ராமன்

sivam Feb 15, 2020

+5 प्रतिक्रिया 4 कॉमेंट्स • 1 शेयर
Siva Feb 15, 2020

+6 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 3 शेयर
Manikala Jawahar Feb 1, 2020

ஆண்டவனின் அவதாரங்களேகூட, அறியாமல் தவறு செய்திருப்பதாக வழக்குக் கதைகள் உண்டு. ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி ஒருமுறை கங்கைக்குக் குளிக்கச் சென்றார். அவரது அம்பறாத் தூணியில் ஒரே ஒரு அம்பு மட்டுமே இருந்தது. அந்த அம்பைப் படுக்கை வசமாக வைக்கக் கூடாதென்ற மரபுப்படி, அதைப் பூமியிலே குத்தி வைத்தார்.“ஒற்றை அம்பை ஊன்றி வை” என்பது வழக்கு. அம்பை ஊன்றிய ராமபிரான், கங்கையில் குளித்து விட்டுக் கரையேறினார். ஊன்றிய அம்பை எடுத்தார்.அதிலொரு தேரைக் குஞ்சு குத்தப்பட்டிருந்தது. பூமிக்குள்ளிருந்த தேரைக் குஞ்சை அவர் அறியாமல் குத்திவிட்டார்.தேரைக் குஞ்சு சாகும் தருவாயிலிருந்தது. ராமபிரான் கண்கள் கலங்கிவிட்டன. “ஐயோ, தேரையே! நான் குத்தும் போது நீ கத்தியிருந்தால் காப்பாற்றி இருப்பேனே, ஏன் கத்தவில்லை?” என்றார். அதற்குத் தேரை சொன்னது: “பெருமானே! யாராவது எனக்குத் துன்பம் செய்யும் போதெல்லாம் நான் ‘ராமா ராமா’ என்றுதான் சத்தமிடுவேன். அந்த ராமனே என்னைக் குத்துகிறார் என்னும்போது. யார் பெயரைச் சொல்லி ஓலமிடுவேன்?” ராமபிரான் கண்ணீரோடு சொன்னார்: “தேரையே, என்னை மன்னித்துவிடு. இது நான் அறியாமல் செய்த பிழை.” தேரை சொன்னது, “பெருமானே! ‘அறியாமல் செய்கின்ற பிழைகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன’ என்று சொன்னது உன் வாக்குத்தானே!” தேரையின் ஆவி முடிந்தது.

+9 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 7 शेयर

+8 प्रतिक्रिया 3 कॉमेंट्स • 5 शेयर