பெருமாள்

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 3 शेयर
sankariarul May 23, 2020

🏞️❤️அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்:--❤️🏞️ 💕ஓம் நமோ நாராயணாய நம என்று சொல்லுங்கள்💕 ❤️சனியன்று ஓம் நாராயணாய நம என்ற எட்டெழுத்து மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும் ஏன்? ❤️மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும். ❤️""இந்த மந்திரத்தை எந்த அளவுக்கு உளப்பூர்வமாக உச்சரிக்கிறோமோ அந்த அளவுக்கு மனம் பக்குவப்படும்"". ❤️இதிலுள்ள "நம "என்ற சொல்லுக்கு "உனக்கே நான் உரியவன்" என்பது அர்த்தம். 💕❤️""ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன்"" என்பது மந்திரத்தின் முழுப்பொருள்.❤️💕 💕ஓம் நமோ நாராயணா சொல்லி ... கொண்டே இருங்கள். 🌺சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்🌺 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 3 शेयर
சுமிதா May 22, 2020

+6 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 3 शेयर
sankariarul May 23, 2020

🌍💜108 திவ்ய தேசங்கள் வரலாறு💜🌍 💝🙏கோவிலுக்கு போலாம் வாங்க.!🙏💝 💟தினம் ஒரு திவ்ய தேசம் -💟 💟உ.வே. ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்...💟 💝💠14) திருநரையூர் எனும் நாச்சியார்கோயில்...💠💝 ❤️உத்ஸவ நடைமுறைகளில் தாயாருக்கே முதன்மை அளிக்க ப்பெற்றதால் நாச்சியார்கோயில் என்ற பெயர்.. ❤️நறை என்றால் மணம்..திருமகளுக்கு தேன் போன்று இவ்வூர் இனிமை யும், மணமும் தந்ததால் திருநறையூர் என்ற பெயரும் வந்தது... ❤️பெருமாள் பெயர் நறையூர்நின்ற நம்பி... கிழக்கு நோக்கி நின்ற கோலம் ❤️திருமணக்கோலம்.. நான்கு வியூக வடிவங்களான, பிரத்யும்னன், அநிருத்தன், சங்கர்ஷணன், சாம்பன் என கருவறைக்குள் காட்சி தருகிறார்... ❤️திருமங்கை யாழ்வார் , நம்பியை காதலனாக நிணைத்து,, பெரிய, சிறிய எனும் திருமடல்கள் பாடல் எழுதியுள்ளார்.. ❤️நறையூர் நம்பியே( பெருமாளே) இவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்ய முகம் காட்டியுள்ளார்.. ❤️பஞ்சஸம்ஸ்காரம் என்றால்;; ❤️1,சரீரத்தில் 12 இடங்களில் திருமண் இடுதல். ❤️2. அடியார்களின் நாமபெயர்களை வைத்துக்கொள்ளுதல்.. ❤️3. வலது தோளில் சக்கரமுத்திரையையும், இடது தோளில் சங்குமுத்திரை யையும் இட்டு க்கொள்ளுதல். ❤️4. பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து அதை சாப்பிடுதல்.. ❤️5. ஓம் நமோ நாராயணாய||| எனும் மந்திரத்தை