+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
SARAVANAN Sep 22, 2019

+4 प्रतिक्रिया 2 कॉमेंट्स • 3 शेयर
Karthi Thavasi Sep 22, 2019

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 7 शेयर

பழனி முருகன் தரிசனத்தில் எது சிறந்தது? அலங்கார தரிசனமா? கற்சிலை தரிசனமா? ♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦ பழனி முருகன் கோவிலில் சாதாரண நிலையில் இருக்கும் வடிவத்தைப் பார்ப்பதைவிட ராஜ அலங்காரத்தை நிறைய பேர் பார்க்கிறார்கள். இதுபோன்று தேர்ந்தெடுத்துப் பார்ப்பது என்பது சரியானதா? பொதுவாக இறைவனை பல தேவைகளுக்காக வேண்டுகிறோம். அதில் முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக. பெரிய ஞானிகளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள். முற்றும் துறந்தவர்கள், குடும்பத்தில் பல நிலைகளைக் கடந்தவர்கள் இவர்களெல்லாம் அந்தக் கோலத்தை விரும்பிப் பார்ப்பார்கள்!!! ஜோதிடப்படி பார்க்கும் போது செவ்வாய் கிரகம் முருகனுக்கு வருகிறார். அதிலும் இந்த பழனி முருகன் கொஞ்சம் ஞானக்காரகனாக இருக்கிறார். மேலும், இந்தச் செவ்வாயுடன் குருவும் கலக்கிறார். வீரம், தைரியம் இதற்கெல்லாம் உரியது செவ்வாய். இந்த வீரமும், தைரியமும் இருந்ததால்தான் எல்லோரையும், எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு அவர் வந்து இங்கு நிற்க முடிந்தது. ஆனால் நின்ற உடனேயே அங்கு குரு வந்துவிடுகிறார். செவ்வாயாக வீரவேசத்துடன் கிளம்பி குருவாக நிற்கிறார்!!! வழக்குகளெல்லாம் நடக்கிறது, தீராத நோய்களெல்லாம் இருக்கிறது போன்ற பிரச்சனைகளுக்கு அலங்காரம் இல்லாத முருகனை வணங்குதல் நன்று. 20 வருடமா வாதாடிக் கொண்டிருக்கிறேன். தீர்ப்பு தள்ளி தள்ளிப் போகிறது என்றால் அதற்கு அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோல முருகன் வழிகாட்டுவார். தீராத நோய், மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள், அவ்வளவுதான் என்ற நிலையில் அதற்கும் நீங்கள் முருகனின் ஆண்டி கோலத்தை தரிசிக்கலாம்!!! மன குழப்பம் அடைந்து இருக்கிறார்களே, அவர்களையும் இந்த ஆண்டிக் கோல முருகனை வழிபடச் சொல்லலாம். அவர்களுக்கு மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனைக் கண்கூடாகப் பார்க்கிறோம். பேச இயலாதவர்கள், குறைபாடு உள்ளவர்கள், மன எழுச்சி, மன உளைச்சல் உள்ளவர்கள் இவர்களெல்லாம் அந்தக் கோலத்தைப் பார்த்தால் ஒரு சாத்வீகம், சமத்துவம் அவர்கள் மனதிற்குள் பாயும்! . பெண்ணிற்கு கல்யாணம் முடிக்கப் போகிறோம், பத்திரிக்கை அடித்து கும்பிடப் போகிறோம், வீடு விற்பது, வாங்குவது, கட்டுவது, கட்டிய பின் கிரகப் பிரவேசம் செய்வதற்கு சாமி கும்பிடப் போகிறோம் ஆகிய இதுபோன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம்!!! நம்மால் சரி செய்யக்கூடிய விஷயங்களுக்கு ராஜ அலங்கார தரிசனம். நம்மால் முடியாது, மருத்துவராலும் முடியாது, யாராலும் முடியாது போன்ற விஷயங்களுக்கெல்லாம் ஆண்டிக் கோலம் மிக மிக உகந்த தரிசனக் கோலம்.

