मायमंदिर फ़्री कुंडली
डाउनलोड करें

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை காயமே (உடலே) மருத்துவர் !! காய்கறிகளே மருந்து !!! உணவை மருந்தாக்கு !! மருந்தை உணவாக்காதே !!! கீரைகள் " நடமாடும் சித்தர்கள் " தலைப்பு : உடல் சூட்டினால் உண்டாகும் வியாதிகள் மற்றும் குடற் புண்ணை குணமாக்கும் அற்புத துணை உணவு. -------------------------------------------- புடலங்காய்த் துவையல் --------------------------------------------------- தேவையான பொருட்கள் -------------------------------------------- புடலங்காய். - 200 கிராம் துவரம்பருப்பு. - 50 கிராம் உளுந்தம் பருப்பு - 25 கிராம் மிளகு - 10 கிராம் உப்பு. - தேவையான அளவு பெருங்காயம். - தேவையான அளவு செய்முறை --------------------------------------- முதலில் புடலங்காயை நன்றாக கழுவி சிறிதாக நறுக்கி ஒரு வாணலியில் போட்டு சிறிது எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். பின்னர் துவரம் பருப்பு , உளுந்தம்பருப்பு , மிளகு , லேசாக வறுத்து வதக்கிய புடலங்காயுடன் பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதுடன் சிறிது தண்ணீர் ,உப்பு , சேர்த்து கெட்டியாகும் வரை நன்கு வதக்கவும். பின்னர் கடுகு சேர்த்து தாளித்து இறக்கி வைக்கவும். பயன்கள் ----------------------- இந்த புடலங்காய்த் துவையலை உஷ்ண வியாதிகள் உள்ளவர்கள் மற்றும் குடற் புண் உள்ளவர்கள் தினமும் அவர்கள் உண்ணும் உணவுடன் துணை உணவாக எடுத்துக்கொண்டால் நன்கு பலனைக் கொடுக்கும். மேலும் இந்தத் துவையலை சப்பாத்தி மற்றும் ரொட்டி ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம். இரவு படுக்கப் போகும் முன் --------------------------------------------------- வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். குறிப்பு ---------------------------------------- அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். KOVAI  HERBAL  CARE  VEGETABLES CLINIC கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர். Cell  :  96557 58609 [email protected]

