ஆரோக்கிய குறிப்பு

வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு தூங்குவதன் நன்மைகள் : பாட்டி வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம் தான் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவது. வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து கொண்டால், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது. இதற்கு வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட் தான் காரணம். இரத்தம் சுத்தமாகும் வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட்டானது, சருமத்தின் வழியே ஊடுருவி இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தை சுத்தப்படுத்துமாம். பாக்டீரியாக்களை அழிக்கும் வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் அதிகம் உள்ளது. எனவே இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுமாம். இதய ஆரோக்கியம் வெங்காயத்தை தினமும் பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், இதய ஆரோக்கியம் மேம்படுமாம். முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாமாம். கழுத்து வலி, காது வலி நீங்கும் பாதங்களில் வெங்காயத்தை வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து தூங்கினால், இதுவரை மிகுந்த தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்த கழுத்து வலி, காது வலி போன்றவை நீங்குமாம். வயிற்று பிரச்சனைகள் முக்கியமாக வயிற்றுப் பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கிவிடுமாம். அதுமட்டுமின்றி சிறுநீரக பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடுமாம். குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் உங்களுக்கு குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகும். எப்படியெனில் வெங்காயத்தை பாதத்தில் வைக்கும் போது உடலினுள் ஒருவித வெப்பம் உருவாகி, அதனால் பல்வேறு பிரச்சனைகள் நீங்குமாம். துர்நாற்றமிக்க பாதம் உங்கள் பாதங்களில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசுமாயின், தினமும் பாதங்களில் வெங்காயத்தை வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், பாதங்களில் இருந்து வீசும் துர்நாற்றம் போய்விடுமாம். சளி, காய்ச்சல் சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவஸ்தைப்படுபவராயின், வெங்காயத்தை இரவில் படுக்கும் போது உள்ளங்கால்களில் வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், சளி, காய்ச்சல் போன்றவை குணமாகுமாம்.

+9 प्रतिक्रिया 6 कॉमेंट्स • 43 शेयर
Subramani K Sep 15, 2019

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 10 शेयर

*சித்தர்கள் நுரையீரலில் உருவாகும் கோழையை (சளியை)யமன் என்ற பெயரில் அழைத்தார்கள். ஏனெனில் இந்த சளியாகிய கோழைதான் மரணத்திற்கு மிக முக்கிய காரணி. உடம்பில் சளியானது சேர சேர உடல் இயக்கம் குறைகிறது. இரத்த ஓட்டம் தடைபடுகிறது. எலும்புகள் வலுவிழக்கிறது. நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து போய் நடமாடும் பிணமாக மனிதன் ஆகிவிடுகிறான். எனவே சளித்தொல்லை இல்லாமல் வாழுகிற மனிதன் தான் நிஜமான ஐஸ்வர்யவனாவான் எனலாம். சளித்தொல்லை என்றால் மூக்கடைத்து கொண்டு ஒழுகுதல் மட்டுமே என்ற எண்ண வேண்டாம் எப்போதுமே உடலில் கோழையானது தங்கிக் கொண்டே இருக்கும் அது மிகுதியாகும் போது உடலை தொல்லை செய்யும். இந்த சளித்தொல்லையை முற்றிலுமாக நீக்குவதற்கு சித்தர்கள் கபசுத்தி என்ற பெயர் கொடுத்து கரிசாலை நெய் என்ற அற்புதமான மருந்தையும் கூறி இருக்கிறார்கள். கரிசாலை நெய்யை பற்றி பேசாத சித்தர்களே இல்லை என்று சொல்லலாம் சித்தர்களின் மருத்துவ முறையில் மணிமகுடமாக இருப்பது கரிசாலை நெய் என்றால் அது மிகையில்லை. இந்த நெய்யை சற்று முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் செய்யலாம். கரிசலாங்கண்ணி கீரையை வேரோடு வாங்கி வந்து நன்றாக கழுவி அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட கீரை விழுதை உருண்டையாக பிடித்து ஒரு சுத்தமான நெய்யில் போட்டு சிறிது தூள் செய்த மிளகு சேர்த்து அடுப்பேற்றி மிதமான நெருப்பில் மெழுகு பதமாக காய்ச்சி வடிகட்டி பத்திரபடுத்தி கொள்ள வேண்டும். இந்த நெய்யினை சூரியன் உதிக்கும் முன் எழுந்து வலது கை பெருவிரலால் தொட்டு வாயை நன்றாக திறந்து உள்நாக்கில் பின்புறம் உள்ள மேல்நோக்கி அமைந்த துவாரத்தில் தடவி அரைமணிநேரம் காத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் ஊர்த்துவ நாடி, சுழுமுனை நாடி என்றெல்லாம் சித்தர்களால் சொல்லப்படும் சூட்சம நாடிக்குள் அடங்கி கிடக்கும் கோழை நூல் நூலாக வெளியே வந்து விழும்.கோழையை கழற்றுதல் என்பது இதுவே. இப்படி நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து செய்தால் உடம்பில் உள்ள தேவையற்ற சளி வெளியேறி, ஆரோக்கியமான நுரையீரல் உடல் முழுவதும் நல்ல பிராணக்காற்றை தரும். இந்த முறையை மூன்று வருடத்திற்கு ஒருமுறை செய்து வரவேண்டும்.

+62 प्रतिक्रिया 12 कॉमेंट्स • 100 शेयर
Subramani K Sep 14, 2019

+3 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 10 शेयर