🍁🍁🍁ஓம் சாய்ராம்🍁🍁🍁 பல பேர் அவரவர் பிரச்சனைகளுக்கு விடிவு தேடி ஒரு நிரந்தர தீர்வு தேடி என்னை காண்பதற்கு காத்திருக்கும் நேரத்தில் நான் உனக்கு அனுமதி அளித்தேன். ஏன் தெரியுமா?. பல மைல்களுக்கு அப்பால் இருந்து உன்னை அழைத்து வந்திருக்கிறேன் நீ பல இன்ப துன்பங்களை தாங்கி கொண்டு உற்றார் உறவினர்கள் பேசுவதை செவி கொடுத்து கேட்டு அதை கொஞ்சம் பொருட்படுத்தாமல் அவர்களுக்குகாக உன் சுபாவத்தை மாற்றி கொண்டு ஏளனம் செய்தவர்கள் பல பேர் இருந்தும் தன்னம்பிக்கையோடு ஒவ்வொரு பாதையாக அவசரபடாமல் பொறுமையோடு சினம் இல்லாமலும் விரக்தி இல்லாமலும் தான் என்ற அகந்தை இல்லாமல் கடந்து வந்தாய் இதற்காவே உன்னை நான் தேர்ந்தெடுத்தேன். உன்னுள் இருக்கும் நல்ல ஆத்மார்த்தமான செயல்களுக்காக உனக்கு அனுமதி அளித்தேன் எனது அனுமதியின்றி எவரும் என்னிடத்தில் சுவாசிக்க கூட முடியாது ஆதலால் உனக்காக நான் எனது துவாரகா வாயிற் படியில் காத்து கொண்டு இருக்கிறேன். வா குழந்தாய் உனது கர்ம பலன்கள் அனைத்தும் உன்னை விட்டு நெடுந்தூரம் சென்று விட்டது அனைவரும் பார்த்து வியக்கும் வண்ணம் நீ எதிர்பார்க்காத தருணத்தில் வாழ்க்கை பாதையில் உயர்த்த போகிறேன் கலங்காதே அப்பா உன் கூடவே இருக்கிறேன். கவலை படாமல் இரு. இழந்தையெல்லாம் மீண்டும் பெற போகிறாய். தைரியமாக இரு. நான் உனது நிழலாக கூடவே இருப்பேன்.🔱🔱🔱