சதா நெஞ்சில் பதித்தல். ❤️நீலன் என்பது இவருக்கு பெற்றோர் வைத்தபெயர்.. ❤️குமுதவல்லி எனும் தேவலோகப் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்க,, ❤️ அவளோ 1008 பேருக்கு நித்தம் அன்னமிட்டால் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றாள்.. ❤️இவர் சோழ மன்னனுக்கு கப்பம் கட்டும் சிறு மன்னன்...1008 பேருக்கு தினமும் அன்னமிடுதல் என்றால் சும்மாவா??? , ❤️அரசு வரிப்பணம் எல்லாம் செலவாயிற்று.. ❤️சோழனுக்கு கப்பம் கட்டமுடியவில்லை... இவர் ததியாராதனம் செய்த ஊர் திருமங்கைமடம் ஆகும்.. (திருவெண்காடு அருகேயுள்ளது).. ❤️சோழ மன்னன் இவரோடு ஜெயிக்கமுடியாததால் 3 நாட்களுக்கு சிறையில் அடைத்துவிட்டான்... ❤️அடியார்களுக்கு அன்னமிடத்தானே கப்பம் கட்டினேன்,,அதற்கு இந்த தண்டனையா??, என்று பெருமாளிடம் கரைந்தார்.. ❤️மூன்றாம் நாள் கனவில், நம்பி தோன்றி, "காஞ்சிபுரம் வேகவதி நதிக்கரையில் நிதிக்குவியல் இருக்கிறது... ❤️அதை எடுத்து கப்பம் கட்டிவிட்டு , உன் தொண்டை தொடர்"" என்றார் பகவான்... ❤️பொழுது விடிந்தது.."" காஞ்சி க்கு கூட்டிப்போங்கள்,, சிறைப்பனத்தை செலுத்தி விடுகிறேன்"" என்றார் நீலன்.. ❤️நம்பிக்கை இல்லாமல் சோழ மன்னன் ஆட்களை அவருடன் அணுப்பி வைத்தான்... ❤️காஞ்சி க்கு போன அன்றிரவு மீண்டும் பெருமாள் புதையல் இருக்குமிடத்தை காட்டினார்... ❤️நிதிக்குவியலை எடுத்து அமைச்சர் கையில் கொடுத்து விட்டு மீதியை அடியார்களுக்கு அன்னமிட வைத்துக்கொண்டார் நீலன்... ❤️இதையெல்லாம் கேள்விப்பட் சோழ மன்னன்,, நீலனை வரவழைத்து, மண்ணிப்புக்கோரி,, ❤️கப்பப்பணத்தையும் திரும்ப அவரிடமே ஒப்படைத்து விட்டான்.....இதெல்லாம் நறையூரானின் லீலை!!! ❤️திருமங்கையார் ஶ்ரீரங்கத்தில் மதில் கட்டினார் என்று முன்பே பார்த்தோம்... ❤️இதனால் மகிழ்ந்த ஶ்ரீரங்கன் அவரிடம்,, ""மடல் ப்ரபந்தங்களை நமக்கு அருளிச்செய்தல் ஆகாதோ??, என்று கேட்டிருக்கிறார்... ❤️அதற்கு ஆழ்வார் திருவரங்கன் முன் கைகட்டி மணிந்து,,"" நம்பி க்கு திருமடலும்,, தேவரீருக்கு திருமதிலும் அமைந்தது...... ❤️"*மதில் இங்கே, மடல் அங்கே!!"* என்றாராம். இந்த திருவெள்ளக்குளத்தில்தான் குமுதவல்லியைக் கண்டு மயங்கினார் நீலன்.. ❤️நீலனை திருமங்கையராக்கிய ஸ்தலம் திருநறையூர்... ❤️மேதாவி மகரிஷி அலைமகளே தனக்கு மகளாக பிறக்கவேண்டும் என்று தவம் செய்து வந்தார்...