पोंगल,

+240 प्रतिक्रिया 46 कॉमेंट्स • 49 शेयर
TR. Madhavan Jan 6, 2019

பொங்கல் என்பது தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் பழமை வாய்ந்த பண்டிகைகளில் ஒன்று. அதிலும் குறிப்பாக, இது தமிழர்களின் பண்டிகையாகும். இந்த பண்டிகை சங்க காலமான கி.மு. 200 - கி.மு. 300 காலகட்டத்தில் கொண்ட துவங்கப்பட்டது. பொங்கல் என்பது புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல் திராவிட அறுவடை பண்டிகை என கூறப்பட்டாலும், இந்த பண்டிகை சங்க காலத்தின் போது கொண்டாடப்பட்ட தை நீராடல் என்பது பெரும்பாலானவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இங்கு பொங்கல் பண்டிகையின் வரலாறு பற்றி பார்க்கலாம். பொங்கல் வரலாறு சங்க காலத்தின் போது கொண்டாடிய சில கொண்டாட்டங்களே, இன்றைய பொங்கலாக நாம் கொண்டாடி வருகிறோம். சங்ககால கொண்டாட்டத்தில், தை நீராடலின் போது சங்க கால பெண்கள் 'பாவை நோன்பு' என்ற விரத முறையை பின்பற்றினர். பல்லவர்களின் ஆட்சி காலத்தில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக இருந்தது. தமிழ் மாதமான மார்கழியின் போது இதை கொண்டாடினார்கள். நாட்டில் மழையும் வளமும் செழிக்க வேண்டும் என பெண்கள் வேண்டுதல்கள் வைப்பார்களாம். இந்த மாதத்தில் பால் பொருட்களை தவிர்த்து, தலைக்கு எண்ணெய் தேய்க்காமல் இருப்பார்கள். பெண்கள் அனைவரும் விடியற்காலையில் குளித்து, மண்ணால் செய்த விநாயகரை வணங்குவார்களாம். தை மாதத்தின் முதல் நாள் வரை அவர்களின் விரதத்தை தொடர்வார்கள். இந்த வழக்கமே தற்போது பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பாவை மற்றும் திருவெம்பாவை தை நீராடல் பண்டிகை பற்றியும், பாவை நோன்பின் போது கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் பற்றியும், ஆண்டாளின் திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை போன்றவற்றில் பாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகையின் போது குலோத்துங்கன் என்ற சோழ அரசன் கோவில்களுக்கு நிலைத்தை பரிசாக அளிப்பார் என்பதை திருவள்ளூர் வீரராகவா கோவிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. புராணக்கதைகள் பொங்கல் பண்டிகையுடன் சில புராணக்கதைகளும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பற்றிய புகழ் பெற்ற இரண்டு வரலாற்று கதைகள் உள்ளது - ஒன்று சிவபெருமானுடன் தொடர்புடையது, மற்றொன்று இந்திர தேவனுடன் தொடர்புடையது. சிவபெருமானின் சாபம் புராணத்தின் படி, ஒரு முறை நந்தியிடம் பூமிக்கு செல்லுமாறும், அங்கே மனிதர்களிடம் தினமும் எண்ணெய் தேய்த்து குளித்து, மாதம் ஒரு முறை மட்டுமே உண்ணுமாறு கூற சொன்னார் சிவபெருமான். ஆனால் நந்தியோ, தவறுதலாக, தினமும் உணவு உண்ணவும் மாதமொருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவும் அனைவரிடமும் கூறி விட்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் நந்திக்கு சாபமிட்டார். அதனை என்றுமே பூமியில் வாழுமாறு கூறினார். அதிகமான உணவை தயாரிக்க மனிதர்களுக்கு உதவியாக நிலத்தை உழ வேண்டும் என கூறினார். அதனால் தான் இந்த