கலாச்சாரம்

பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தாம் மகிழ்ந்து இருப்பதாக மகாலட்சுமி கூறுகிறாள். எனவே, குங்குமம் தான் உயர்ந்தது. பொட்டு வைத்துக் கொள்வதையே, நாகரீகக் குறைவாக சில சகோதரிகள் கருதும் சூழலில் ஸ்டிக்கராவது வைத்துக் கொள்கிறார்களே என்று அல்ப சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நெற்றியில் குங்குமம் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது. அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது சிறந்தது.

+6 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 2 शेयर

தாலியின் ஒன்பது இழைத் தத்துவம் …! 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 தாலி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே திருமண பந்தத்தை ஏற்படுத்தும் ஓர; அடையாளம் ஆகும். தாலி, குங்குமம், மெட்டி அணிந்துள்ள ஒரு பெண் திருமணமானவள் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த தாலி பொன்னால் இருக்க வேண்டியது அல்ல. மகிமை நிறைந்த மஞ்சளால் கூட ஆகியிருக்கலாம். இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்த திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது. தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர். நாளடைவில் 'தாலம்" என்ற பெயர்தான் தாலியாக மாறியிருக்கிறது. பதினோராம் நூற்றாண்டில்தான் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் 'தமிழர் திருமணம்" என்கிற புத்தகம். மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது. ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது : திருமணத்தின் போது பெண் கழுத்தில் கட்டுப்படுகிற மாங்கல்ய தாலிக் கயிறானது ஒன்பது நு}ல் இழைகளைக் கொண்டது. அந்த ஒன்பது இழைகளுக்கும் ஒவ்வொரு பொருளுண்டு. தெய்வீகக் குணம் தூய்மைக் குணம் தொண்டு தன்னடக்கம் ஆற்றல் விவேகம் உண்மை உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல் மேன்மை. இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது.