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

*தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்வளவோ புண்ணியம்? எவ்வளவோ பலன்? எவ்வளவு நல்லது?* ஆனால் நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் படிக்க முடியுமா? என்றால் ... நிச்சயம் முடியும் எப்படி? *காஞ்சி மஹா பெரியவரால் அருளிச் செய்யப்பட மிக எளிய அற்புதமான கிடைத்தார் *கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே* *கொண்ட 30* *வினாடிகளில்* *சொல்லி முடித்து* *அனைத்துப் பலன்களையும் பெற்றுத் தரக்கூடியதாக நமக்கு வழங்கியுள்ளார்.* இதோ உங்களுக்காக....! *|| ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம் ||* *|| சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம் ||* *|| அங்குல்யா பரண சோபிதம் ||* *|| சூடாமணி தர்சனகரம் ||* *|| ஆஞ்சநேய மாஸ்ரயம் ||* *|| வைதேஹி மனோகரம் ||* *|| வானர சைன்ய சேவிதம் ||* *|| சர்வமங்கள கார்யானுகூலம் ||* *|| சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம் ||* *ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம்* இவ்வளவு தான் அந்த ஸ்லோகம்...முழு ராமாயணமும் படித்து முடித்தாகி விட்டது. *நல்லதுன்னு நினைத்தால் நாலு பேருக்கு இல்ல கோடி பேருக்கு சொல்லுங்கள் *உங்கள் வம்சம் ராம நாமத்தால் வளரும்*.......... *இது சத்திய வாக்கு என்று பெரியவா கூறியுள்ளார்*. வாழ்க வளமுடன்

+9 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 2 शेयर
Siva Kumar Sep 22, 2019

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
Muthukumar Sep 22, 2019

கிருஷ்ணர் வெண்ணெயைத் திருடியது ஏன்...??? கண்ணன் கடவுள்தானே அவன் நினைத்தால் பாற்கடலையே வெண்ணெய் கடலாக மாற்ற முடியாதா....??? அப்படியிருக்க அவர் ஏன் பூலோகத்திற்கு வந்த போது அடுத்தவர் வீட்டில் வெண்ணெயைத் திருடித் தின்ன வேண்டும்....??? பாலைத் தண்ணீரில் விட்டால் தண்ணீருடன் கலந்து விடும். வெண்ணெய்யோ தண்ணீரில் ஒட்டாமல் மிதக்கும். ஆகவேதான் அவர் பாலைத் திருடாமல் வெண்ணெயை திருடினார்.... வெண்ணெய் என்பது மோரிலிருந்து கடைந்தெடுக்கப்படுவது. அதாவது அதுதான் பாலின் சாராம்சம். இந்த உலகம் நிரந்தரமானதல்ல, வைகுண்டலோகமே நிரந்தரம் என்பதை உணர்ந்து..... இந்த உலக வாழ்க்கையில் ஒட்டாமல் வெண்ணெயை போலிருந்தால் கிருஷ்ணர் அப்படிப்பட்டவர்களைத் திருடிச் செல்வார். இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானது என்று எண்ணுபவர் தண்ணீரில் கலந்த பாலாக இருக்கின்றனர். வெண்ணெய்யைப் போன்று எப்படி உலகத்தோடு ஒட்டாமல் வாழ்வது... ஒரு வாத்து தண்ணீரில் வாழ்ந்தாலும் அதன் மேல் தண்ணீர் ஒட்டுவதில்லை. உப்புத் தண்ணீரில் மீன் வாழ்ந்தாலும், உப்பு அதன் உடம்பிற்குள் சேர்வதில்லை. தாமரை தண்ணீரில் வளர்ந்தாலும் அதன் இலையின் மேல் தண்ணீர் ஒட்டுவதில்லை. அதேபோல ஒருவன் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் பற்றில்லாமல் வாழ வேண்டும். ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்...