நாளில் மாட்டிற்கு தொடர்புண்டு. கிருஷ்ணர் இந்திர தேவன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட மற்றொரு புராணத்தாலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. கடவுள்களுக்கு எல்லாம் அரசனானதால் மிகவும் கர்வத்துடன் இருந்து வந்த இந்திர தேவனுக்கு பாடம் புகுத்த எண்ணினார் குழந்தை பருவத்தில் இருந்த கிருஷ்ணர். ஆடு மேய்ப்பவர்கள் அனைவரும் இனி இந்திர தேவனை வணங்க வேண்டாம் என கூறினார். இதனால் கோபம் கொண்ட இந்திர தேவன், புயல் மழையை உண்டாக்க மேகங்களை பூமிக்கு அனுப்பினார். மழையும் 3 நாட்களுக்கு தொடர்ந்தது. கிருஷணரோ மனிதன் இனத்தை பாதுகாக்க கோவர்த்தன மலையை கையில் தூக்கி சுமந்து கொண்டார். பின் தன் தவறையும், கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்தார் இந்திர பகவான். பொங்கல் கொண்டாட்டங்கள் இந்து புராணங்களின் படி, 6 மாதங்களாக நிலவி வரும் நீண்ட இரவுகளுக்கு பிறகு வரும் கடவுள்களின் தினம் தான் இது. மூன்று நாட்களுக்கு நீடிக்கும் இந்த பண்டிகை, தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான மற்றும் உருக்கமான அறுவடை திருவிழாவாகும். பொங்கல் தினத்தன்று நெற்கதிர்களை அறுப்பதற்கு முன்பு கடவுளுக்கு விசேஷ பூஜை நடத்தப்படும். தங்களின் ஏர் கலப்பை மற்றும் நெல் அறுக்கும் அரிவாள்கள், சந்தன குப்பி ஆகியவற்றை வைத்து சூரியனையும், பூமியையும் விவசாயிகள் வணங்கிடுவார்கள். கடவுள் முன் வணங்கப்பட்ட கருவிகளை கொண்டு தான் நெற்கதிர்களை அறுவடை செய்வார்கள். நான்கு நாள் பண்டிகை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாளான போகிப்பொங்கல், குடும்பத்திற்கானது. இரண்டாம் நாளான சூரியப் பொங்கல் சூரிய பகவானை வழிபடுவதற்கான நாளாகும். மூன்றாம் நாளான மாட்டுப் பொங்கல், மாடுகளை வழிபடுவதற்கான நாளாகும். இந்த நாளில் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு அடர்த்தியான வர்ணம் பூசி அதன் கழுத்தை சுற்றி மாலையிடப்படும். கடவுளுக்கு படைத்த பின், அந்த பொங்கல் கால்நடை விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் உண்ணுவதற்கு வழங்கப்படும். மகர ராசிக்கு மாறும் நாளில் தான் தை மாதம் பிறக்கிறது. இதிலிருந்து உத்திராயன புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. உத்திராயனம் என்பதற்கு வடக்கு நோக்கி நகர்தல் என்று பொருள். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் மறைந்தாலும், இன்று முதல் அவருடைய சஞ்சாரம் சற்றே வடக்கு நோக்கி சாய்ந்திருக்கும் என்கிறது வானியல். இதிலிருந்து ஆறுமாத காலம் தேவலோக வாசிகளுக்கு பகல் பொழுது என்பது இந்துக்களின் நம்பிக்கை. சூரியனை வழிபடும் சமயத்திற்கு ‘சவுரம்’ என்பது பெயர். இன்றைக்கு இச்சமயத்தில் இருந்தவர்களெல்லாம் சைவத்தோடும் வைணவத்தோடும் ஐக்கியமாகிவிட்ட நிலையில், அனைத்து சமயத்தவராலும் சூரியன் வழிபடப்படுகிறார். தை முதல் தேதியில் தமிழர் திருநாள் ஆரம்பித்தாலும், இதற்கான பிள்ளையார் சுழியை மார்கழி மாத இறுதியிலேயே போட்டுவிடுகிறோம். இதுதான் ‘போகி’யாக கொண்டாடப்படுகிறது. பழையனவற்றை போக்கியதால் போக்கி என்றழைக்கப்பட்டு பின்னாட்களில் போகி என உருமாறியது. இந்நன்னாளில், மனதிற்குள் இருக்கும் குப்பைகளை அகற்றி மனதை சுத்தப்படுத்த வேண்டும் என்பதே இவ்விழாவின் தாத்பர்யம். வடமாநிலங்களில் போகியை இந்திரனுக்கு உரிய விழாவாக கொண்டாடுகிறார்கள். தேவர்களின் தலைவனான இந்திரனின் மற்றொரு பெயர் போகி என்கிறது நமது புராணங்கள். இத்தினத்தில் தான் புத்தர் இறந்தார் எனவும் நம்பப்படுகிறது. போகி அன்று வீட்டின் கூரையில் ‘பூலாப்பூ’ என்கிற ஒருவகை பூவை செருகி வைக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. தமிழர் திருநாளாகிய பொங்கலை மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தியாக கொண்டாடுகிறார்கள். அதே சமயம் அறுவடை திருநாள் எனவும் இவ்விழா அழைக்கப்படுகிறது. குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இப்பண்டிகை உத்தராயன் என்கிற பெயரிலும், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் லோரி என்றும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிற்கு அப்பாலும் பொங்கல் பண்டிகை களைகட்டுகிறது. இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை, நேபாளம், மியான்மர், லாவோஸ் போன்ற நாடுகளிலும் வேறு பெயர்களில் இப்பண்டிகை அழைக்கப்படுகிறது. நேபாளத்தில் மாகி, மாகே சங்கராந்தி, மாகே சகாராதி என்கிற பெயர்களில் பொங்கல் போற்றப்படுகிறது. தாய்லாந்தில் சொங்க்ரான் எனவும், லாவோஸ் மக்களால் பி மா லாவ் என்றும், மியான்மரில் திங்க்யான் என்கிற பெயரிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளை தமிழ் புத்தாண்டாக பாவிக்கிறார்கள் இலங்கை இன மக்கள். உழவு தொழிலுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி சொல்லும் நன்நாளே மாட்டுப்பொங்கல். இத்தினத்தன்று முறைமாப்பிள்ளை மீது மஞ்சள் நீர் தெளிப்பது தமிழக கிராமங்களில் இன்றும் வழக்கத்தில் உள்ளது. தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு இந்நாளில் நடைபெறும். கொல்லேறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்கிற பெயர்களும் இவ்வீரவிளையாட்டிற்கு உண்டு. முன்பு, இந்திய நாணயமாகிய சல்லிக் காசுகளை மாடுகளின் கொம்பில் கட்டிவைத்திருப்பார்கள். மாட்டை அடக்குபவர்களுக்கே அந்த காசு பரிசளிக்கப்படும். இந்த சல்லிக்காசே பின்பு ஜல்லிக்கட்டாக மாறி அழைக்கப்பட்டது. வேலி ஜல்லிக்கட்டு, வாடிவாசல் ஜல்லிக்கட்டு, வடம் ஜல்லிக்கட்டு என இதற்கு பல பெயர்கள் உண்டு. உலகப் பொதுமறை நூலாகிய திருக்குறளை தமிழுக்கு தந்ததால் திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில் இன்றைய தினம் திருவள்ளுவர் தினமாகவும் அழைக்கின்றோம். பெண்களின் மாங்கல்ய பலத்திற்காகவும், உடன்பிறந்தோரின் நலனுக்காகவும் கணுப்பண்டிகை என்னும் விசேஷ நிகழ்வு மாட்டுப்பொங்கல் அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளின் இறுதியில் வருவது காணும் பொங்கல். இன்றைக்கு உறவுகளும் நட்புகளும் சங்கமித்து மகிழ்ந்து பொங்கல் பண்டிகைக்கு விடைகொடுக்கிறார்கள். இக்காணும் பொங்கலை கன்னி பொங்கல், கன்று பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. திருமணமாகாத பெண்களுக்காக கன்னி பொங்கலும் ஆண்களுக்காக கன்று பொங்கலும் வைத்து கூடிய விரைவில் மேளச்சத்தம் கேட்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறார்கள். இத்தனை சிறப்புக்கள் கொண்ட தமிழர்களின் கலாச்சார விழாவை நாம் இனிதே கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ! பொங்கல், இது உழவர் திருநாள் தமிழர் திருநாள். ஆகையால் இத்தருணத்தில் தமிழர் குறித்தும் உழவர் குறித்தும் சிந்திக்க சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ள விழைகிறேன். ஆண்டு முழுக்க எத்தனையோ விழாக்களைக் கொண்டாடினாலும் வாழ்க்கையோடும் நம் வயிற்றோடும் தொடர்புடைய, இயற்கையோடு இயைந்த இயல்பான திருவிழா இப்பொங்கல் விழா. காலம் முழுக்க ஒளி வீசி களத்தில் நெல் குவிய உதவும் கதிரவனுக்கு முதல் நாள், கடுமையான உழைப்பில் உடனிருந்து உதவிய காளைகளுக்கு மறுநாள், காலம் முழுக்க கால் கடுக்க உழைக்கும் உழவர்க்கு மூன்றாம் நாள் என வரிசைப்படுத்திக் கொண்டாடும் திருநாள். ஏறுதழுவுதல் எம் அடையாளம் என இறுமாப்பாய் உறுமிடும் தமிழ் உதடுகளை எண்ணிப் பெருமை கொள்கிறேன். தம் அடையாளத்தின் மேல் அவ்வளவுப் பெருமை கொள்பவர் தமிழர் என்றால் அவ்வடையாளத்தைக் காக்க வேறென்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறோம் நாம் என்பதையும் சிந்திக்க வேண்டும்? பிறந்த உடன் நம்மை இந்த உலகுக்கு அடையாளப்படுத்துவது நம் பெயர். நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளுக்கு தமிழில் பெயரிட்டு இருக்கிறோம் அல்லது தமிழில் தான் பெயரிடுவேன் என எண்ணமிட்டு இருக்கிறோம்? ’ஷ’ வும் ’ஷ்’ உம் இல்லாத தமிழ் குழந்தைகளின் பெயர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நம் உதிரத்தில் உருவாகும் நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு நாமே நம் மொழியில் நம் விருப்பத்திற்குப் பெயரிடாமல் நம்பர் ஜோசியத்தையும் இண்டெர்னெட்டையும் தானே தட்டிக்கொண்டிருக்கிறோம்? பிறந்த உடனே தன் அடையாளத்தைத் தொலைத்து விடுகிறான் தற்காலத் தமிழன். சரி, பிறந்த பிறகாவது திருத்திக்கொள்கிறோமா நம்மை? தாம் ஈன்றப் பிள்ளைகள் தம்மை அம்மா, அப்பா என்றழைப்பதை விட மம்மி டாடி என்றழைப்பதில் தானே பெருமை கொள்கிறோம். அன்னையைக் கூட அன்னை மொழியில் அழைக்காமல் அந்நிய மொழியில் அழைக்கும் அவலத்திற்கு ஆளாகிவிட்டோமே , தமிழர் என்று இன்னும் நாம் நம்மை சொல்லிக்கொள்ள முடியுமா ? நம் வீட்டுக் குழந்தைகளுக்கு Rhymes சரியாக வரவில்லையென்று ஆதங்கப்பட்டுகொள்ளும் நாம் ’ழ’ சரியாக வரவில்லையென்று வருத்தப்பட்டு இருக்கிறோமா? இப்படி வீட்டுக்குள் தான் தமிழை மறந்தோம். வெளியே? வாயில் வராமல் வெள்ளைக்காரன் சொல்லிவிட்டுப் போன அதே உச்சரிப்பில் நாமும் இன்னும் நிறைய ஊர்ப்பெயர்களை உச்சரிப்பது எவ்வளவு வேதனையான செயல்? திருவல்லிக்கேனியும் , திருச்சிராப்பள்ளியும், தரங்கம்பாடியும் தஞ்சாவூரும், எழும்பூரும் , வேலூரும் நம் வாயில் நுழையாதா? பிறகென்ன Triplicane , Trichy , Truncpot, Tanjore, egmore, Vellore? அட புதிதாக