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 1 शेयर

*வாழ்வில் வளம் சேர்க்கும்* *🔯விஷ்ணுபதி புண்ய காலம்* கடுமையான கஷ்டமா? கொடுமையான வாழ்க்கையா? பெரும் நஷ்டம் கடனா? *வழிபடுங்கள் விஷ்ணு பதி புண்ய காலத்தில்* *🔔14.05.2020🔔* வியாழக்கிழமை அன்று அதிகாலை 1:30 AM மணி முதல் காலை 10:30 AM மணி வரை. பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மர நமஸ்காரம் செய்து 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை பிரகார வலம் வாருங்கள். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு முன் வையுங்கள். 27 சுற்று முடித்த பின்பு மீண்டும் கொடிமர நமஸ்காரம் செய்யுங்கள். பின்பு தாயாரையும் பெருமாளையும் வழிபட்டு தங்களின் பிராத்தனைகளை மனமுருகி சொல்லுங்கள். தங்களின் நியாமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த மூன்று விஷ்ணுபதி காலம் முடிவடைவதற்குள் நிறைவேறியே தீரும்.நிறைவேறியே தீரும். தமிழ் மாத கணக்கின்படி வைகாசி , ஆவணி, கார்த்திகை , மாசி மாதங்களில் முதல் தேதி விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது. பன்னிரண்டு தமிழ் மாதங்களில் சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. மாசி, வைகாசி, ஆவணி, கார்த்திகை ஆகியவை மகாவிஷ்ணுவுக்கு உரியவை. பங்குனி, ஆனி, புரட்டாசி, மார்கழி ஆகியவை சிவனுக்குரியவை . சிவனுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் ஷடசீதி புண்ணிய காலம். ஷடாங்கன் என்றால் சிவபெருமானைக் குறிக்கும். விஷ்ணுவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் விஷ்ணுபதி புண்ய காலம். பிரம்மாவுக்குரிய சித்திரை, ஐப்பசி, ஆடி, தை மாதம் பிறக்கும் காலங்கள் விஷு புண்ய காலம் எனப்படும். பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியைமகாவிஷ்ணுவிற்கு மிகவும்உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது.ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும் ,அனுஷ்டிக்கும் விரதமுறையும் அனைத்திலும் சிறந்த பலன்தருவதாகவும் கூறுவர். ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லதுவிஷ்ணுபதி புண்யகாலம் ஆகும். மகாவிஷ்ணுவின் அருளும்கருணையும் மிகவும்அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும்அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது. ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள்வருவது உண்டு. தமிழ் மாத கணக்கின்படி மாசி , வைகாசி , ஆவணி,கார்த்திகை மற்றும்மாதங்களில் இந்த விஷ்ணுபதி புண்ய காலம்வருகிறது. அன்றைய தினத்தில் அதிகாலை 1 :30 மணி முதல் காலை 10:30 மணி வரை இந்த புண்ய காலநேரம் வருகிறது. முழுமையாக 9 மணி நேரம் இந்த புண்யகாலம் அமைகிறது. இந்த புண்ய காலத்தில் நாம் மகாவிஷ்ணுவையும்,மஹாலக்ஷ்மியையும்மனதார வழிபாட்டு நமது எல்லாதேவைகளையும் , வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனைபுரியலாம். ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ தேவியினுடையதுதிகளை கூறிநமது சக்திக்கு இயன்ற பூஜைகளை குறைவற செய்யலாம்.முறைப்படி பூஜை செய்யத் தெரிந்தவர்கள் அவ்விதம் செய்யலாம் .அருகில்உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு அந்த குறிப்பிட்ட நேரத்தில்சென்று வழிபடலாம். துளசி பூஜை , கோ பூஜை மற்றும் ஸ்ரீதேவிக்குப்ப்ரீத்தியைத் தரக்கூடியகாரியங்களை எல்லாம் சக்திக்குத்தகுந்தவாறு செய்யலாம். அதே போன்று அன்றைய தினத்திலே, விரத நாட்களில் செய்யக்கூடாத செயல்களைத் தவிர்ப்பது நன்று. ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்ய கால விரதத்தைஅனுஷ்டிப்பது , பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற்கு சமம்என சாஸ்திரங்கள்கூறுகின்றன. எனவே அரிதான இந்த வாய்ப்பினைத் தவற விடாமல் இந்தவிரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் உலகாதாயமானதேவைகளையும் மகிழ்ச்சியானமற்றும் செல்வ செழிப்பு மிக்கவளமான வாழ்வினையும் பெற முடியும் என சாஸ்திரங்கள்கூறுகின்றன.மேலும் நமது அக வளர்ச்சி, ஆனந்தம் .ஆன்மிகமுன்னேற்றம் , மன அமைதி மற்றும் மோக்ஷத்தையும் தர வல்லதுஇந்த புண்ய காலம் ஆகும். எல்லோரும் இந்த புண்ய காலத்தை முழுமையாகக் கடைப் பிடித்துஸ்ரீ லக்ஷ்மி நாராயணனின் பூரண அருளைப் பெறுவோமாக! கடன், வறுமை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 108 முறை சொல்லி வந்தால் குபேரன், மகாலட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும். ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை சக்தியை சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா ! ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 1 शेयर

#திருப்பங்களை நல்கும் #திருவோண விரதத்தை இன்று #திருவோண நட்சத்திரம் மேற்கொள்வோம்... மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம், திருவோண விரதம். இது, ஆவணி மாதத்தில் ஓணம் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தீவிர வைணவர்கள், மாதந்தோறும் திருவோண விரதத்தை மேற்கொள்வது வழக்கம். இன்று, திருவோண விரத நாள். சரி, திருவோண விரதம் என்றால் என்ன? அதன் சிறப்புகள் என்னவென்பதைக் காண்போம். திருவோண நட்சத்திரம் பெருமாளுக்குரியது. வாமன அவதாரம் எடுத்தபோது, திருமால் திருவோண நட்சத்திரத்தில்தான் அவதரித்தார். மேலும், மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூமிப்பிராட்டியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது, பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்றுதான். பிராட்டியை ஒப்பிலியப்பன் மணந்துகொண்டதும், ஐப்பசி மாத திருவோண நட்சத்திர தினத்தில்தான். எனவே, ஒப்பிலியப்பர் கோயிலிலும் இந்த திருவோண விழா மாதாமாதம் சிறப்பாக நடைபெறுகிறது. திருவோண தினத்தில் விரதம் மேற்கொள்பவர்கள், எல்லா வளங்களும் பெற்று, பிறப்பிலா பேறுடன் வைகுந்தப் பதவியை அடைவார்கள் என்று ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. முக்கியமாக, குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள். இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், முதல் நாள் இரவே உணவு உட்கொள்ளக்கூடாது. அதிகாலை நீராடி, பெருமாள் ஆலயத்துக்குச் சென்று துளசி மாலை சாத்த வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக்கொண்டு, பெருமாளைக்குறித்த பாடல்களைப் பாராயணம் செய்தல் வேண்டும். மதிய உணவில் உப்பே சேர்க்காமல் சாப்பிட வேண்டும். மாலையில், சந்திர தரிசனம் காண வேண்டும். இதனால், சந்திரதோஷம் இருந்தால் விலகிவிடும். ஒருமுறை திருவோண விரதம் இருந்தால்கூட போதும், சந்திரனின் அருள்பெற்று அவரால் உண்டாகும் தோஷங்கள் விலகி, இனிமையான வாழ்வு கிட்டும் என ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகிறார்கள். திருப்பங்களை நல்கும் திருவோண விரதத்தை இன்று மேற்கொண்டு, வளங்கள் பெற வாழ்த்துகிறோம்.

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

+2 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 1 शेयर

திருச்செந்தூர் முருகன் வழிபாடு முறை பலன்கள் !.. அஞ்ஞானத்தில் இருப்பவர்களுக்கு நிரந்தர உண்மையை போதித்து மெய்ஞ்ஞான பாதைக்கு வழிகாட்டுபவர் தான் “குரு”. தந்தைக்கு ஞானத்தை போதித்து “சிவகுருநாதன்” என்று பெயர் பெற்ற முருகப்பெருமானும், ஒரு மனிதனுக்கு மெய்ஞ்ஞானத்தையும், இன்ன பிற நன்மைகளையும் அளிக்கும் நவகிரகங்களில் ஒருவராகிய “வியாழன்” அல்லது “குருபகவானும்” ஒரே அம்சமாக இருக்கும் “திருச்செந்தூர்” கோவிலில் வழிபடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை இங்கு காண்போம். “சூரபத்மன்” எனும் அரக்கனை அழிப்பதற்காக சிவ பெருமானால் தோற்றுவிக்கப்பட்டவர் “செந்திலாண்டவராகிய” முருகபெருமான். சூரபத்மனையும், அவனது அராஜக ஆட்சியையும் அகற்ற அவனுடன் போர்புரிய தொடங்கினார் முருகன். இப்போரில் முருகப்பெருமானுக்கு பல ஆலோசனைகளை வழங்கியவர் “தேவர்களின் குருவான” “குரு பகவான்”. போரின் இறுதியில் சூரபத்மனை வதம் புரிந்த முருகன், இப்போரில் தன்னுடைய வெற்றிக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கிய குரு பகவானை கவுரவிக்கும் விதமாக, இந்த திருச்செந்தூர் கோவிலில் வீற்றிருக்கும் தனக்கு நிகரான வழிபாட்டு மரியாதை குரு பகவானுக்கும் தரப்படும் என அருள்புரிந்தார். எனவே இத்தல முருகனே குரு பகவானாக கருதி வழிபடப்படுகிறார். ஜோதிடத்தில் குரு பகவான் மட்டுமே முழு சுபகிரகம். ஜாதகத்தில் குருவின் கோட்சாரம் சரியில்லாதவர்கள், குரு கிரக பெயர்ச்சியால் பாதகமான பலன்களை பெறுபவர்கள், இந்த திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் வியாழக் கிழமையன்று காலையில் நீராடி, பின்பு அங்கிருக்கிருக்கும் நாழி கிணற்று தீர்த்த நீரிலும் நீராடி, கோவிலுக்குச் சென்று செந்திலாண்டவருக்கு அர்ச்சனை செய்து வழிபட குரு பகவானால் நன்மைகள் ஏற்படும். குரு கிரக பெயர்ச்சியால் கெடுதலான பலன் ஏற்பட இருந்தவர்களுக்கும் அந்த பாதிப்பு ஏற்படாமல் காக்கும். புத்திரப்பேறு, உயர்பதவிகள், பொன் சேர்க்கை போன்றவற்றிற்கும் குரு பகவானே காரணமாகிறார். எனவே முன்பு கூறப்பட்டது போலவே இக்கோவிலின் கடல் மற்றும் தீர்த்தத்தில் நீராடி, பின்பு இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு இக்கோவிலில் இருந்தவாறே முருகன் மற்றும் குரு பகவானுக்குரிய மந்திரத்தை கூறி வழிபட்டு, கோவிலை 9 முறை வலம் வந்து வழிபட வேண்டும். இதனால் ஒருவர் எத்துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், அதில் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். குறிப்பாக அரசியலில் இருப்பவர்கள் இந்த வழிபாட்டை செய்ய அவர்களுக்கு நல்ல யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லாமல் தவித்தவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும். பொன் ஆபரணங்களின் சேர்க்கையும் ஏற்படும்.