+6 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 4 शेयर

+1 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

// குரு // ********* மனிதன் இந்த உலகத்தில் சகலவிதமான சுகபோகங்கள் பெற்று இன்புற்று வாழவேண்டுமானால் அவன் ஒரு குருவிடமிருந்து தனக்கு மிகவும் உபயோகம் தறவல்ல குரு மந்திரம் பெற்று இருக்கவேண்டும் . அதன் பிறகுதான் தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு வழி தேடவேண்டும் . உதாரணத்திற்கு ஆதி சங்கராச்சாரியார் முதல் விவேகானந்தர் வரை தொழில் அதிபர் பிர்லா முதல் தீரூபாய்அம்பாணி வரையில் நமது நாட்டில் குருக்களின் ஆசீர்வாதம் பெற்று பெறுஞ்செல்வந்தர்களாக இருக்கிறார்கள் . சங்கராச்சாரியார் விவேகானந்தர் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும் இதில் எந்த சந்தேகமும் இல்லை . இப்படி நம் முன் இருக்கும் உண்மை அறியப்படாமலேயே நாமெல்லாம் வாழ்ந்து வருகிறோம் . ஒவ்வொரு மனிதனுக்கும் குருவின் தேவை அவசியம் இருக்கிறது . குருவினுடைய வழி காட்டுதல் படி சிலகாலம் வாழ்ந்து பாருங்கள் பிறகு உங்களுக்கு நன்றாக புரிந்துகொள்ள முடியும் . ஒருவரை குருவாக ஏற்றுக்கொள்வது ஏதோ ஒரு சில தேவைகளை நிறைவேற்றிகொள்ளவோ அல்லது ஏதாவது ஆதாயம் தேடிக்கொள்ளவோ இருக்கக்கூடாது . என்னிடம் வந்து கேட்கிறவர்கள் கேட்கும் கேள்விகள் சாமி நீ ஏன் ஆனாய் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் போன்றகேள்விகள் கேட்டு தொந்தரவு செய்வார்கள் . அல்லது காணாமல் போண பொருள் கிடைக்குமா ; வேலை கிடைக்குமா ; நோயிலிருந்து எப்போது விடுபடுவேன் ; மனதில் ஒன்று நினைத்து இருக்கிறேன் நடக்குமா நடக்காதா ; சாமி உங்களுக்கு ஏதாவது மந்திரம் தெரியுமா தெரிஞ்சா சொல்லுங்களேன் என்பார்கள் ஏதாவது மந்திரம் சொன்னால் அதற்கும் ஏதாவது காரணம் காட்டுவார்கள் . இதுபோல் சாமியார்களை நாடுகிறவர்கள் ஏமாற்றமும் பணம் இழப்பும் காண்கிறார்கள் . கேட்டு பெறுவதை காட்டிலும் கேட்காமல் கிடைப்பதுதான் உத்தமமானதாக இருக்கிறது . ஆகவே நம் முன் உள்ள நமக்கு பிடித்தமான ஒரு சாமியாரிடம் பழகவேண்டும் . தினமும் அவரை காண போவது அவரை வணங்குவது அதோடு தன்னால் முடிந்த அளவில் ஏதாவது அங்கே தேவைப்படும் பொருள்கள் அகர்பத்தி கற்பூரம் பூ பூமாலை அல்லது சாமியாருக்கு தேவையான ஏதாவது தினமும் கொண்டு செல்ல வேண்டும் . இப்படி சில காலம் அவரோடு தொடர்பு இருக்கும் போது ஏதாவது ஒரு தருணத்தில் சாமியார் அந்த சேவகனுக்கு தேவையான ஒரு வழியை காட்டுவார் . அதையெல்லாம் கவனமாக மனதில் கொண்டு வாழும்போது அந்த வாழ்க்கை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணம் போல் வளர்ந்து அபிவிருத்தி ஆகும் . இப்படி கேட்க்காமலேயே சன்யாசி சாமியார்கள் உலக ஜனங்களுக்கு எவ்வளவோ அள்ளி கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் . இன்னொரு முறையில் பணக்காரர் அவர் இருக்கும் பகுதியில் புகழ் பெற்ற சாமியார் இருக்கிறார் அல்லது அவருக்கு பிடித்த சாமியார் பலான இடத்தில் இருக்கிறார் அவரிடம் ஒரு குறிப்பிட்ட நாளில் சென்று மந்திர தீட்சை பெற்று கொள்வது . மந்திரம் தீட்சையாக பெறுவது சன்யாசி ஆவதற்கு மட்டுமல்ல ஒரு சாதாரண மனிதன் கூட இல்லற வாழ்க்கை வாழ்ந்து கொண்டே ஒரு சன்யாசி பெறும் பெரிய பதவியை அடைகிறான் . அதற்காகவே குரு மந்திரம் இதன் பலன்களை பட்டியலிட்டு காட்ட முடியாது . அவ்வளவு நன்மைகளையும் கொடுக்கக்கூடியது குரு மந்திரம் . குருவையும் குரு மந்திரத்தையும் குறைவாக மதிபிடக்கூடாது . ஒரு தீர்த்தத்தில் சென்று புனித நீராடினால் ஒரு பலன்தான் கிடைக்கும் ஒரு சாமியாரை சந்தித்து பேசி அவரிடம் ஆசி பெற்றால் நான்கு பலன்கள் கிடைக்கும் . ஒரு குரு கிடைத்து விட்டால் அந்த பலன்களை எண்ணிக்கையில் எண்ண முடியாது . அவ்வளவு பெயரும் புகழும் அற்புதங்களும் கொண்டவர்கள் குருஜனங்கள் அவர்களை தேடி அடையாளம் கண்டு பழகி சேவை செய்து ஆசீர்வாத வடிவில் குரு மந்திரம் பெற்று இன்புற்று வாழவேண்டும் .

