சித்தர்

Seetha Sep 1, 2020

9 கோடி சித்தர்கள் முக்தி அடைந்த இடம் ஒரே இடத்தில் 9 கோடி சித்தர்கள் முக்தி அடைந்து இருக்கிறார்கள் என்றால் அந்த இடம் எத்தகைய மகிமை வாய்ந்த புண்ணியதலமாக இருக்கக்கூடும். ஒரு இடத்தில் ஒரு சித்தர் ஜீவசமாதி அடைந்து இருந்தாலே அந்த இடம் அருள் அலைகள் நிரம்பிய இடமாக திகழும். சில இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சித்தர்கள் அடங்கி இருப்பார்கள். உதாரணத்துக்கு மயிலாடுதுறை, சென்னை அருகே சித்தர்காடு (திருமணம்) போன்ற இடங்களை சொல்லலாம். இத்தகைய இடங்களில் சித்தர்களின் அருள் பொங்கி வழியும். அதே சமயத்தில் ஒரே இடத்தில் 9 கோடி சித்தர்கள் முக்தி அடைந்து இருக்கிறார்கள் என்றால் அந்த இடம் எத்தகைய மகிமை வாய்ந்த புண்ணியதலமாக இருக்கக்கூடும். சித்தர்கள் மீது நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த மகிமை புரியும். அந்த இடம் வடக்கு பொய்கை நல்லூர். இந்த ஊரின் சாலை வலதுபுறம் அமைந்துள்ள நந்திராதேஸ்வரர் ஆலயத்தைக் கடந்ததும் பிரம்மாண்டமான முகப்புத்தோற்றத்துடன் கோரக்கர் சித்தரின் ஜீவசமாதிபீடம் அமைந்துள்ளதை காணலாம். இந்த ஜீவ சமாதி பீடமே கோரக்கர் சித்தர் ஆசிரமமாகவும் திகழ்கிறது. இந்த ஜீவசமாதி ஆலயத்துக்கு எப்போது சென்றாலும் முன்பகுதியில் காவி உடை அணிந்த சிவனடியார்கள் நூற்றுக்கணக்கில் நிறைந்துள்ளதை பார்க்கலாம். திருவண்ணா மலை கிரிவல பாதையில்தான் இப்படி காவி உடை சிவனடியார்கள் இருப்பார்கள். ஆனால் தமிழகத்தில் ஒரு சித்தரின் ஜீவசமாதி ஆலயத்தில் துறவிகள் குவிந்து இருப்பது இங்கு மட்டுமே. அந்த துறவிகளில் பலர் நிரந்தமாக கோரக்கர் சித்தர் ஆசிரமத்தில் தங்கி உள்ளனர். முக்கிய நாட்களில் பேருந்துகளிலும், ஆட்டோக்களிலும், கார்களிலும் பக்தர்கள் கூட்டம் குவிந்தபடி இருக்கிறது. ஆசிரமத்தின் உள்ளே நுழையும்போதே ஏதோ ஓர் இனம்புரியா அமைதி நமக்குள் ஊடுருவி விடுவதை உணர முடிகிறது. ஒன்பது கோடிச் சித்தர்கள் முக்தி அடைந்த இடம் என்பதால் மனதுக்குள் வேறு சிந்தனைகளே வருவது இல்லை. மனம் முழுக்க கோரக்கர் சித்தர் நிறைந்து விடுகிறார். வடக்குப் பொய்கை நல்லூரின் இதயப்பகுதியாக அமைந்துள்ள கோரக்கரின் ஜீவ சமாதி பீடம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பீடத்தின் முன், அழகிய அர்த்த மண்டபமும், மகா மண்டபமும் உள்ளன. கருவறை ஸ்தூபி மின்னும் பொற்கூரைபோல் விளங்குகிறது. அந்த அமைப்பு சிதம்பரம் கோவில் கருவறை தங்கம்முலாம் போர்த்தி மின்னுவதை போல அமைந்துள்ளது. எப்போதும் நறுமணம் கமழும் வகையில் புதிய பூக்களால் கோரக்கரின் ஜீவசமாதி பீடம் அலங்கரிக்கப்படுகிறது. அங்குள்ள மண்டபத்தின் எந்த பகுதியில் நாம் அமர்ந்து கண்மூடி சில நிமிடங்கள் தியானம் செய்யும்போதே உடலும் மனமும் மிகமிக லேசாகி பஞ்சு போல மாறுவதை உணர முடியும். இதுவே கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி பீடம் தரும் அற்புதமான அதிர்வலை ஆகும். இந்த அற்புதத்தையும் அதிர்வையும் நாம் அனுபவிக்க வேண்டுமானால் வடக்கு பொய்கை நல்லூருக்கு செல்ல வேண்டும். அந்த ஊரில் கிடைக்கும் ஆனந்தமே தனி சுகமாகும். ஆசிரமத்தின் கருவறைப் பகுதியில் நீள் சதுர வடிவில் செங்கற்களால் கட்டப்பட்ட சமாதிமேடை அமைந்துள்ளது. இந்த மேடைக்குக் கீழ் அமைந்துள்ள நிலவறையில்தான் போகர், கோரக்கரை சமாதியிட்டார். சமாதி மேடையின் மேல் முன்பகுதியில் கருங்கற்களால் செய்யப்பட்ட பாதரட்சையுடன் கூடிய இரண்டு திருவடிக்கமலங்கள் உள்ளன. அடுத்து பின்பகுதியில் அரை அடி தூரத்தில் இரண்டு சிறிய திருவடிக் கமலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திருவடிகள் லிங்கத் திருமேனிகளாகக் கருதப்பட்டு, கோமுகியுடன் கூடிய ஆவுடையார் அமைப்பின் மேல் இடம்பெற்றுள்ளன. பெரிய திருவடிகளின் கீழாக இருபத்து நான்கு உருத்திராட்ச மணிமாலை ஒன்றின் இடையில் ஆறு இதழ் கொண்ட சுதை மலர் ஒன்று வடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரிய திருவடிகள் சிவபெருமானின் பாதங்களாகவும் சிறிய திருவடிகள் உமையவளின் பாதங்களாகவும் கருதப்பட்டு, இவற்றுக்கு அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. தியானம் முடித்து பீடத்தை வலம் வரும்போது பிரகாரத்தில் உள்ள நாகலிங்க மரமும் நமக்கு ஆசிகளை வழங்கும் விதமாக இலைகளை உதிர்த்தபடியே இருக்கிறது.

+17 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 13 शेयर

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
sivam Aug 29, 2020

+8 प्रतिक्रिया 4 कॉमेंट्स • 3 शेयर
arul Aug 24, 2020

+6 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 3 शेयर