குஞ்சிதபாதம் என்றால் என்ன? சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கித் திருநடனம் ஆடியதற்குக் குஞ்சிதபாதம் என்று பெயர். இந்த தரிசனத்தைக் கண்டாலே தீராத வியாதியும் நீங்கும். பல மூலிகைகளால் செய்யப்பட்ட ஒரு பொருளை ந்டராஜரின் தூக்கிய திருவடியில் அணிவிக்கப்படும்போது, அந்த மூலிகை வேர்களுக்குக் குஞ்சிதபாதம் என்றும் பெயர் இருக்கிறது. சிவபெருமானின் இடது பாகத்தில் சக்திதேவி இருக்கிறார். அதனால்தான் எமதர்மராஜன், மார்க்கண்டேயனைத் துரத்திப் பாசக்கயிற்றை வீசியபோது மார்க்கண்டேயன், சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். அப்போது எமனின் பாசக்கயிறு சிவலிங்கத்தின் மேல்பட்டது. இதனால் கோபம் அடைந்து எமனை இடது காலால் எட்டி உதைத்தார் ஈசன். தாயும்-தந்தையுமான சிவ-சக்தியை மார்க்கண்டேயன் சரண் அடைந்ததால் சிவபெருமான், சக்திதேவியின் அம்சமான தனது இடது பாகத்தில் உள்ள பாதத்தால் எமனை எட்டி உதைத்தார். அந்த இடது கால் சக்திதேவியின் அம்சம் என்கிறது புராணம். அதனால் ஆடல்நாயகனைத் தரிசிக்கும்போது கண்டிப்பாக இடதுகாலைத் தரிசிக்க வேண்டும். அப்படித் தரிசித்தால் செய்வினை பாதிப்பு, சனீஸ்வரால் ஏற்படும் தொல்லை மற்றும் பொதுவாக ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள், வியாதிகள் நீங்கும். மோட்சம் கிடைக்கும். உடல் வலிமை பெறும் என்கிறது சாஸ்திரம். *ஓம் சிவாய நம"

+35 प्रतिक्रिया 5 कॉमेंट्स • 48 शेयर

#குங்கும_பஞ்சதசி #என்றொரு_மந்திரம் #உள்ளது. #காஞ்சீபுரம்_காமாட்சி #அம்மன் #ஆலயத்தில்இதை #சிறப்பாக_செய்வார்கள். #இந்தபஞ்சதசியை #பாடினால்_குடும்பத்தில் #மகிழ்ச்சி_உண்டாகும். #குங்கும_பஞ்சதசி குங்குமமாவது குறைகளைத் தீர்ப்பது குங்குமமாவது குடியினைக் காப்பது குங்குமமாவது குணமத ளிப்பது குங்குமமாவது கொல்வினைத் தீர்ப்பதே…………(1) விதிகளை வெல்வது விமலையின் குங்குமம் நிதிகளை ஈவது நிமலையின் குங்குமம் பதிதனைக் காப்பது பதிவ்ரதை குங்குமம் கதிகளை ஆள்வதும் குங்குமமாமே………………..(2) தஞ்சமென்றோரைத் தடுத்தாட்கொள்வதும் பஞ்சமா பாதகம் பரிந்துமே தீர்ப்பதும் அஞ்சின பேருக்கு அபய மளிப்பதும் காஞ்சி காமாக்ஷியின் குங்குமமாமே……………….(3) நற்பதமீவது நாரணீ குங்குமம் பொற்பினை ஈவது புரணீ குங்குமம் சிற்பரமாவது ஸ்ரீ சக்ர குங்குமம் கற்பினைக் காப்பதும் குங்குமமாமே………………..(4) செஞ்சுடர் போன்றது சீரான குங்குமம் கொஞ்சும் அழகைக் கொடுப்பது குங்குமம் ஐந்து புலன்களை அடக்கி யருள்வதும் காசி விசாலாக்ஷியின் குங்குமமாமே………………..(5) நோயினைத் தீர்ப்பதும் நுண்ணறி வீவதும் பேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும் சேயினைக் காப்பதும் செல்வம் தருவதும் தாயினை அர்ச்சித்த குங்குமமாமே…………………..(6) சக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும் பக்தி யளிப்பதும் பரகதி யீவதும் முக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும் சித்தி தருவதும் குங்குமமாமே…………………………..(7) நெஞ்சிற் கவலைகள் நீக்கி யருள்வதும் செஞ்சொற் கவிபாடும் சீரினை யீவதும் வஞ்சப் பகைவரை வாட்டி யருள்வதும் மதுரை மீனாக்ஷியின் குங்குமமாமே…………………….(8) சிவசிவ என்றுமே திருநீறணிந்தபின் சிவகாமியே எனச் சிந்தித் தணிவதும் தவமான மேலோருந் தரித்துக் களிப்பதும் பலவினை தீர்ப்பதும் குங்குமமாமே………………………(9) எவையெவை கருதிடின் அவையவை யீவதும் நவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும் குவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேருக்கு குவிநிதி யீவதும் குங்குமமாமே………………………….(10) அஷ்டலெக்ஷ்மி அருள் தந்தளிப்பதும் இஷ்டங்களீவதும் ஈடற்ற குங்குமம் கஷ்டம் தவிர்த்தென்னைக் காத்தருள்வதும் சிஷ்டனாய்ச் செய்வதும் குங்குமமாமே………………..(11) குஷ்டமுதலான மகாரோகந் தீர்ப்பதும் நஷ்டம் வராதொரு நலனைக் கொடுப்பதும் எட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினை கிட்டவே செய்வதும் குங்குமமாமே…………………….(12) பட்ட காலிலே படுமெனக் கஷ்டங்கள் விட்டிடாமலே வந்துமே வாட்டினும் பட்டான பார்வதி பாதம் பணிந்தே இட்டார் இடர்தவிர்த்த குங்குமமாமே…………………(13) சித்தந்தனை சுத்தி செய்வதற் கெளியதோர் எத்துந் தெரியாதே ஏமாந்த மாந்தரே நித்தம் தொழும் அன்னை குங்குமம் நித்தியம் தரித்துமே மேன்மை யடைவீரே…………….(14) மிஞ்சும் அழகுடன் குங்கும ஆடைகள் செஞ்சுடர் ஆகுமோர் ஸ்ரீசக்கர லலிதை கஞ்சமலர் முகம் தன்னில் திகழ்வதும் பஞ்ச நிதிதரும் குங்குமமாமே…………………………..(15) ……………………. சுபம் …………..