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 2 शेयर
Siva Kumar Sep 22, 2019

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
janani ram Sep 22, 2019

+6 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

கோபம் !!!!! யார் எப்படி நடந்து கொண்டாலும் கோபமே படாதவர் அந்த துறவி. அவரை அவமானப்படுத்தினாலும் கூட கண்டுகொள்ள மாட்டார். பலர் எப்படி எப்படியோ முயற்சி செய்தும் அவரைக் கோபப்படுத்தவே முடியவில்லை! எப்படி இவரால் இருக்க முடிகிறது? என்று அந்த ரகசியத்தை அறிந்து கொள்வதில் அவரின் ஒரு சிஷ்யருக்கு ஆர்வம். தன் கேள்வியை துறவியிடமே கேட்டு விட்டார். துறவி அவரிடம் பொறுமையாக தான் யாரிடமும் கோபமே படாத ரகசியத்தை விளக்கினார். “ஒரு ஏரியில் காலியான படகில் அமர்ந்து தியானம் செய்வது என் நெடுநாள் வழக்கம். அப்படி ஒருமுறை தியானத்தில் இருந்தபோது நான் அமர்ந்திருந்த படகை வந்து முட்டியது ஒரு படகு." என் தியானம் கலைந்தது. ‘இப்படி அஜாக்கி ரதையாக படகை முட்டவிட்டது யார்?’ என்று கோபமாகக் கண்களைத் திறந்து பார்த்தால்,அது ஒரு வெற்றுப்படகு! காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து நான் தியானம் செய்த படகு மீதி மோதி யிருக்கிறது. என் கோபத்தினை அந்தப் படகிடம் காட்டி எதுவும் பிரயோஜனம் உண்டோ சீடனே? யாராவது என்னைக் கோபப்படுத்தும்போது எனக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வரும். இதுவும் "வெற்றுப் படகுதான்" என்று அமைதியாகி விடுவேன்” என்றார். கோபத்தின் பாதிப்பை நாம் 3வகைகளாக பிரிக்கலாம்: 1)கோபம் அறிவை பாதிக்கக் கூடியது! 2)கோபம் உடலை பாதிக்கக் கூடியது!! 3)கோபம் நடத்தையை பாதிக்கக் கூடியது!!! புரிந்ததா? ரகசியம் என்றார் குரு! குரு கோபப் படாததின் ரகசியம் கேட்ட சிஷ்யர் தெளிவு பெற்றார். நீதி: உண்மையான பலசாலி யார் என்றால், தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும்.

+6 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 2 शेयर
Siva Sep 22, 2019

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 2 शेयर

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर