சிவன் பாடல்

#திருநாவுக்கரசர்_தேவாரம். #ஐந்தாம்_திருமுறை. #002_கோயில்(தில்லை)#திருப்பதிகம். பண் : திருக்குறுந்தொகை. ராகம் : நாதநாமக்ரியா. 🐘#பனைக்கை_மும்மதம்🐘 ~ பாடியவர் : #திருமதி_எஸ்_சௌம்யா. திருச்சிற்றம்பலம். #பனைக்கை மும்மத வேழம் உரித்தவன் நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன் அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத் தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ. 1. #தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை மூர்த்தி யைமுத லாய ஒருவனைப் பார்த்த னுக்கருள் செய்தசிற் றம்பலக் கூத்த னைக்கொடி யேன்மறந் துய்வனோ. 2. #கட்டும் பாம்புங் கபாலங்கை மான்மறி இட்ட மாயிடு காட்டெரி யாடுவான் சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை எட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ. 3. #மாணி பால்கறந் தாட்டி வழிபட நீணு லகெலாம் ஆளக் கொடுத்தவென் ஆணியைச் செம்பொ னம்பலத் துள்நின்ற தாணு வைத்தமி யேன்மறந் துய்வனோ.4 #பித்த னைப்பெருங் காடரங் காவுடை முத்த னைமுளை வெண்மதி சூடியைச் சித்தனைச் செம்பொ னம்பலத் துள்நின்ற அத்த னையடி யேன்மறந் துய்வனோ. 5. #நீதி யைநிறை வைமறை நான்குடன் ஓதி யையொரு வர்க்கும் அறிவொணாச் சோதி யைச்சுடர்ச் செம்பொனி னம்பலத் தாதி யையடி யேன்மறந் துய்வனோ. 6. #மைகொள் கண்டனெண் தோளன்முக் கண்ணினன் பைகொள் பாம்பரை யார்த்த பரமனார் செய்ய மாதுறை சிற்றம்ப லத்தெங்கள் ஐய னையடி யேன்மறந் துய்வனோ. 7. #முழுதும் வானுல கத்துள தேவர்கள் தொழுதும் போற்றியுந் தூயசெம் பொன்னினால் எழுதி மேய்ந்தசிற் றம்பலக் கூத்தனை இழுதை யேன்மறந் தெங்ஙன முய்வனோ. 8. #காரு லாமலர்க் கொன்றையந் தாரனை வாரு லாமுலை மங்கைம ணாளனைத் தேரு லாவிய தில்லையுட் கூத்தனை ஆர்கி லாஅமு தைமறந் துய்வனோ. 9. #ஓங்கு மால்வரை யேந்தலுற் றான்சிரம் வீங்கி விம்முற வூன்றிய தாளினான் தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப் பாங்கி லாத்தொண்ட னேன்மறந் துய்வனோ. 10. திருச்சிற்றம்பலம். 🌻🏵🌻🏵🌻🏵🌻🏵🌻🏵🌻🏵🌻🏵🌻

+13 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 3 शेयर

+3 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 2 शेयर

#திருஞானசம்பந்தர்_தேவாரம். #முதல்_திருமுறை ~ #135_திருப்பராய்த்துறை. 🍁🌹#நீறு_சேர்வதோர்🌹🍁 பண் : மேகராகக்குறிஞ்சி. ராகம் : நீலாம்பரி. பாடியவர் : #திருத்தணி_திரு_என்_சுவாமிநாதன். திருச்சிற்றம்பலம். #நீறு சேர்வதொர் மேனியர்நேரிழை கூறு சேர்வதொர் கோலமாய்ப் பாறு சேர்தலைக் கையர்பராய்த்துறை ஆறு சேர்சடை அண்ணலே. 1. #கந்த மாமலர்க் கொன்றை கமழ்சடை வந்த பூம்புனல் வைத்தவர் பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை அந்த மில்ல அடிகளே. 2. #வேதர் வேதமெல் லாமுறையால்விரித் தோத நின்ற ஒருவனார் பாதி பெண்ணுரு ஆவர்பராய்த்துறை ஆதி யாய அடிகளே. 3. #தோலுந் தம்மரை யாடைசுடர்விடு நூலுந் தாமணி மார்பினர் பாலும் நெய்பயின் றாடுபராய்த்துறை ஆல நீழல் அடிகளே. 4. #விரவி நீறுமெய் பூசுவர்மேனிமேல் இரவில் நின்றெரி யாடுவர் பரவி னாரவர் வேதம்பராய்த்துறை அரவ மார்த்த அடிகளே. 5. #மறையு மோதுவர் மான்மறிக் கையினர் கறைகொள் கண்ட முடையவர் பறையுஞ் சங்கும் ஒலிசெய் பராய்த்துறை அறைய நின்ற அடிகளே. 6. #விடையு மேறுவர் வெண்பொடிப் பூசுவர் சடையிற் கங்கை தரித்தவர் படைகொள் வெண்மழு வாளர் பராய்த்துறை அடைய நின்ற அடிகளே. 7. #தருக்கின் மிக்க தசக்கிரி வன்றனை நெருக்கி னார்விர லொன்றினால் பருக்கி னாரவர் போலும் பராய்த்துறை அருக்கன் றன்னை அடிகளே. 8. #நாற்ற மாமல ரானொடு மாலுமாய்த் தோற்ற மும்மறி யாதவர் பாற்றி னார்வினை யான பராய்த்துறை ஆற்றல் மிக்க அடிகளே. 9. #திருவி லிச்சில தேரமண் ஆதர்கள் உருவி லாவுரை கொள்ளேலும் பருவி லாலெயில் எய்து பராய்த்துறை மருவி னான்றனை வாழ்த்துமே. 10. #செல்வ மல்கிய செல்வர் பராய்த்துறைச் செல்வர் மேற்சிதை யாதன செல்வன் ஞானசம் பந்தன செந்தமிழ் செல்வ மாமிவை செப்பவே. 11. திருச்சிற்றம்பலம். 🌹🍁🌹🍁🌹🍁🌹🍁🌹🍁🌹🍁🌹🍁🌹

+18 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 6 शेयर