முளைக்கும் இருப்பிடப் பகுதிகளுக்குக் கூட நகர் நகர் என்று தானே பெயர் வைக்கிறோம்? ஊரையேத் தொலைத்துவிட்டோமே? சரி ஊரை விடுவோம். சோறை சோறு என சொல்வதில்தான் நமக்கு எத்தனை சங்கடம்? வெறும் அரிசிக்கும் வெந்த அரிசிக்கும் வித்தியாசமே இல்லாமல் rice என்று சொன்னாதானே கொஞ்சம் நாகரிகமாக இருக்கிறது நமக்கு. வைக்கும் பெயரில் தமிழ் இல்லை வாழும் ஊரில் தமிழ் இல்லை வாயிலிடும் சோறில் தமிழில்லை உறவினரைக் கூட நம் மொழியில் அழைக்க சங்கடப் படுகிறோம். ஆயா எனும் சொல் ஏதோ வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கென ஆகிவிட்டது. மாமா என்ற சொல்லைக் கெட்ட வார்த்தையாகவே மாற்றிவிட்டோம். சித்தப்பா, பெரியப்பா, தாய் மாமன், முறை மாமன் எல்லோரும் uncle இல் அடங்கிவிட்டார்கள். வாழ்க்கை முறையிலாவது நமக்கான அடையாளம் இருக்கிறதா? நம் ஊரில் விளையும் கம்பு, கேழ்வரகு இதையெல்லாம் சாப்பிடுவது மருத்துவரின் பரிந்துரைக்குப் பின்னர் என்றாகிவிட்டது. KFC, McDonalds எல்லாம் வாடிக்கையாகவும், கேழ்வரகு, மனத்தக்காளி எல்லாம் வேடிக்கையாகவும் மாறிவிட்டது. இதை எல்லாம் தடுக்க நம்மால் என்ன செய்ய முடியும்? தமிழில் பேச முடியும் தமிழில் பெயர் வைக்க முடியும் தமிழ் வழியில் பயில முடியும் 24 மணி நேரமும் உலாவும் இணையத்தில் தமிழில் பதிவிட முடியும். எல்லா மொழியும் கற்றுக் கொள்வோம், வயிற்றுக்கு உதவும் தமிழ் மொழிக் கொள்வோம் வாழ்க்கைக்கு உதவும் ! அடையாளத்தை அழிந்துவிடாமல் காக்க நினைக்கும் அத்தனை பேரும் இவை அனைத்தனையையும் சேர்த்தே சிந்திக்க வேண்டும். தமிழுக்கும் தமிழர் வாழ்வுக்கும் இடைவெளியே இருந்ததே இல்லை. சேறில் கால் வைத்தால் தான் சோறு வரும் என்பதைக் கூட நுட்பமாக சொல்லித் தந்தது தமிழ். நம் வாய்க்கு அரிசி இட்டவர்களுக்கு நாம் வாய்க்கரிசி போட்டுக்கொண்டிருக்கிறோம். உலகம் முழுக்க வாழும் 720 கோடி பேருக்கும் 3 வேளை சாப்பாடு போடுவதர்க்கென இருக்கும் ஒரு தொழில் எப்படி நட்டத்தில் இருக்க முடியும்? நம் பசிக்கு உணவளிப்பவர்கள் தம் பசிக்குப் பட்டினியை உண்ணும் நிலை தான் எப்படி வந்தது? மகரம் ( தை ) ஆன்மீக மாதம்! பல சிறப்புகள் வாய்ந்த மகர ( தை ) மாதத்தை ஆன்மீகத்தை போற்றும் மாநிலமான கேரளாவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தை ஒன்றாம் தேதியன்று மாலை அந்த விண் மீன் தெரியும். அன்றைய தினம் கருடன் வட்டமிடும். அதுவும் மகர மாதம் துவங்குவதை குறிக்கும் மற்றொரு அறிகுறி. அந்த விண் மீனின் பெயர் மகர மீன். மகர யாழ் என்று ஒரு இசைக்கருவி உண்டு. மகர யாழ் மிக வலிமையானது. அதை மீட்டுவதற்கே மிகுந்த வலிமையும், ஞானமும் வேண்டும். எல்லோராலும் மீட்ட இயலாது. அதுபோன்று மகர மீன், அதுபோல் மகர ராசியில் பிறந்தவர்களை மகரத்தார் நகராழ்வார் என்பர். அவர்களுக்கு ஆளும் குணம் உண்டு. மகர ராசியில் இடம்பெற்றுள்ள ராசிகள் மூன்று, மூன்றுமே சக்தி வாய்ந்த நட்சத்திரங்கள். உத்திராடம், திருவோணம், அவிட்டம். திருவோணம் வெங்கடாச்சலபதியின் நட்சத்திரம். திரு ஓணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான். அதாவது திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உலகத்தின் எதாவது ஒரு மூலையையாவது ஆள்வார்கள் என்பதாகும். அவிட்ட நட்சத்திரத்திற்கு “தவிட்டுப் பானையும் தங்கமாகும்” என்ற பழமொழி உண்டு. மூன்று நட்சத்திரங்களுமே மிகச் சிறந்த நட்சத்திரங்கள் ஆகும். மகரம் அத்தனை சிறப்பு வாய்ந்தது. மகரமே சிறந்த வீடு. அதனில் நெருப்பு நட்சத்திரமும் உண்டு, நீர் நட்சத்திரம் உண்டு. உத்திராடமும், அவிட்டமும் நெருப்பு நட்சத்திரங்கள். திருவோணம் நீர் நட்சத்திரம். மகரத்தைப் பற்றி பழைய நூல்கள் கடல் வீடு என்கின்றன. மகரம் ஆழியாகும். ஆனால் ஒரு சில நூல்கள் நெருப்புத் தன்மை வாய்ந்த கடல் வீடு என்றும் கூறுகிறது. அதாவது வெந்நீர் ஊற்றுகள் அதிகம் நிறைந்தது என்று நாம் கொள்கிறோம். கடல் என்றாலே நீர்தான். ஆனால் குளிர்ச்சி அல்ல கொதிப்புதான் அதன் தன்மை. அதாவது இயல்பு நிலையில் இருந்து வேறுபட்டுக் காணப்படுவது இந்த ராசிக்கு பொருந்தும். மகர ராசியில் பிறந்தவர்கள் தாய் தந்தையை விட்டு மாறுபட்டு இருப்பார்கள். தாங்கள சார்ந்த நாடு, மதம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டுக் காணப்படுவர். ஒரே நிறுவனத்தில் வேலை செய்தாலும் வேறு மாதிரி செய்து பார்ப்பவர்கள். அதுதான் மகரத்தின் குணம். தைப் பொங்கல்! மகர ( தை ) மாதத்திற்குள் உத்திரப்புண்ணியக்காலம் துவங்கக் கூடிய முதல் நாள்தான் தை பொங்கல். சூரியனுக்கும் இயக்கம் உண்டு, அது தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும். ஆன்மீகத்தில் சிவனுக்கு இணையாக சூரியனை ஒப்பிடுவர். சிவன் தனக்குத் தானே கட்டுப்பாடுகள் வைத்துக் கொள்வார். அவருக்கு மேலே யாரும் கிடையாது. அதுபோல்தான் சூரியனும் எதையும் சுற்ற வேண்டாம். மற்ற கோள்கள்தான் சூரியனை சுற்றுகின்றன. எனவே, இவ்வளவு சிறப்புப் பெற்ற தையையே தமிழர்களின் முதல் மாதமாக சங்கக் காலங்களில் போற்றிக் கொண்டாடப்பட்டுள்ளது. சித்திரை பிறந்தால் வழி பிறக்கும் போன்று ஏதாவது பழமொழி உண்டா? இல்லையே. தை பிறந்ததால் வழி பிறக்கும் என்பதுதானே பழமொழி. எல்லாமே தையில் தான் துவங்கும். தை பிறக்கட்டும் ஜாதகத்தை எடுக்கலாம் என்பார்கள். தை மாதத்தில் திருமண நிச்சயம் செய்வார்கள். வேளாண் துறையிலும் தை தான் முதல் மாதம். நெல், சோளம் எல்லாமே மார்கழியில் அறுவடை முடிந்து தை முதல் நாள் புதிய நெல், புது பானை வைத்துக் கொணடாடுவதே தை பொங்கல். பங்குனி மாதத்தில் எந்த அறுவடையும் செய்வதில்லை. மாற்றுப் பயிர்கள் வேண்டுமானால் செய்யப்படலாம். ஆனால் தையில்தான் எல்லா அறுவடைகளும் முடிந்து அடுத்த காலத்தை துவங்குகிறோம். பரிகாரத்திற்கும் தையே சிறந்தது! ராஜ ராஜ சோழன் காலத்தில் அந்த மாதத்தில்தான் பல பரிகாரங்களைச் செய்துள்ளனர். பல நல்ல திட்டங்கள் அந்த மாதத்தில் துவக்கியுள்ளார்கள். நெற்களஞ்சியத்தில் இருந்து பழைய நெல்களை கொடுத்துவிட்டு அல்லது விற்றுவிட்டு புதிய நெல்களை கொள்முதல் செய்து கொள்வர். நெற்களஞ்சியத்தில் இருக்கும் தானியங்களை மக்களுக்கு தானதர்மம் செய்துவிடுவர். தான தர்மங்கள் செய்வதற்கும் உகந்தது தை மாதம்தான். இதை எல்லாம் அடிப்படையாக