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

உங்கள் ஊர் ஆலயத்தின் தினசரி அர்த்தஜாமப் பூஜையை தரிசிக்கவும்! பூவுலகில் உள்ள ஒவ்வொரு சிவாலயத்திலும் தினசரி இரவு நேரத்தில், சிவாம்பூதிஜோதி எனும் திவ்ய சக்திகள் புறப்பட்டு நிதமும் சிதம்பரம் ஸ்ரீ்நடராஜர் கோயிலைச் சென்றடையும்.இது தொன்று தொட்டு வரும் ஆதியாதி சிவாகம வைதீகம். இன்றும் பூமியில் ஓவ்வொரு சிவாலயத்திலும் நிகழ்வது. இதன் காரணப் பலனாய், எந்த ஒரு சிவாலயத்தின் அர்த்த ஜாமப் பூஜையை தரிசிப்போர்க்கும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரவு நேர அர்த்த ஜாம வழிபாட்டில் பங்கேற்றதின் பலன்கள் பலவும் கிட்டும். இவ்வரிய நல்வரத்தை, வியாக்ரபாத மாமுனிவரும், பதஞ்ஜலி மஹரிஷியும் பெற்றுத் தந்துள்ளனர் என்பது பலரும் அறியாதது. எனவே, ஒரு வேளைப் பூசனைக் கோயிலாயினும் சரி, உங்கள் ஊர்ச் சிவாலயத்தில், இரவு நேரப் பூஜைகள் முறையாய் நிகழ்வதற்கு ஆவன செய்து, நிதமும் இரவு நேரத்தில் அர்த்த ஜாமப் பூஜை, பள்ளியறைப் பூஜை, பைரவ பூஜையில் பங்கேற்று, அபரிமிதமான சிதம்பராதிச் சிற்சபேசத் திருவடிப் புண்ணியத்தை உங்கள் தலைமுறைகளுக்கு, சந்ததிகளுக்கு ஐஸ்வர்யமாய்ப் பெற்றுத் தாருங்கள். திருச்சிற்றம்பலம் !

+25 प्रतिक्रिया 3 कॉमेंट्स • 21 शेयर

+14 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 17 शेयर