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

#அன்னதானம்_செய் பகவன்தாரோ ஷீர்சாகர் என்பவர் பாபாவின் பக்தர். ஷீரடிக்கு ஒருமுறை தரிசனத்திற்கு வந்தபோது பாபா அவரிடம், "ஓ ! ஷீர்சாகர்‌, உன் தந்தை தீவிர விஷ்ணு பக்தர். அந்த ஷீர சாகரனின் பெயரை உனக்கு ஆசையாய் வைத்தார். வருடம் தவறாமல் பண்டரிபுரம் செல்வார். ஏகாதசி உற்சவமும், அன்னதானமும் செய்வார். ஆனால், நீயோ வீட்டில் செய்துவந்த பூஜையையும் நிறுத்திவிட்டாய் ! நைவேத்யம் படைக்காமல் பகவானைப் பட்டினி போடுவது மகா அபசாரம். பகவான் எதையும் சாப்பிடுவதில்லை. ஆனால் தன் பக்தனிடம் எதிர்பார்க்கிறார். நீ ஒன்று செய் ! பகவானுக்கு நைவேத்யம் செய்வதை மட்டுமே சாப்பிடுவதென்ற கொள்கையை கடைப்பிடி ! அப்போதுதான் உன் தவறு புரியும்" என்றார். அதற்கு ஷீர்சாகரோ, "ராமன், சிவன், கிருஷ்ணன் என எல்லோரையும் நான் உங்களிடமே காண்கிறேன் பாபா" என்றார். பாபாவோ,. "இருக்கலாம்! ஆனால் தரித்திரப்பட்டவர்களுக்கு வீட்டில் வழிபாடு நடத்த தனி இடம் கிடைக்காது. அவர்கள் ஆலயம் சென்றே தங்கள் குறைகளை முறையிடுவர். அந்த ஆலயம் சரிவர நடைபெற, தூய்மையாயிருக்க பணக்காரர்கள் உதவ வேண்டாமா? கோவிலுக்கு வரும் ஏழைகள் பசியோடு திரும்பாதிருக்கச் செய்யப்படுவதுதானே அன்னதானம்!" என்று அழுத்தமாகக் கூறி ஷீர்சாகரை திருத்தி பண்டரிபுரம் சென்று ஆண்டுதோறும் அன்னதானம் செய்ய வைத்தார் பாபா. ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்!!🙏🙏

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 2 शेयर

வேண்டியதை பாபா செய்வார் எப்போதெல்லாம் கஷ்டங்களை சமாளிக்கவேண்டி இருக்கிறதோ, அப்போதெல்லாம் பாபாவின் முன் நின்றாலோ, உட்கார்ந்தாலோ போதும். ஒரு வார்த்தை கூட பேச வேண்டிய அவசியமில்லை . தமது குழந்தைகளின் உள்ளங்களில் இருப்பதை அப்போதைக்கப்போதே பாபா அறிவார், வேண்டியதை அவரே செய்து விடுவார். ஒருசமயம் பாபாவின் பக்தையான தாராபாயின் கண்களில் உபாதை. அவர் பாபாவின் முன் சென்று அமர்ந்தார். கண்களில் வலி. நீர் பெருகிக் கொண்டிருந்தது. பாபா அவரை உற்று நோக்கினார். அவருடைய கண்வலி பறந்தது. நீர் வடிவது நின்றது. ஆனால் பாபாவின் கண்களிலிருந்து நீர் வந்து கொண்டிருந்தது. மருத்துவர்களுக்கு வியாதிக்கு சரியான காரணம் என்னவென்பதை கண்டுபிடிக்க அதிக நேரமும் முயற்சியும் தேவைப்படும். ஆனால் பாபாவைப் பொறுத்தவரை நோயின் காரணத்தை கண்டுபிடித்தல், நோய்க்கு சிகிச்சை எல்லாமே அக்கணமே நிகழ்கின்றன. ஆழப்பதிந்துவிட்ட சரீர உபாதை கணத்தில் திடிரென நிவர்த்திக்கப்படுகிறது. அவரிடமிருந்து பாபா தமக்கு நோயை தரிவித்துக் கொள்வது, அதுவும் சங்கல்ப சக்தியினால் மட்டுமே, பிரமிக்கத்தக்கது. அசாதாரணமான ஒன்று. யார்தான் வியாதியை தன்னிடம் வரவழைத்துக் கொள்ள விரும்புவார்? பாபாவை போன்ற சமர்த்த சதகுருவால் மட்டுமே சாத்தியம்.

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 2 शेयर