வைத்துப் பார்த்தால் தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்தில்தான் துவங்குகிறது. தட்பவெப்ப நிலையில் பார்த்தாலும் தை மாதம் சிறந்த மாதகும். குளிரும் இருக்கும், வெயிலும் இருக்கும், எதுவும் கடுமையாக இருக்காது. அதுவே வெகு சிறப்பானது. எனவே சூரியனின் உத்திராயணப் பயணம் துவங்கும் அந்த முதல் நாள் தமிழர் திருநாளாகும். இந்த மாதத்தில் திருமணம் செய்தல், புதுமனை புகுதல், புது வேலையில் சேர்வது, புதிய நிறுவனம் தொடங்குதல் போன்ற அத்தனையும் துவங்கினால் அது வெற்றி பெறும். நீண்ட காலம் நிலைக்கும். சூரியனை வணங்கும் நாளாகவும் தை பொங்கல் விளங்குகிறது. புது அரிசி - கை குத்தல் - அரிசி களைந்து பானையில் வைத்து சூரியனுக்கு நேர வைத்து பொங்கல் பொங்குவர். தை மாதத்தில்தான் சூரியப் பொங்கல் என்கிறோம். மறுநாள் மாட்டுப் பொங்கல். அன்று குலதெய்வத்தையும் வழிபடுவோம். வள்ளுவனையும் வணங்குகிறோம். சித்திரையில் இதுபோன்று தமிழர்களைச் சார்ந்த எந்த விழாவும் இல்லை. வள்ளுவனையும் கொண்டாடுவதில்லை. மகரம் சமாதானவீடு அதேபோன்று மகரம் சனியின் வீடு. சனியின் எதிர் கிரகம் செவ்வாய். சனிக்கு செவ்வாயும், சூரியனும் எதிர் கிரங்களாகும். ஆனால் செவ்வாய் சனியின் வீட்டில் உட்கார்ந்து உச்சம் அடைகிறது. தை மாதம் என்பது மகர மாதம். சனியின் வீட்டில் சூரியன் உட்காரும் போது உக்கிரம் அடைகிறது. அந்த இடத்தில் செவ்வாய் உச்சமடைய மகரம் அனுமதிக்கிறது. ஒன்றுக்கு ஒன்று விட்டுக் கொடுக்கிறது. சனி விட்டுக் கொடுத்து சூரியனின் உச்சத்தை ஏற்றுக் கொள்கிறது. சமாதான வீடாகவும் மகர வீடு விளங்குகிறது. ஜாதிப்படி பிரித்தால் மகரம் சத்ரிய வீடு என்று சொல்லலாம். மகரத்தில்தான் குரு நீச்சமடைகிறார். சூழ்ச்சிகளுக்கு அங்கு இடமில்லை. சத்ரியர்கள் தங்களது திறமையை காண்பிக்கலாம். எல்லா தரப்பினருக்கும் மிக உயர்ந்த மாதமாகும். நன்றி ஆன்மீக முரசு 2016.

+13 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 3 शेयर
शिव सूर्य ब्रह्मा गणेश डेली-दर्शन शनि रविवार शक्ति मुक्ति भगवान_विष्णु वैष्णव यम ऊँ_सूर्य_देवाय_नमः सूर्य_देव यश शिव, भास्कर लोकप्रकाशक गृहेश्वर रवि सर्वदेवनमस्कृत त्रिलोकेश तपन सप्ताश्ववाहन सूर्योदय विष्णु, सूर्यास्त वेदों शैव कर्ता भगवान_शिव आदित्य, अर्का, भानु, सावित्री, पुषण, रवि, मार्टंडा, मित्रा विवस्वान मकर_संक्रांति, पोंगल, रथ_सप्तमी कुंभ_मेला भगवान_सूर्य आयुर्वेद, ज्योतिष, हस्तरेखा सरन्यू, रागी प्रभा। सूर्य, शत्रुओं सूर्_देव सूर्य_नारायण सूर्यदेवता सुख-समृद्धि विकर्तन- विवस्वान- मार्तंड- श्रीमान हर्ता लोक_चक्षु तमिस्त्रहा- लोक_साक्षी तापन शुचि- गभस्तिहस्त- सूर्य_मंदिर सूर्य_मंदिर, सूर्य_मंदिरों कोनार्क_मंदिर

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
🌞🌞🌞🌞🌞🌞#ऊँ_सूर्य_देवाय_नमः 🌞🌞🌞🌞🌞🌞
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
🌜 शुभ रात्रि प्रिय आदरणीय साथियों मधुर सपनों के साथ 🌛
🌘⭐🌟🌠🌘⭐🌟🌠🌘⭐🌟🌠🌘⭐🌟🌠🌘⭐🌟
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩...

(पूरा पढ़ें)
+36 प्रतिक्रिया 3 कॉमेंट्स • 14 शेयर