திருமகளுக்கு இளகியமனது , ❤️ வரம்கொடுக்க கீழே வந்தாள்.. பங்குனி உத்திரம் , ஆற்றங்கரையோரம் இருந்த வஞ்சுளமரத்தின் கீழ் ஶ்ரீதேவி அவதரித்தாள்... ❤️வாரி அணைத்து உச்சிமுகர்ந்து நாளொருவிதமாக அலங்கரித்து வளர்த்து வந்தார் மேதாவி... ❤️வஞ்சுள மரத்தடியில் பிறந்ததால் வஞ்சுளவல்லி என்று பெயர் ஊட்டினார்... குமரிப்பருவமடைந்தாள் மங்கை.. ❤️"" சுபர்ணா, மகாலட்சுமி பூவுலகில் எங்கு அவதரித்துள்ளார் என்று அறிந்து வா"" கருடனை அனுப்பினார் ஶ்ரீநிவாஸன்.. ❤️அவர் வந்து சொல்ல. இங்கு விஜயம் செய்தார் பரந்தாமன்... ❤️அதிதி வந்திருப்பதாக எண்ணி விருந்துக்கு ஏற்பாடு செய்தார் மேதாவி,, ❤️ "" கண்ணிப்பெண் நீர் வார்த்தால் உணவு உண்பேன் " என்றார் அதிதி.. வஞ்சுளவல்லியை அழைத்து, ❤️ நீரைக்கொடுத்து நீர் வார்க்க சொன்னார் ரிஷி.... ❤️தனது 4 வியூகங்களையும் சக்தியை தேவியின் திருமேனியோடு கலந்தார்...... ❤️இத்தலம் கிருஷ்ணாரண்யம் எனப்படுகிறது.. திருநறையூர் ,கிருஷ்ணாரண்யத்தின் துவக்கம்.... ❤️இங்கிருந்து தொடங்கி,, திருச்செறை,, திருக்கண்ணமங்கை ,, திருக்கண்ணபுரம் என்று தொடங்கி ,, ❤️ திருக்கண்ண ங்குடியில் முடிகிறது... பின் மேதாவி முனிவருக்கும் காட்சி கொடுத்தார் பரந்தாமன்.. ❤️இந்த ஷேத்திரத்தில் என் குமாரிக்கே முதலுரிமை வேண்டும் என்று பகவானிடம் கேட்டுக் கொண்டு கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடித்தார் ரிஷி.. ❤️அதனால் இங்கு நடைபெறும் திருவிழாக்களில் நாச்சியாருக்கே முதலுரிமை... ❤️கோயில் 6 பிரகாரங்களைக்கொண்டது... மேதாவி மகரிஷியால் பூஜிக்கப்பட்ட நரசிம்மர் 4வது பிரகாரத்தில் உள்ளார்... ❤️கருவறையில் மேதாவி தம்பதியினரை காணலாம்.. ❤️6 வது பிரகாரத்தில் 108 திவ்ய தேசங்களின் மூர்த்தங்களும் பவனிவரும் வடிவில் காட்சி தருகின்றனர்... ❤️இவ்வூரில் வயதான ஓர் வைதீகப் பிரம்மச்சாரி,, ❤️ ""*ஒவ்வொருவரும் வந்து அங்கே போனேன், பெருமான் வீதியுலா வருவதைக்காணக் கண்கோடி போதாது ,, என்றெல்லாம் சொல்கின்றனர். ❤️என்னால் அப்படிபோகமுடியவில்லையே,!,இம்மண்ணுலக வாழ்வு முடிவதற்குள் ❤️108 திருப்பதி பெருமாளையும் சேவிக்க அருள் புரிவாயா? ""* என்று நறையூர் நம்பியிடம் புலம்புவான்.... ❤️இந்தத்தொண்டனு க்காக , சொப்பனத்தில் பரந்தாமன், 108 திவ்ய தேசங்களின் விக்கிரகங்களை கொடுத்திருக்கிறார்... ❤️ கனவு முடிந்து எழுந்தால் அருகில் 108 பிரதிமைகள் இருந்தது.... ஆனந்தம் ❤️அவருக்கு....நீண்ட காலம் 108 பெருமாள்களையும் பூஜித்து வந்தார்.... ❤️தள்ளாமை வந்த பிறகு கோயிலுக்கு கொடுத்துவிட்டார்...