+6 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

*மனதை பாதித்த வாட்ஸ்ஆப் பதிவு.* நான் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் இருந்து நான்டெட் ரயில் மூலம் பயணம் செய்துகொண்டு இருந்தேன். அது ஒரு கோடைகாலம். வெப்பநிலை 41 டிகிரி அளவில் இருந்தது. நான் ரயிலின் கதவு அருகில் நின்று காற்றை வாங்கிக்கொண்டு இருந்தேன். வறண்ட சூடான காற்று என் மூக்கையும் நுரையீரலையும் பதம் பார்த்தது.. இன்னும் என் பயணம் முடிந்து என் இலக்கை அடைய 4 மணித்துளிகள் இருந்தன. அது வரை இந்த வெப்பத்தை நான் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம். என் செல்போனில் பேட்டரியும் காலியாகி விட்டிருந்தது. எப்பொழுதும் போல ரயிலின் சார்ஜர் வேலை செய்யவில்லை. வெறுப்பில் என் மனம் இந்த ரயில் மிகவும் வேகமாக செல்லாதா என்று எண்ண தொடங்கியது. என்னதான் என் கையில் இருந்த சூடான அரை பாட்டில் தண்ணீரை கொஞ்சம் எடுத்து உறிஞ்சினாலும் ஐயோ, தாகம் மேலும் வறட்டியது. சாதாரணமாக குளிர் தண்ணீர் பாட்டில் விற்கும் விற்பனையாளர்களையும் காணவில்லை. நான் திரும்பி சென்று என் இருக்கையில் அமர்ந்தேன். அருகில் இருந்த கசங்கிய மராத்திய செய்தித்தாளை எடுத்து படிக்க தொடங்கினேன். அது நாட்டில் நிலவும் பயங்கரமான வறட்சியையும் விவசாயிகளின் தற்கொலை பற்றியுமான செய்தியை தாங்கி இருந்தது. செய்தித்தாளில் இருந்த புள்ளி விவரங்கள் கிட்டதட்ட நாட்டில் நட்க்கும் 2,00,000 தற்கொலைகளில் 1,40,000 தற்கொலைகள் விவசாயிகளால் ஏற்படுகிறது என்றன. பகல் இரவு பாராமல் நாள் முழுவதும் உழைது உணவு கொடுக்கும் மக்கள் பட்டினியால் மரணிப்பது நெஞ்சை ஏதோ செய்தது. ஜன்னல் வழியாக எட்டி பார்த்தேன். இருபுறமும் பார்த்த இடமெல்லாம் காய்ந்த, வறண்ட நிலங்கள் தான். மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக மோசமான வறட்சி இப்பொது சந்திக்கின்றன. வறட்சி என்பது என்ன என்பதை என் கண் முன்னே பார்த்து கொண்டே எண்ணங்களில் மூழ்கினேன். திடீரென்று வலுவான குலுக்கலோடு சேர்ந்து மக்கள் கத்தும் சத்தமும் கேட்டது. ரயில் மெதுவாக வேகம் குறைவடைய ஆரம்பித்து நின்றது. கோடை காலம் என்பதால் ரயிலிலும் அதிகமான பயணிகளும் இல்லை. முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொண்ட கும்பல் எங்கள் ரயிலை நோக்கி ஓடி வருவதை என்னால் காண முடிந்தது. ஒவ்வொருவர் கையிலும் காலியான வாளிகள், குடங்கள் மற்றும் பாட்டில்கள் இருந்தன. முதியவர்களும், குழந்தைகளும் ஒவ்வொரு பெட்டிகளிலும் ஏறி ஒவ்வொரு சீட்டின் கீழும் கொஞ்சம் தண்ணீர் உள்ள பாட்டில்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.. பெண்கள் தங்கள் கைகளில் இருந்த வாளிகளுடன் வேகமாக பெட்டிகளில் ஏறி கழிப்பறைகளுக்கு சென்று கழிப்பறை தண்ணீரை வாளிகளில் பிடிக்க தொடங்கினர். அதைத்தான் அவர்கள் குடிக்க, சமைக்க மற்றும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய கொள்ள பயன்படுத்து போகிறார்கள். குளியல் மற்றும் சலவை என்பது அவர்களுக்கு ஒரு கனவே. என் இருக்கை ரயில் கழிப்பறைகளுக்கு அருகே இருந்தது. நான் அங்கு நின்று நடப்பவைகளை பார்த்து கொண்டிருந்தேன். ஒரு வயதான மனிதர் என்னை தோளில் தொட்டு நான் என் பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிக்க போகிறேனா அல்லது தூக்கி எறிய போகிறேனா என்று கேட்டார். கேட்ட மாத்திரத்தில் நான் சோகத்தோடு செயலிழந்து போனேன். அவரிடம் பாட்டிலை கொடுத்தேன். மெதுவாக தண்ணீரை குடித்து விட்டு என் தலைமேல் தன் கையை வைத்து என்னை ஆசிர்வதித்து கும்பலில் அந்த முதியவர் காணாமல்போனார். ஒரு தாயின் கரங்களில் ஒரு பச்சிளம் பெண் குழந்தையும் இருந்தது. அவள் ஒரு ஏக்கத்தோடு என்னையே பார்த்து கொண்டிருந்தாள். அவள் தாகத்தோடு