+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

நோய் தீர்க்கும் திருச்செந்தூர் இலை விபூதி : திருச்செந்தூர் கோவிலில் பன்னீர் இலை விபூதி பிரசாதம் மிக விசேஷமானது. பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்பில் பூசிக்கொள்ள சந்தனத்துடன் பிரசாதமாக விபூதியை தருவார்கள். பன்னீர் இலையில் வைத்து தொடாமல் போடுவார்கள். முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள். இது தீராத நோய்களை தீர்க்கும் அருமருந்து முருகனுக்கு ஒரு பக்கத்துக்கு 6 கரங்கள் இருப்பக்கத்துக்கும் மொத்தம் 12 கரங்கள் பன்னீர் மரத்தின் இலையில் 12 நரம்புகள் உள்ளன. பன்னீரு இலை என்பது மருவி பன்னீர் இலையானது இலையை நேராக பார்த்தால் முருகன் வேல் போல் இருக்கும் இந்த இலைக்கு வேத மந்திர சக்கி உள்ளது 350 ஆண்டுகளுக்கு முன்பே திருவாடுதுறை ஆதினம் வந்தார். திருச்செந்தூர் மேல கோபுரத்தை நிர்மானித்தார். பொருள் பற்றாக்குறையால் கூலி தர இயலவில்லை அவர்களுக்கு இலை விபூதியை கூலியாக கொடுத்தார். கோயியை தாண்டி சென்று பிரித்து பார்க்கும்படி கூறினார் அப்படி திறந்தபோது வேலைக்குரிய கூலி இருந்தது. இந்த விபூதி பூசினால் கைகால் வலிப்பு நீங்கும். பூதம், பிசாசு தீவினைகள் விலகும். இதுபோல் பல சிறப்புகள் பெற்றது பன்னீர் இலை விபூதி. விசுவாமித்திர மகரிஷி இங்கு வந்து தரிசித்தார். இலை விபூதி பிரசாதம் பெற்றார். அதைத் தரித்துக் கொண்டார். அவருடைய குன்ம நோய் நீங்கிற்று என்பது புராணம். வேதங்களே பன்னீர் இலைகள் என்பது ஐதீகம். முருகன்பெருமானே உன்னுடைய இலை விபூதிப் பிரசாத மகிமையை எப்படி எடுத்துரைப்பது? வலிப்பு, குஷ்டம், ஷயம், நீரழிவு, குன்மம் முதலிய கொடுமையான வியாதிகளும், பூத, பிரேத, பசாசங்கள் பற்றியதால் உண்டாகும் துன்பங்களும் உன்னுடைய இலை விபூதி பிரசாதத்தை பூசிக்கொண்ட மாத்திரத்தில் மறைந்து விடுமே என்கிறது ஆதிசங்கரர் அருளிய சுப்பிரமணிய புஜங்கத்தில் உள்ள ஒரு சுலோகம்.

+27 प्रतिक्रिया 2 कॉमेंट्स • 42 शेयर