அவர்களை த்தான் ஆறாவது சுற்றில் தரிசிக்கிறோம்.. ❤️""* இன்னும் ஒரு நாழிகை கழித்து இப்பிள்ளை பிறக்குமானால் மூவுலகங்களையும் கட்டி ஆளும் ""** என்று சோதிடர்கள் கூறவே,, ❤️ பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த சுபதேவ சோழனின் , , பட்டத்தரசி ,கமலவதி, இரு கால்களையும் கட்டித்தலைகீழாக தூக்கி நிறுத்தச்சொன்னாள்..... ❤️ஒருநாழிகை கழித்துக் கீழே இறக்கினர் தாதியர் , உடனே ஆண்குழந்தை பிறந்தது.. ❤️காலம் கடந்ததால் விழிகளில் உதிரம் ஏறி வெள்ளை விழி சிவப்பாயிருந்தது... ❤️""என்பிள்ளை செங்கண்ணனோ?! "" என்று வருந்திய கமலவதி உயிர் துறந்தாள்...அப்பிள்ளைதான், ❤️கோச்செங்கட் சோழராய் தனக்கு நிகரில்லை எனும்படி நீதிநெறியோடு அரசாண்டார்.. ❤️எழுபது சிவாலயங்களை எழுப்பினார்...63 நாயன்மார்களில் இவரும் ஒருவர்.. ❤️தன் இல்லாளுடன் கயை சென்று பித்ருகர்மாக்களைச்செய்தான் சோழமன்னன்... ❤️மன்னன் இல்லாத சமயம் ,,பகைவர்கள் தாக்க,, சோழவேந்தன் ஒரே நாளில் ஆண்டியானான்... ❤️மணம்வெதும்பிய செங்கணான் காட்டிலே மறைந்து வாழ்ந்துவந்தான்.. ❤️இங்குள்ள மணிமுத்தா நதியில் நீராடும் மகரிஷிகளைச் சந்தித்து வந்தான்... " வேந்தே! ❤️ இம்மணிமுத்தா ஆற்றில் ஸ்நானம் செய்து, எம்பெருமானை உள்ளண்போடு வழிபடுங்கள் இழந்த அரசு மீண்டும் கிட்டும்"" ❤️ என்று கூறி , எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தனர். ❤️அவ்வாறு இருக்கையில் , ஒருநாள் நதியில் நீரராடி மூழ்கி எழுந்திருக்கையில், ஒரு வாளொன்று கையில் தட்டுப்பட்டது... ❤️எடுத்தான்... தேகத்தில் புதுரத்தம் பாய்ந்தார்போலிருந்தது,, அரசனது நம்பிக்கை யான விசுவாசிகள் வந்தனர்...சண்டை ஆரம்பமானது... ❤️தெய்வ வாளை வீசினாலே ,குலைகுலையாய் தலைகள்விழுந்தன... ❤️அநியாயமாக ஆட்சியை கைப்பற்றியவர்கள் , உயிருக்கு பயந்து ஓடினர்... ❤️விஷ்ணு பக்தனாக அரியணையைத்திரும்ப பெற்றான் செங்கணான்... இத்தலத்தில் தன்பெயரில் திருமண மண்டபம் கட்டினான்.. ❤️தங்கத்தால் விமானம் அமைத்தான்... ❤️1.மணிமுத்தா தீர்த்தம்.. ❤️2. சங்கர்ஷட தீர்த்தம்..பிரம்மாவின் தோஷம் போக்கியது.. ❤️3. பிரத்யும்ன தீர்த்தம்..பானுதத்தன் எனும் ராட்சசனின் சாபத்தை நீக்கியது.. ❤️4. அநிருத்த தீர்த்தம்.. தேவேந்திரனின் சாபத்தை நீக்கியது.. ❤️5 வது தீர்த்தம்..சாம்பவ தீர்த்தம்..