இருப்பதை அவள் கண்கள் எனக்கு காட்டி கொடுத்தன. நான், என்னுடைய பெர்த்திற்கு சென்று என் பையிலிருந்த ஒரு முழு திறக்கப்படாமலேயே பாட்டிலை எடுத்து குடிக்க கொடுத்தேன். அதை அவள் வாங்கிய விதம், உலகின் மிக விலையுயர்ந்த ஒரு பொக்கிஷத்தை அவள் வாங்குவது போல இருந்தது. திடீரென டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே போலீஸார் கழிப்பறையை நோக்கி ஓடி வருவதை பார்த்தேன். மீதமுள்ள மக்கள் குதித்து ஓட தொடங்கினர். அவர்கள் அதிக அளவில் ஒரு துளி நீர் கூட தளும்பாத அளவுக்கு தான் தங்களுடைய வாளிகள் மற்றும் பாட்டில்களில் நிரப்பி இருந்ததை காண முடிந்தது. டிக்கெட் செக்கர் என் அருகில் வந்து என்ன நடந்தது என்று என்னை கேட்டார். அவரே தொடர்ந்து கடந்த சில வாரங்களாக இது தினசரி நடக்கும் விஷயம் என்றும் விவரித்தார். இந்த பகுதி மிகவும் மோசமாக வறட்சி பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் ஒரு சிலர் ரயிலை நிறுத்தி நீரை திருட ஒரு வித்தியாசமான ஒரு உத்தியை கையாள்கின்றனர் என்றார். இதற்கு ஒரு சிலர் ஊருக்கு முந்தைய ரயில் நிலையங்களில் ஏறி திட்டமிட்ட இடங்களில் ரயில் சங்கிலியை இழுத்து நிறுத்தி விட்டு ஓடி விடுவர். மற்றவர்கள் தண்ணீர் திருடுவார்கள் என்று விவரித்தார். கடுமையான நடவடிக்கை பற்றி சக பயணிகள் வினா எழுப்பிய போது அவர் அவர்கள் திருடும் நீர் அவர்கள் குடிக்க மற்றும் சமைக்கவே உதவுகிறது. இயற்கை அவர்களிடம் உண்மையில் கடுமையாக இருக்கிறது. அவர்களின் இந்த செயல் அவர்கள் உயிருடன் இருக்க தான் என்பதால் இது அவர்களை தண்டிக்கும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய குற்றம் இல்லை என்று நினைக்கிறேன் என்று டிக்கெட் செக்கர் சொன்னார். அவருடைய விவசாயி நண்பர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் தமக்கு ஏற்பட்ட வருத்தத்தினால் அவர்களை விட்டு விடுவதாகவும் கூறினார். ரயில் தன் பயணத்தை துவக்கியது. ஒரு வகையில் எனக்கு கிடைத்த நல்ல அதிர்ஷ்டமான வாழ்க்கையை ஒப்பு நோக்கும்பொழுது வாழ்வில் நிலவும் சமத்துவமின்மை என்னை மிகவும் வருத்தமடைய செய்தது.. எங்கள் மாநில அரசு தொழில் துறை ஒதுக்கீட்டில் தண்ணீரை நீர் மதுபான நிறுவனங்களுக்கு விற்றுக்கொண்டு உள்ளது. ஒரு லிட்டர் பீர் தயாரிக்க சுமார் 20 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. அரசு சில மாதங்களுக்கு அதை நிறுத்தி வைத்து தேவைப்படும் மக்களுக்கு தண்ணீரை இலவசமாக வழங்க முடியும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அப்படி செய்தால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். பீர் இல்லாததால் யாரும் உயிரை விட போவது இல்லை. ஆனால் நீர் வாழ்வின் ஒரு இன்றியமையாத தேவை/ ஆதாரம். ஒவ்வொரு துளியும் பாதுகாக்கப்பட வேண்டியதே. கடவுளிடம் அவர்கள் என்ன கேட்பார்கள் என நான் யோசிக்கிறேன். இந்த நிலையில் இருந்து வெளி வருவது அல்லது ஒரு மழையை தான் தங்கள் கண்ணீரை கழுவ நிச்சயமாக அவர்கள் ஆண்டவனிடம் கேட்க முடியும். சிறிது நேரத்தில் கழித்து எனக்கு தாகமாக இருந்தது. என்னிடம் தண்ணீர் இல்லை. அதனால் நான் என் வெற்று பாட்டிலை எடுத்து அதே கழிப்பறை நீர் நிரப்பி குடிக்க ஆரம்பித்தேன். அது ஒவ்வொரு நாளும் இந்த மக்கள் படும் துயரம் மற்றும் வலியை ஒரு கணம் எனக்கு உணர்த்தியது. இந்த வலியை தாங்கிக் கொள்ள அவர்களுக்கு கடவுள் போதுமான பலத்தை கொடுக்க வேண்டும். *நமக்கு இந்த நிலை வேண்டாம். அணைகள் கட்டுவோம், குளங்கள் வெட்டுவோம். இலவசம் வேண்டாம். நமது பிள்ளைகளூக்கு நல்ல மருத்துவம், கல்வி, தூய்மையான நீர் இவற்றை விட்டுச்செல்வோம்,* *தயவு செய்து தண்ணீரை வீணாக்காமல் உபயோகிப்போம், நமது சந்ததிகளின் நல்வாழ்வுக்கு வழிவகுப்போம்..!!*

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

இறைவனை நேரில் கண்டால்தான் நம்புவோமா என்ன? மனதாலும் பக்தியாலும் நம்பிக்கையாலும்இறைவனை மட்டுமே நினைத்து செயல்படு பவனால் இறையன்பை எளிதில் பெறமுடியும். மனமும்,அதில் உறுதியும் ஒத்துழைத்தால் கடவுளை கண்ணார தரிசிக்கலாம். அத்தகைய மனம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா மகாபாரதத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அனைவருக்கும் பிடித்த ஏகலைவன் போன்று இருக்க வேண் டும். ஏகலைவன் வேடுவர் குலத்தில் பிறந்தவன். இவனுக்கு வில் வித்தையின் மீது அபார நாட்டம் இருந்தது. வில்வித்தையை துரோணாச்சாரியாரி டம் கற்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.அவரிடம் இருக்கும் அனைத்து கலைகளையும் கற்று சிறந்த வீரனாக இருக்க வேண்டும் என்று நினைத்த ஏகலைவன், குருதட்சணை வைத்து துரோணாச்சாரியாரிடம் கற்றுக்கொடுக்கும்படி வேண்டினான். துரோணர் வேடுவனான உனக்கு போர்க்கலைகள் கற்றுத்தரமுடியாது என்று உறுதியாக சொல்லிவிட்டார்.ஆனால் மனம் தளராத ஏகலைவன் துரோணாச்சாரியாரைப் போன்று சிலைஒன்றை வடித்தான். அந்த சிலையையே குருவாக மனதில் நிறுத்தினான். தினந்தோறும் குருவை வழி பாடு செய்து வித்தையைக் கற்றுக்கொள்ள தொடங்கினான். சிறந்த குருபக்தியும், கற்கும் அதீத ஆர்வமும் இவனை மிகவும் திறமையுள்ளவனாக மாற்றியது. போர்களத்தில் சிறந்த வீரனாக உருவாகும் அள வுக்கு சுயமாக பயிற்சி பெற்றான். இவனிடம்இருந்த வில் வித்தையின் நுணுக்கங்களும் இணைந்து இவனை வில் வித்தையிலும் பெரிய வீர னாக காட்டியது. ஒருமுறை துரோணரிடம் பயிற்சி பெற்ற பாண்டவர்களும், கெளரவர்களுக்கும் வேட்டைக்காக காட்டுக்கு வந்தார்கள். அவர்களுடன் வேட்டை நாய்களும் வந்தது. துரோணரைப் பொறுத்தவரை அவருடைய பயிற்சி மாணாக்கர்களில் வில்வித்தையில் சிறந்தவன் அர்ஜூனன் என்பதே. அவனைத் தவிர வில்வித்தையில் வேறு யாரும் இருக்கக் கூடாது என்பதாலேயே வில் வித்தையின் நுணுக்கங்களை அர்ஜூனனுக்கு கற்றுத் தந்திருந்தார் துரோணாச்சாரியர். வேட்டையின் போது நாய் ஒன்று ஏகலைவன் இருந்த இடத்திற்கு வந்தது. ஏகலைவன் தன்னுடைய ஆற்றலினால் நாயை அடக்கினான். அது மீண் டும் பாண்டவர்களிடம் வந்து சேர்ந்தது. நாய் அமைதியாக அடங்கி வருவதைக் கண்டு அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. நாயை அடக்கும் அளவுக்கு ஆற்றல் மிக்க ஒருவன் இருக்கிறானா அவனை பார்க்க வேண்டுமே என்று அனைவரும் தேடி அது ஏகலைவன் என்பதையும் கண்டார் கள். அதை துரோணரிடம் சென்றுகூறினார்கள். அவருக்கு ஏகலைவனைச் சந்திக்க வேண்டும் என்னும் ஆவல் பிறந்தது. நேராக அவனிடம் சென்றார். நாயின் வாயை கட்டக்கூடிய வில் வித் தையை உனக்கு கற்றுத்தந்தது யார்? என்று கேட்டார். ஏகலைவன், என்னுடைய குருநாதாரான தாங்கள் தான் என்றான், துரோணருக்கு ஆச்சரியமாக இருந்தது. அர்ஜூனனைத் தவிர வேறு யாருக்கும் நான் கற்றுத்தரவில்லை. உனக்கு எப்படி எப்போதுகற்றுத்தந்தேன் என்றார். ஏகலைவன்,உங்கள் உருவத்தை செய்து குருவாக பூஜித்து நானா கவே கற்றுக்கொண்டேன். உங்கள் மீது இருந்த பக்தியால் எனக்கு இது சாத்தியமாயிற்று என்றான். துரோணருக்கு ஆச்சர்யம் அவ்வளவு குருபக்தியா உனக்கு என்றார். ஏகலைவன் அவரிடம் தட்சணையோடு வந்து கற்றுத்தரும்படி சொன்னதை நினைவுபடுத்தினான். சரி அப்படியானல் எனக்கு நீ குருதட்சணை கொடுக்க வேண்டுமே என்றார்.நிச்சயமாக என்னை அங்கீகரித்தீர்களேஅப் போதே நான் உங்கள் சீடன் தான், என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், நான்தருவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன் என்றான். உனது வலது கை கட்டை விரலை எனக்கு தட்சணையாக தருவாயாஎன்றார்.அப்படியே என்ற ஏகலைவன் தனது கட்டைவிரலை அவருக்கு அறுத்து கொடுத்தான். இதனால் ஏகலைவனிடம் இருந்த தனுர் வேத நுணுக்கங்கள் மறைந்தது என்றாலும் வேடுவனுக்கு இது தேவையில்லை என்பதாலேயே துரோணர் இந்த தகாத செயலை செய்தார். எனினும் ஏகலைவன் மிகவும் புகழ் பெற்றவனாக குருபக்தி மிக்கவனாக இன்றும் போற் றப்படுகிறான். பக்தி என்பது குருவிடமே இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும் போது இறைவனிடம் இன்னும் உறுதியாக இருக்க வேண்டும்.

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

+9 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 6 शेयर

இறைவனை நேரில் கண்டால்தான் நம்புவோமா என்ன? மனதாலும் பக்தியாலும் நம்பிக்கையாலும்இறைவனை மட்டுமே நினைத்து செயல்படு பவனால் இறையன்பை எளிதில் பெறமுடியும். மனமும்,அதில் உறுதியும் ஒத்துழைத்தால் கடவுளை கண்ணார தரிசிக்கலாம். அத்தகைய மனம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா மகாபாரதத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அனைவருக்கும் பிடித்த ஏகலைவன் போன்று இருக்க வேண் டும். ஏகலைவன் வேடுவர் குலத்தில் பிறந்தவன். இவனுக்கு வில் வித்தையின் மீது அபார நாட்டம் இருந்தது. வில்வித்தையை துரோணாச்சாரியாரி டம் கற்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.அவரிடம் இருக்கும் அனைத்து கலைகளையும் கற்று சிறந்த வீரனாக இருக்க வேண்டும் என்று நினைத்த ஏகலைவன், குருதட்சணை வைத்து துரோணாச்சாரியாரிடம் கற்றுக்கொடுக்கும்படி வேண்டினான். துரோணர் வேடுவனான உனக்கு போர்க்கலைகள் கற்றுத்தரமுடியாது என்று உறுதியாக சொல்லிவிட்டார்.ஆனால் மனம் தளராத ஏகலைவன் துரோணாச்சாரியாரைப் போன்று சிலைஒன்றை வடித்தான். அந்த சிலையையே குருவாக மனதில் நிறுத்தினான். தினந்தோறும் குருவை வழி பாடு செய்து வித்தையைக் கற்றுக்கொள்ள தொடங்கினான். சிறந்த குருபக்தியும், கற்கும் அதீத ஆர்வமும் இவனை மிகவும் திறமையுள்ளவனாக மாற்றியது. போர்களத்தில் சிறந்த வீரனாக உருவாகும் அள வுக்கு சுயமாக பயிற்சி பெற்றான். இவனிடம்இருந்த வில் வித்தையின் நுணுக்கங்களும் இணைந்து இவனை வில் வித்தையிலும் பெரிய வீர னாக காட்டியது. ஒருமுறை துரோணரிடம் பயிற்சி பெற்ற பாண்டவர்களும், கெளரவர்களுக்கும் வேட்டைக்காக காட்டுக்கு வந்தார்கள். அவர்களுடன் வேட்டை நாய்களும் வந்தது. துரோணரைப் பொறுத்தவரை அவருடைய பயிற்சி மாணாக்கர்களில் வில்வித்தையில் சிறந்தவன் அர்ஜூனன் என்பதே. அவனைத் தவிர வில்வித்தையில் வேறு யாரும் இருக்கக் கூடாது என்பதாலேயே வில் வித்தையின் நுணுக்கங்களை அர்ஜூனனுக்கு கற்றுத் தந்திருந்தார் துரோணாச்சாரியர். வேட்டையின் போது நாய் ஒன்று ஏகலைவன் இருந்த இடத்திற்கு வந்தது. ஏகலைவன் தன்னுடைய ஆற்றலினால் நாயை அடக்கினான். அது மீண் டும் பாண்டவர்களிடம் வந்து சேர்ந்தது. நாய் அமைதியாக அடங்கி வருவதைக் கண்டு அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. நாயை அடக்கும் அளவுக்கு ஆற்றல் மிக்க ஒருவன் இருக்கிறானா அவனை பார்க்க வேண்டுமே என்று அனைவரும் தேடி அது ஏகலைவன் என்பதையும் கண்டார் கள். அதை துரோணரிடம் சென்றுகூறினார்கள். அவருக்கு ஏகலைவனைச் சந்திக்க வேண்டும் என்னும் ஆவல் பிறந்தது. நேராக அவனிடம் சென்றார். நாயின் வாயை கட்டக்கூடிய வில் வித் தையை உனக்கு கற்றுத்தந்தது யார்? என்று கேட்டார். ஏகலைவன், என்னுடைய குருநாதாரான தாங்கள் தான் என்றான், துரோணருக்கு ஆச்சரியமாக இருந்தது. அர்ஜூனனைத் தவிர வேறு யாருக்கும் நான் கற்றுத்தரவில்லை. உனக்கு எப்படி எப்போதுகற்றுத்தந்தேன் என்றார். ஏகலைவன்,உங்கள் உருவத்தை செய்து குருவாக பூஜித்து நானா கவே கற்றுக்கொண்டேன். உங்கள் மீது இருந்த பக்தியால் எனக்கு இது சாத்தியமாயிற்று என்றான். துரோணருக்கு ஆச்சர்யம் அவ்வளவு குருபக்தியா உனக்கு என்றார். ஏகலைவன் அவரிடம் தட்சணையோடு வந்து கற்றுத்தரும்படி சொன்னதை நினைவுபடுத்தினான். சரி அப்படியானல் எனக்கு நீ குருதட்சணை கொடுக்க வேண்டுமே என்றார்.நிச்சயமாக என்னை அங்கீகரித்தீர்களேஅப் போதே நான் உங்கள் சீடன் தான், என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், நான்தருவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன் என்றான். உனது வலது கை கட்டை விரலை எனக்கு தட்சணையாக தருவாயாஎன்றார்.அப்படியே என்ற ஏகலைவன் தனது கட்டைவிரலை அவருக்கு அறுத்து கொடுத்தான். இதனால் ஏகலைவனிடம் இருந்த தனுர் வேத நுணுக்கங்கள் மறைந்தது என்றாலும் வேடுவனுக்கு இது தேவையில்லை என்பதாலேயே துரோணர் இந்த தகாத செயலை செய்தார். எனினும் ஏகலைவன் மிகவும் புகழ் பெற்றவனாக குருபக்தி மிக்கவனாக இன்றும் போற் றப்படுகிறான். பக்தி என்பது குருவிடமே இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும் போது இறைவனிடம் இன்னும் உறுதியாக இருக்க வேண்டும்.

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 1 शेयर

கிருஷ்ணர் சாந்தீபனி முனிவரிடம் கல்வி பயிலும் போது அவருக்கு சுதாமாவிடம் பழக்கம் உண்டானது. இவரை குசேலன் என்றும் அழைப்பார் கள். இருவரும் இணைந்தே இருக்குமளவு நெருக்கமானவர்கள். பிராமண குலத்தைச் சேர்ந்த குசேலன் வேதங்களைக் கற்றுக்கொண்டு அதன் மூலம் குடும்பத்தை நடத்திவந்தார்.வேதங்கள் படித்த பிராமணர்கள் பிறவேலைகளைச் செய்ய மாட்டார்கள். குசேலனின் மனைவி சுசீலை. அவருக்கு குழந்தை செல்வமும் அதிகம் என்பதால் வருமானம் போதுமானதாக இருக்கவில்லை. ஆனாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய வாழ்வு முழுமையையும் கிருஷ்ணரிடம் ஒப்படைத்துவிட்டார். கிருஷ்ணர் நினைப்பது நடக்கட்டும் என்ற எண்ணத்தோடு வாழ்க்கையை நடத்தினார். ஆனால் இவர் மனதில் திடம் இருந்தாலும் குழந்தைகள் பசியால் வருந்தினார்கள். தொடர்ந்து வறுமை பீடிக்கவே சுசீலை பயந்தாள். அவளுக்கும் பணத்தின் மீது அக்கறை இல்லை. ஆனால் வறுமை பீடித்து கணவனையும் குழந்தைகளை யும் இழக்க அவள் விரும்பவில்லை. கிருஷ்ணரைப் பார்த்து பண உதவி கேளுங்கள் என்று வற்புறுத்தி குசேலனை அனுப்பி வைத்தாள். பக்கத்து வீட்டுக்கு ஓடி சென்று அவலை ஒரு பிடி வாங்கி வந்துகிழிந்த துணியில் கட்டி கிருஷ்ணரைப் பார்க்கும் போது கொடுங்கள் என்று கொடுத்தாள். குசேலர் கிருஷ்ணனின் அரண்ம னையை அடைந்தார். குசேலருடன் அவரது ஊரைச் சேர்ந்த பிராமணர்கள் சிலரும் சென்றிருந்தார்கள். அரண்மனை வாயிலில் பல அரசர்கள் காத்துக்கிடந்தார்கள். ஆனால் பிராமணர்கள் வந்தால் அவர்களைக் காக்க வைக்காமல் உள்ளே அனுப்பும்படி கிருஷ்ணர் உத்தரவிட்டிருந்தார்.கிருஷ்ணர் ருக்மணி மடியில் தலைவைத்து, திருவடியை சத்யபாமா மடியின் மீது வைத்து படுத்திருந்தார். அரண் மனைக் காவலன் ஒருவன்வந்து கிருஷ்ணரிடம் பால்ய நண்பன் சுதாமா வந்திருக்கிறார் என்றதும் துள்ளியெழுந்த கிருஷ்ணர் குசேலனை வர வேற்க வாசல் வரை சென்றார். எப்படி இருக்கிறாய் சுதாமா? உன்னைப் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது. உன்னை காண என்ன தவம் செய்தேன் என்று உருகியபடி சுதாமை அணைத்தார்.அவரது அணைப்பிலேயே குசேலனின் வறுமை அழிந்து போனது. ஏனெனில் கிருஷ்ணரின் மார்பில் மகாலட்சுமி அல்லவா உறைந்திருக்கிறாள். சுதாமாவுடன் வந்தவர்களுக்கு விருந்துகள் பரிமாறப்பட்டன. சுதாமா, பிராமணர் என்பதால் அவருக்கு கிருஷ்ணர் பாதபூஜை செய்தார். எவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்கிறாய் சுதாமா என்று அவர் கால்களைப் பிடித்துவிட்டார். பழைய குறும்புகளைப் பற்றி பேசி மகிழ்ந்தார்.அப்புறம் சுதாமா என் மன்னிக்கு என் மீது பாசம் அதிகமாயிற்றே எனக்கு என்ன கொடுத்திருக்கிறார் என்றார். சுதாமா ஏற்கனவே அரண்மனை செல்வத்தைப் பார்த்து மிரண்டிருந்தார் அதனால் கையில் இருந்த கிழிந்த அங்கவஸ்திரத்தை மறைத்தார். அதைக் கண்ட குறும்புக்கார கண்ணன் அதை அப்படியே வாங்கி பிரித்து ஒரு பிடி அவலை அள்ளி வாயில் போட்டார். சுதாமா வீடும் அவரது ஊரிலிருக்கும் அனைத்து வீடுகளும் மாளிகைகளாக மாறின. செல்வத்தில் திளைத்த மக்கள் திகைத்தனர். ஆனால் இது எதையும் அறியாத சுதாமா கிருஷ்ணர் அவல் சாப்பிட்டதைக்கண்டு ஆனந்தத்தில் திளைத்தார். மீண்டும் ஒரு பிடி அவலை எடுத்து கிருஷ்ணர் வாயில் போட போது ருக்மிணி தடுத்துவிட்டாள். இறைபக்தியில் மூழ்கிய ஒருவன் அளவுக்கதிகமான செல்வத்தைக் கண்டால் பக் தியை மறந்து உலக இன்பங்களில் மூழ்கிவிடுவான் என்று நினைத்தாள். அவளது பார்வையில் புரிந்து கொண்ட கிருஷ்ணன்சுதாமாவிடம் அவல் வஸ்திரத்தை வாங்கியபடி அவருக்கு விடை கொடுத்தான். ஆனால் சுதாமா கிருஷ்ணனிடம் எதுவும் கேட்கவில்லை. கிருஷ்ணர் கொடுத்தசெல்வத்தால் மனம் மகிழாத சுதாமா என்னும் குசேலன் மிகுந்த வருத்தத் துக்கு உள்ளானான் கிருஷ்ணர் அவலை அள்ளி வாயில் போட்டதும் குசேலரின் வீட்டில் செல்வக் குவியல் உண்டானது. இந்தக் கதை அனைவருக்கும் தெரிந்த கதையே.கிருஷ்ணன் முதல் பிடி அவலை உண்டு இரண்டாவது பிடியை வாயில் இடும்போது ருக்மணி தடுத்துவிட்டாள். இறைபக்தியில் மூழ்கியிருப்பவனுக்கு அள்ளக்குறையாத செல்வத்தைக் கொடுத்தால் அவன் உலக இன்பத்தில் மூழ்கிவிடுவானாம். அத்தகைய நிலையில் குசேலனை ஆளாக்காமல் இருந்ததாக ருக்மணி பெருமைப்பட் டாள். ஆனால் நடந்ததோ வேறாக இருந்தது. குசேலனும் தன்னுடைய வறுமையைப் பற்றி கிருஷ்ணனிடம் தெரிவிக்கவில்லை. கிருஷ்ணனும் நண்பனின் வறுமையைப் பற்றி அறிந்தும் அதைப் பற்றி கேட்கவில்லை. குசேலனுக்கு தெரியும் பிறருடைய பொருளுக்கு யார் ஆசைப்பட்டாலும், அவன் பெற்றதை ஆண்டவன் ஏதாவது ஒரு வழியில் பறித்துவிடுவான் என்று. சிறுவயதில் கிருஷ்ணனையும், சுதாமாவையும் சாந்தீபனி முனிவரின் மனைவி, சமையலுக்கு விறகு எடுத்துவர அனுப்பினாள். போகும் போது இரண்டு பேரும் சாப்பிடுங்கள் என்று அவலில் வெல்லம் கலந்த பொட்டலத்தைக் கையில் கொடுத்தாள். விறகு வெட்டி முடித்ததும் கிருஷ்ணன் விறகை கட்டும்போது சுதாமா என்கிறகுசேலர் பொட்டலத்திலிருந்த அவல் வெல்லத்தைச் சாப்பிட்டார். கிருஷ்ணனை மறந்து மொத்த அவலை யும் சாப்பிட்டுவிட்டார். கிருஷ்ணன் எதுவும் பேசவில்லை. ஆனால் அந்த அவலை குசேலர் சந்திக்கும் போது அவரிடமிருந்து பெற்றுக் கொண் டார். குசேலர் கிருஷ்ணனிடம் விடைபெற்று வீட்டுக்கு திரும்பினார். அவருடைய ஊருக்குள் காலடி எடுத்து வைத்ததும் குசேலன் உரு தெரியாமல் மாறிவிட்டார். அவருடைய கிழிந்த வஸ்திரங்கள் பட்டு வஸ்திரமானது. அவர் உடலில் நகைகள் பளபளத்தது. ஏதும் புரியாமல் தன்னைத் தானே பார்த்துக்கொண்ட குசேலர் புரியாமல் கிருஷ்ண நாமத்தை சொல்லி வீட்டுக்குள் நுழைந்தார். வீடுகள் அடையாளம் தெரியாமல் உருமாறியிருந்தது. தன்னுடைய வீட்டை தேடி அலைந்தார் குசேலர். அவரது மனைவி சுசீ,லை மாளிகை மாடத்திலிருந்து நின்று குசேலரை அழைத்தாள். எங்கே போகிறீர்கள். நம் வீடு இதுதான் என்று அழைத்தாள். வீட்டில் குழந்தைகள் தங்கத்தாலான தேரை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியின் கழுத்துகள் கூட நகைகளால் நிரம்பியிருந்தது. பார்க்க பார்க்க அதிசயமாய் இருந்த குசேல னுக்கு எல்லாம் பரந்தாமனின் வேலை என்பது உணர முடிந்தது.வாய் விட்டு புலம்பினான். கிருஷ்ணா, மாயவனே மந்திரம் செய்பவனே.. என் பால்ய கால நண்பனே. என்னை அறிந்துகொள்ளவில்லையே... உன்னை நாடி வர செல்வம் தான் காரணமா, உன்னிடம் நான் செல்வத்தைக் கேட்டேனா, நான் உன் மீது கொண்ட பக்திக்கு மரியாதை அவ்வளவுதானா, என் இதயத்திலேயே அமர்ந்திருக்கிறாயே, பக்தன் என்றால் யார் தெரியுமா? இறைவன் மீது மிகுந்த பக்திகொண்டிருப்பவன் இறைவன் தரும் கஷ்டத்தையும் வரப்பிரசாதமாக எண்ணி பக்தியுடன் வாழ்ந்திருப்பவனே,,, அதையும் ஏற்று இன்பமாக வாழ்பவனே உண்மையான பக்தன்.நான் உன்னிடம் கேட்பது என்னவென்பது உனக்கு தெரியாதா? அழியா உலகான வைகுண்டத்தில் எனக்கான ஒரு இடம், உன் பாதகமலத்தைத்தினமும் தரிசிக்க ஒரு இடம், இதுதான் நிரந்தர செல்வம். இந்த செல்வத்தைத் தேடிதான் நான் உன்னிடம் வருகிறேன். வேண்டுகிறேன். நிலையற்ற செல்வத்தின் மேல் எனக்கெந்த பற்றும் இல்லை. என்னை உன்னோடு சேர்த் துக் கொள் என்று கதறினார். அவரது கதறலின் குரல் கிருஷ்ணனை அடைந்தது. கிருஷ்ணர் சங்கு சக்ரத்துடன் அவரிடம் வந்து நின்றார். குசேலரின்விருப்பப்படியே அவரை தன்னுள் ஐக்கியமாக்கிகொண்டார்.கிருஷ்ணனை பற்றிக்கொண்டால் இப்பிறவியில் எல்லா இன்பமும் பிறப்பற்ற நிலையும் பெறுவது நிச்ச யமே…

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

உன்னுடைய மரண நேரத்தில் சஞ்சலப்படாதே....!! உலகம் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு எந்த. முக்கியத்துவமும் கொடுக்கப்படாது....!! உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வர்.....! 1.உனது ஆடைகளை களைவர். 2.குளிப்பாட்டுவர். 3.புது துணி அணிவிப்பர். 4.உன்னுடைய வீட்டை விட்டு வெளியாக்குவர். 5.சுடுகாடு என்ற புதிய இடத்திற்கு எடுத்துச் செல்வர். 6.உனது கூட வரும் பலர் உன்னை அடக்கம் செய்வதில் அல்லது எரிக்க குறியாக இருப்பர். 7.உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும் , உன் வீட்டை விட்டும் பிரிக்கப்படும்.அல்லது வெளியில் வீசப்படும். * உன்னுடைய உடமைகள், உடைகள். *புத்தகங்கள் *பைகள் *செருப்புகள் எல்லாம் வெளியேற்றப்படும். .உறுதியாக விளங்கிக்கொள், * உனது பிரிவால் உலகம் கவலைப்படாது. *பொருளாதாரம் தடைப்படாது. *உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு வேறொருவர் சந்தோசமாக வருவார். * உனது சொத்து வாரிசுக்கு போய்விடும் * இவ்வளவு சொத்து சுகத்தோடு வாழ்ந்தும் வெறும் கையுடன் படுத்திருப்பதை நீ உணர மாட்டாய். நீ மரணித்தவுடன் முதலில் மறைவது உனது பெயரே....!! (பாடி எப்ப வரும்.....?) உன் உறவுகளே இப்படித்தான் அழைப்பார்கள். எனவே உனது குடும்ப கெளரவம்,பட்டம், பதவி என்று வாழும் போதே ''வாழாமல்'' உன்னை நீயே ஏமாற்றி விட வேண்டாம். உன்னைப்பற்றிய கவலை -3 பங்காக்கப்படும் 1.உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்....பாவம் என்று. 2.நண்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பர். 3.உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைபடுவர். 4.மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது. 5.உண்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பம். #உன்னை_விட்டு_நீங்குவது. 1.உடம்பு மற்றும் அழகு 2.சொத்து 3.ஆரோக்கியம் 4.பிள்ளைகள் 5.மாளிகை 6.மனைவி.....இதில் உனது ஜீவனுக்கென்று எதனை தயாரித்து வைத்துள்ளாய்......? எனவே, கீழ்க்காணும் இவ்விஷயங்களில் ஆசைவை. 1. தவறாது கோவிலுக்கு செல். 2. வேதத்தை பாராயணம் செய், தியானம் செய். 3. பிறர் அறியா தர்மம் செய் 4. கடவுளை பற்றிய நல்லதை சொல். 5. ஆத்மாவுக்கு உரியதை பற்றி சிந்தனை செய். 6. கடவுள் பார்க்கும்படி நல்ல செயல்கள் செய்.(நல்லதை செய்தால் கடவுள் உன்னை பார்ப்பார்) 7.யாருக்கும் கெடுதல் செய்யாதே. நினையாதே. உலகில் ஏதோ ஒன்றை தேடுகிறாய்... cinema illai தேட ஓடிக்கொண்டிருக்கிறாய் ஆனால், மேற்கூறியது மட்டுமே உண்மை....என்பதை உணராமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். நன்றி.

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 1 शेयर
A Nachimuthu Raj Jun 17, 2019

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 1 शेयर

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 1 शेयर
Gowthaman Jun 17, 2019

Thevaram - Sirgazhi Temple, Tamil Snippets, தேவாரம், சீர்காழி, பயன்: இறையருள் பெருகும் ===== தேவாரம் - திருஞானசம்பந்தர். தலம்-சீர்காழி, பயன் - இறையருள் பெருகும். ===== தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவென் மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் முளை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய எம்மான் இவன் அன்றே. ===== தாமரை மலரில் அமர்ந்த பிரமன் வணங்கிப் பாடிட, அவனுக்கு அருளைச் செய்தவன் சிவபெருமான். அவன் பெருமையுடைய சீர்காழியில் விரும்பித் தங்கியவன். தன் ஒற்றைச் செவியில் தோடு அணிந்த்தவன். காளையை வாகனமாகக் கொண்டவன். பிறை நிலவைச் சூடியவன். காட்டின் சாம்பலை மேனியில் பூசிக் கொண்டவன்; அத்தகைய பெம்மான் இவனல்லவோ என் உள்ளம் கவர்ந்த கள்வனாய் அருள் செய்தவன். -தேவாரம், திருஞானசம்பந்தர்.

+11 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 3 शेयर
Senthil Selvam Jun 17, 2019

+13 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 4 शेयर
muthukumar Jun 17, 2019

+9 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 2 शेयर