பெருமாள் மந்திரம்

sabctamiltv Sep 20, 2020

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
J M R Sep 16, 2020

📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿 தினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள். 📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿  🍃உரு ஏறத் திரு ஏறும் என்பது திருமூலரின் வாக்கு;🍃 உரு ஏற என்றால் ஒரு வாக்கியத்தை/வார்த்தையை திரும்பத் திரும்ப மனதுக்குள் சொல்லுதல் என்று பெயர்;இதில் எந்த வாக்கியம்/வார்த்தை குறிப்பிட்ட எண்ணிக்கைகளில்  உருஏற்றினால் நம்மை இறை சக்தியுடன் தொடர்பு கொள்ள வைக்குமோ ,அதுவே மந்திரங்கள்என்றுஅழைக்கப்படுகின்றன; மந்திரங்கள் இந்திய மொழிகளில் தமிழ் மற்றும் சமஸ்க்ருதத்தில் மட்டுமே தோன்றின;உலகில் மனிதர்களால் பேசப்படும் 6000 மொழிகளில் பெரும்பாலான மொழிகளில் மந்திரங்கள்/மந்திர வார்த்தைகள் கிடையாது. திரு என்றால் நமது முகத்தில் பிறரால் உணரப்படும் ‘தேஜஸ்’ என்று பெயர்.நமது உலகம் என்பது நாம் தினசரி சந்திக்கும் மனிதர்களும்,நாம் அடிக்கடி சென்று திரும்பும் இடங்களுமே! இந்த உலகத்தில் நாம் ஒருவரை முதன் முதலில் சந்திக்கும் போது அவர்களின் கண்கள் அல்லது முகமே வசீகரமாக இருப்பதை உணருவோம்;அது அவரவர் முற்பிறவியில் செய்த நற்செயல்களைப் பொறுத்து அமையும். அதே போல நம் ஒவ்வொருவருமே நமது முகத்திற்கு ‘தேஜஸ்’ஸை உருவாக்கி,நமது வாழ்நாள் முழுவதும் அதை வளர்த்துக் கொண்டே செல்லலாம்;உங்களது ஆன்மீக அல்லது யோகா அல்லது தியான குருவின் அருகில் சென்று சில நிமிடங்கள் நின்றால் உங்கள் மனமும் ஆழ்ந்த அமைதி அடைவதை உணருவீர்கள்;இந்த ஆழ்ந்த அமைதியானது அவர்களின் தினசரி தியானம்/யோகா/பூஜையினால் அவர்களுக்கு உருவானது ஆகும்.அதையே நாமும் நமக்குள் உருவாக்க முடியும். அப்படி உருவாக்கும் போது நமது சிறுசிறு மனக்குழப்பங்கள் நீங்கிவிடும்;எதற்கெடுத்தாலும் பயப்படும் அல்லது குழம்பும் மனநிலை நம்மைவிட்டு நீங்கிவிடும்;எந்த ஒரு பிரச்னையையும் வாய்ப்பாக எதிர்கொள்ளும் திறனை நமது ஆழ்மனம் பெற்றுவிடும்;இதை அனுபவத்தினால் மட்டுமே உணரமுடியும். நாம் வாழ்ந்து வருவது கலியுகமாக இருப்பதால்,நம்மில் பலருக்கு இந்த தினசரி தியானம் அல்லது தினசரி பூஜை அல்லது தினசரி யோகா கைகூடுவதில்லை;அப்படிப்பட்டவர்கள் உதாரணமாக தினமும் 108 முறை"ஸ்ரீ ராம ஜெயம் "  அல்லது "ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ""என்று எழுதிவந்தாலே போதும்;நமது அனைத்துப் பிரச்னைகளும் படிப்படியாக 90 வது நாளில் இருந்து நீங்கத் துவங்கும்;ஒருவருடம் வரை விடாமல் எழுதினால் நாம் விரும்பும் அமைதியான/செல்வச் செழிப்பான வாழ்க்கை நமக்கு உருவாகத் துவங்கும்;மூன்று வருடம் வரை ஒருநாள் விடாமல் எழுதினால்(குடும்பத்தில் சுப காரியங்கள்,அசுப காரியங்களில் கலந்து கொண்டால் மூன்று வாரம் வரை எழுத இயலாது;எனவே,விட்டு விட்டு எழுதினால் 900 நாட்கள் வரை)இப்பிறவி முழுவதும் அமைதியான,கடன்கள்,நோய்,எதிரி இல்லாத வாழ்க்கை அமைந்துவிடும்.

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 1 शेयर