட்டிகள் ஆனால் அதன் தாயை கொன்று தின்னும் மனிதன் உணரவேண்டியது தாயின் மனம் அந்த குட்டியின் மனம் எவ்வாறு தேடி தவித்து இருக்கும்? ........... அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான் அந்த கர்மாவையும் சேர்த்து கரைக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம் இதில் கடவுளுக்கு என்ன பிரச்சனை ??? ------------------ -------------- ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார் மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார் இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை கடன் வாங்கியவனே கடனை கட்ட வேண்டும். ------- -------- --------- சில நேரங்களில் விரதம் இருப்பது உடலுக்கு மட்டும் நல்லதல்ல பிறந்த பிறவிக்கும் நல்லதே அந்த விரத நாளில் மனிதனால் எந்த உயிரும் பாதிக்காததால்... --------- ----- ------------- காட்டில் கூட ஆடு மாடு யானை குதிரை ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை. புலி சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகமாகிறது சைவ உண்ணிகளுக்கு மிருகம் என்ற பெயர் காட்டில் கூட இல்லை.. ------ ------- ------ உடலால் மனித பிறவி சைவம்... உயிரால் மனித பிறவி சைவம்... குணத்தால் மனித பிறவி அசைவம் மற்றும் சைவம். ஆடு மாடு மான் யானை போன்றவை உடலால் சைவம் உயிரால் சைவம் மனதாலும் சைவம். ---- ----- ---- மனித பிறவியின் உணவு #சைவமாக இருத்தலே #தர்மமாகிறது. என்பதால் அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் மனித பிறவிக்கு சிறந்தது சைவம் என வழிகாட்டி சென்றார்கள்.

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 2 शेयर

வியக்க வைத்த வரிகள் "" "" "" "" "" "" "" "" "" " தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும்.., மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்...!! 👌👌👌👌👌👌👌 நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.., அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..! 👌👌👌👌👌👌👌👌 சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது.., உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை 👌👌👌👌👌👌👌👌 நோய் வரும் வரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்! 👌👌👌👌👌👌👌👌 பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல... ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..! 👌👌👌👌👌👌👌👌 பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க.....! உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.! 👌👌👌👌👌👌👌👌 பிச்சை போடுவது கூட சுயநலமே..., புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்... 👌👌👌👌👌👌👌👌 அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை..., ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது. 👌👌👌👌👌👌👌👌 வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு..., அதற்கு அவமானம் தெரியாது விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!! 👌👌👌👌👌👌👌👌 வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்". வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்" 👌👌👌👌👌👌👌👌 திருமணம் - ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்..., ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!! 👌👌👌👌👌👌👌👌 முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்..., பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும். 👌👌👌👌👌👌👌👌 மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும் என்ற ஒரு காரணத்திற்காகவே, நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன...! 👌👌👌👌👌👌👌👌 நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை. 👌👌👌👌👌👌👌👌 இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட..., வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............! 👌👌👌👌👌👌👌 பகலில் தூக்கம் வந்தால், உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!! இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........! 👌👌👌👌👌👌👌👌 துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது.. 👌👌👌👌👌👌👌 தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள *அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..* 👌👌👌👌👌👌👌 அழகான வரிகள்....

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 1 शेयर