+6 प्रतिक्रिया 2 कॉमेंट्स • 6 शेयर

கங்கையின் அறிவியல் ரீதியான வரலாறு என்ன? உலகில் பவித்திரமானது, பரிசுத்தமானது என்று எதனைக் குறிப்பிட்டாலும், கங்கை தான் முதலில் நம் நினைவுக்கு வரும். அசுத்தமான இடத்தில் கூட கங்கையைத் தெளித்தால், அந்த இடம் பரிசுத்தமானதாகி விடும் என்பது சாஸ்திர நம்பிக்கை. எந்த பூஜையிலும் முதலில் ஒரு கலசத்தில் நீர் எடுத்து, அதில் கங்கையை ஆவாகனம் செய்து, அந்தத் தீர்த்தத்தால் பூஜை செய்யும் இடத்தையும், பூஜா திரவியங்களையும் புனிதப்படுத்திக் கொள்வது சாஸ்திர முறை. இந்துவாகப் பிறந்தவர்கள் இறக்கும் தறுவாயில், கங்கா ஜலத்தை வாயில் ஊற்றி, அவர்களது பாவங்களை நீக்கிப் புனிதர்களாக இறைவனடி சேர வழிவகுக்கும் சடங்கும் உள்ளது. இத்தகைய புனித கங்கை, பாவங்களைப் போக்கும் பவித்திரதேவி மட்டுமல்ல, ஞானத்தை தரவல்ல சக்தியும் அவள் தான் என்கின்றன சாஸ்திரங்கள்! கங்கை தீர்த்தமும் அதன் மகத்துவமும், ஒரு அறிவியல் அலசல் ! இந்துக்களின் பெரும்பாலான கதைகளில் கங்காதேவி எனும் நதியின் கதைகள் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்...துக்கம் நீக்கும் கங்கை நீர்,புனிதம் மிகு கங்கை நீர் ,நோய் நிவாரணி கங்கை,போன்ற கதைகளைகளையும் வியாகியானங்களையும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.... கங்கை புனிதமானது என்று சில ஆன்மிகவாதிகள் சொல்கின்றனர் ... கங்கா தீர்த்தம் எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டு போகாது... ஆனாலும் என்ன ஆச்சரியம் என்றால் விஞ்ஞானிகளும் இதே கருத்துகளையே வலியுறுத்தி உள்ளனர்.... கங்கை ஊர் சிறந்த கிருமிநாசினி எனும் கருத்து சிலரால் கூறப்பட்டது.....அது தொடர்பாக புது டெல்லியில் உள்ள மலேரியா ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட அறிக்கை மிகவும் வியப்புக்கு உள்ளாக்கியது....அவர்கள் மலேரியா காய்ச்சல் மற்றும் நுளம்புகள் தொடர்பான சில பரிசோதனைகளை செய்யும்போது இந்த தகவல்களை வெளியிட்டனர்.... யமுனை நதி மற்றும் கங்கை என்பவற்றுடன் சில நதிகளின் நீரை பரிசோதித்த போது கங்கை நதியின் நீரில் மட்டும் நுளம்புகள் பெருகவில்லை என அவர்கள் ஒரு தகவலை வெளியிட்டனர்....ஆரம்பத்தில் சில ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த முடிவை நகைத்தாலும் பின்பு அதற்குரிய விஞ்ஞான காரணம் வெளியிட்ட பின்பு ஏற்று கொண்டனர்..... பிரெஞ்சு நாட்டு மருத்துவ வல்லுநர் டாக்டர் டி ஹெரில்லி கங்கை நீர் பற்றி பின்வருமாறு கூறுகிறார்..."காலரா ,சீதபேதி இது மாதிரி நோயாள இறந்து போனவங்க பிணம்கள் கங்கையில் மிதந்து வருவதை பார்த்து இருக்கிறேன்.சாதாரண நீரில் அது மாதிரி பிணங்கள் வருகின்ற போது அதை சுற்றி உள்ள நீர்நிலைகள் யாவும் கிருமித்தொற்றுக்கு உள்ளாகும் ..ஆனால் கங்கையில் அதுமாதிரி எதுவித கிருமிகளை கூட பார்க்க முடியவில்லை என்பது மிகவும் ஆச்சரியத்தையும் தூண்டுதலையும் உண்டு பண்ணுகிறது" என்று கூறினார் கனடா நாட்டின் "மெக்கில்" பல்கலை கழகத்தை சேர்ந்த டாக்டர் எ.சி.ஹாரிசன் என்பவர் இது தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்...அவர் அது தொடர்பாக கருத்து வெளியிடுகையில் "கங்கை நீர் தொடர்பான ஆராய்சிகளை மேற்கொண்ட எனக்கு வியப்பு மட்டுமே மீதமாக இருந்தது....எந்த ஒரு கிருமியை நீரினில் போட்டாலும் 3.15 தொடக்கம் 4 மணித்தியாலங்களுக்குள் அவை யாவும் அழிந்து விடுகின்றன"என வியப்புடன் கூறினார்... 19 ம் நூற்றாண்டில் பிரிட்டிஸில் இருந்து வந்த கடல் ஆராய்வாளர் சி.இ.நெல்சன் இது பற்றி கூறும் போது "கல்கத்தாவில் இருந்து இங்கிலாந்து புறப்படும் போது நாங்க ஹிக்ளி (மேதகு வங்கத்தில் கங்கை இந்த பெயராலே அழைப்பர் ) எடுத்துகொண்டு போவோம்..இங்கிலாந்து செல்லும் வரைக்கும் அது கெட்டு போகாமல் இருக்கும்...ஆனால் திரும்பி வரும் பொது இங்கிலாந்தில் எடுக்கும் நீர் வரும் வழியிலே கெட்டு போய் விடுகிறது..நல்ல வேளை வரும் வழியில் எகிப்து துறைமுகத்தில் நீரை பெற்று கொள்ளலாம்."என்றார்.......இது கடவுளின் செயலா அல்லது எதேச்சையா என்பது பற்றி அறிய ஆவலாக உள்ளது"என்றார்.... அது எல்லாம் இருக்கட்டும்....இந்த அற்புத தன்மைக்கு என்ன காரணமாக இருக்கும் என சில விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து சில முடிவுகளை வெளிகொனர்ந்தனர்.... இந்திய மருத்துவர்களின் கருத்து படி இமய மலையில் உள்ள மூலிகைகள் இதுக்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர்.... ஆனால் கங்கை நீரிலே கதிரியக்க கனிமங்கள் (Radio -active minerals)உள்ளதாகவும் அதுதான் இந்த அசாதாரண சக்திக்கு காரணம் என்கின்றனர்.... வெள்ளி-நிக்கல் -இரும்பு-குரோமியம்--இது மாதிரி கனரக உலோக தாதுகள் கங்கை நீரிலே கரைந்து இருப்தால்தான் இந்த சக்தி என்றும் இந்த கனிமங்கள் கிருமிகளை அளிக்க கூடியது என்றும் சில விஞ்ஞான அமைப்புகள் கூறுகின்றன ... எது எவ்வாறு இருப்பினும் இந்த காரணங்களினால் தான் கங்கையில குளிச்சா எல்லாம்(நோய்கள் ) தொலையும் என்கிறது...

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 1 शेयर