சப்த ரிஷிகளும் அனுதினமும் இங்குநீராடி நீண்ட காலம்தவம் செய்துள்ளனர்.. ❤️இவ்வாறு இங்கு 5 தீர்த்தங்கள் உள்ளது.. ❤️தினப்படி ஆறுகால ஆராதனை நடக்கிறது... திருநறையூரில் பெருமாளுக்கு நைவேத்தியம் ஆனதும் ஆறு காலமும் கல்கருடருக்கும் ஆராதனை நடைபெறுகிறது.. ❤️அதென்ன கல்கருடர் ?? !! ❤️அற்புதமான சிற்பி அவர்...கண்எடுக்காமல் சிலைகளை வடிவமைப்பதில் திறமையானவர்... ❤️ஒருமுறை ஒரு கருடனை செதுக்கும்படி பணி வந்தது... ❤️ஆகம விதிகளுக்குட்பட்டு,, கருடனை செதுக்கினார்...அடி மூக்கில் ஓர் பள்ளமான வடுவும் உண்டாக்கியாயிற்று.. ❤️இடுப்பில் சண்டாதகமும்(ஒட்டியாணம்),செதுக்கியாயிற்று..சிறகுகளைச் செதுக்கியதும்,, ❤️""*நிஜமான கருடன் போலவே உள்ளாரே!!,,பிராணப்பிரதிஷ்டை (உயிரூட்டுதல்) , செய்து பார்ப்போம் , "* என்று முயற்சி க்க, ❤️ உயிர்பெற்ற கருடன் மேலே பறக்கத்தொடங்கினார்.. சிற்பி நடுங்கிவிட்டார்.."" ❤️இதென்ன விபரீதம்!,, கூலியும் போய், சிலைக்கு நஷ்ட ஈடு கேட்பார்களே?,, இனி யார் நமக்கு வேலை தருவார்?? "" ஷணத்தில் அவர் மணம் கவலை கொண்டது.. ❤️கையிலிருந்த உளியை கருடன் மேல் வீசினார்... ❤️மூக்கில் அடிபட்ட கருடன் கீழே இறங்கினார்...அவர் இறங்கிய இடம் நாச்சியார்கோயில் ஆகும்.. ❤️இந்த ஷேத்திரத்தின் மகாமண்டபத்தில் சாளக்கிராம வடிவத்தில் நீள்சிறகும் , ❤️ நீண்ட முடியும் கம்பீரமான திருமேனியோடு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிகொடுத்து வருகிறார்.. ❤️கல்கருட சேவை,,பங்குனிமாதம். அந்தனை பெரிய கருடனை மூலஸ்தானத்திலிருந்து நான்கு பேர் எளிதாய் தூக்கி விடுகிறார்கள்... ❤️ஆனால் வெளியே வந்ததும், கருடனின் எடை அதிகமாக நால்வர்தோள் கொடுக்கின்றனர்... மறுபடி எடை கூட 16 பேர் தோள் கொடுக்கின்றனர்.. ❤️பிரகாரம் சுற்றும்போது 32 பேர்.. அடுத்து 64 பேர் தூக்குகின்றனர்...நாச்சியார்கோயில் கருடசேவை அற்புதம். ❤️உள்ளே குழந்தை மாதிரி இருப்பவர் , வெளிப்படுகையில் விஸ்வரூபம் எடுப்பதாக ஐதீகம்.. ❤️ மீண்டும் உள்ளே போகும்போது அவ்வாறே ஆட்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போவார். ❤️ஶ்ரீகருடபகவான் திருமேனியில் நவநாகங்களை அணிந்திருக்கிறார்.... ❤️இவரை த்தரிசிப்பதால் நாகதோஷம், செவ்வாய் தோஷம், நவக்கிரக தோஷம் அணைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.... ❤️முக்தி தரும் 12 ஷேத்திரங்களில் நாச்சியார்கோயிலும் ஒன்று.. ❤️ஓம்நமோ நாராயணாய |||❤️ 💟💝நல்ல கோவில் சுற்றி சுற்றி பாா்த்தீங்களா || ❤️நறையூர்நின்ற நம்பி...❤️ கும்பிட்டு கொள்ளுங்கள்.💝💟 💟💖சர்வம் கிருஷ்ணார்பணம்💖💟 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर