#காமாக்ஷி #என்ற_நாமாவின்_அர்த்தம். 1. #காமனுக்கு கண்களாலே உயிர்பிக்ஷை அளித்து ரதியின் மாங்கலயத்தை ரக்ஷித்ததால் #இவள் "#காமாக்ஷி". 2. #நமஸ்கரிப்போரின் காமங்களை ( விருப்பம்) தனது பார்வையாலேயே பூரணம் செய்விப்பதால் #இவள் "#காமாக்ஷி" 3. #கா -- காலம், மா -- மாயை காலத்தையும் மாயையையும் க்ஷீணமடையச் (அழியச்) செய்வதால் இவள் "காமாக்ஷி". காலத்தையும் மாயையையும் கடந்த #மஹாத்ரிபுரஸுந்தரி என்பது பொருள். 4. #கா -- ஸரஸ்வதி, மா -- லக்ஷ்மீ லக்ஷ்மியையும் ஸரஸ்வதியையும் #நேத்ரங்களாய்_உடையதால் இவள் "காமாக்ஷி" 5. காமன் -- காமேச்வரனான ஏகாம்ரநாதன் #ஏகாம்ரநாதனின் நேத்ரமாக விளங்குவதால் ! #இவள் "#காமாக்ஷி" 6. காம என்பதற்கு கடபயாதி ஸங்க்யா ரீதியாக அர்த்தம் ஐம்பத்து ஒன்று. ஐம்பத்தியோரு #அக்ஷரங்களையும் #கண்களாககொண்டதால் இவள் "காமாக்ஷி" 7. கா -- ஸரஸ்வதீ, மா -- மலைமகள், க்ஷீ -- க்ஷீரஸாகரகன்யையான லக்ஷ்மீ. தான் ஒருவளே லக்ஷ்மீ, ஸரஸ்வதீ, #பார்வதியாக #விளங்குவதால் இவள் "காமாக்ஷீ" 8. கா -- ஒன்று, மா -- பதினைந்து, ஷோடஷீ #மஹாமந்த்ரத்தை தனது #கண்களாய் தரிப்பதால் இவள் "காமாக்ஷி" 9. கா -- ஒன்று, மா -- ஐந்து, க்ஷீ -- ஆறு, ஓரே வஸ்துவான #லலிதாம்பாளே தனது பஞ்ச ரூபங்களான "#த்ரிபுரா", "#ராஜராஜேச்வரீ", #மஹாகாமேசவல்லபா", "காமாக்ஷீ", "காமகோடி" என ஐந்து வடிவங்களிலும்( ஒவ்வொரு வடிவத்திற்கும் தனித்தனி ஆவரண மந்த்ரங்கள் உண்டு), மூன்று சக்தி பேதங்கள், இரண்டு சிவ பேதங்கள், ஒரு விஷ்ணு பேதம் என ஆறு வடிவங்களிலும் உறைவதால் #இவள் "#காமாக்ஷி". 10. தான் ஒருவளே பஞ்சகோசாதீதையாகவும், #ஷட்பாவரஹிதையாகவும் ஜ்வலிப்பதால் #இவள் "#காமாக்ஷீ". 11. தான் ஒருவளே "பஞ்சபஞ்சிகா" வடிவினளாகவும், #ஷடாம்ணாய தேவதா ரூபமாகவும் ஜ்வலிப்பதால் இவள் "காமாக்ஷி". 12. தான் ஒருவளே பஞ்சபூத மயமான இந்த சரீரத்தில் ஷட்சக்ர யோகினி வடிவாக ஜ்வலிப்பதால் இவள் "காமாக்ஷீ" 13. தான் ஒருவளே பஞ்சப்ரஹ்ம மஹாமஞ்சத்தில் ஷடன்வயீ சாம்பவீ வித்யையாக ஜ்வலிப்பதால் இவள் "காமாக்ஷி". 14. தான் ஒருவளே பஞ்சமுக மஹாசம்புவால் அர்ச்சிக்கப்பட்ட "துரீய வித்யையாகவும்" ஆறுமுக ஸுப்ரமண்யனால் பூஜிக்கப்பட்ட ஸ்கந்தவித்யாவாகவும் இருப்பதால் இவள் "காமாக்ஷி". 15. தான் ஒருவளே பஞ்சாயதன கணபதி, அம்பிகா,சூர்ய, விஷ்ணு,சிவ வடிவான பஞ்சாயதன ரூபிணியாகவும், சைவ, வைஷ்ணவ, சாக்த, கௌமார, காணாபத்ய, ஸௌர ஷ்டதர்சணங்களுக்கும் ஆதார மஹாவித்யையாக இருப்பதாலும் இவள் "காமாக்ஷி". 16. தான் ஒருவளே பஞ்சஞானேந்த்ரியங்களுக்கும் புலனாகாது, ஆறு ஆதாரங்களைக் கடந்து ஸஹஸ்ரகமலத்தில் பரப்ரும்ஹ மயமாக ப்ரகாசிப்பதாலும் இவளே "காமாக்ஷி". "காமாக்ஷி" எனும் அக்ஷரம் பரமசிவனுக்கும் கிடைக்காதது. மங்கலமே வடிவானது. இக்காமாக்ஷி எனும் விலைமதிக்க முடியா ரத்னம் பேரொளி வீசிக் கொண்டிருக்கின்றது. #காமாக்ஷி_கடாக்ஷி.!

+42 प्रतिक्रिया 3 कॉमेंट्स • 59 शेयर

சுக்ரவார வணக்கம் வெள்ளிக்கிழமை/Friday/13_09_2019 ஓம் சக்தி ஓம். #ஸ்ரீகாமாக்ஷி_ஸ்தோத்திரம்........ கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருவோரும் வீடுவாசல் என பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்க முடியவில்லை என்று கலங்குவோரும் காஞ்சி காமாட்சித் தாயை மனதில் நினைத்தபடி, மனதார இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லிவந்தால், வீட்டில் கடன் தொல்லை நீங்கும். பொருள்சேர்க்கை நிகழும். விரைவில், சகல செளபாக்கியங்களும் பெற்று, சுபிட்சத்துடன் வாழ்வார்கள் என்கிறார் காஞ்சி காமாட்சி கோயிலின் நடராஜ சாஸ்திரிகள். மூக பஞ்ச சதியில் உள்ள ஸ்ரீகாமாக்ஷி அம்மனைத் துதிக்கும் அற்புதமான ஸ்தோத்திரம் இது. ச்ரியம் வித்யாம்தத்யாத்ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம் ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணா த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினி ப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே அதாவது, காமாக்ஷி அன்னையே! உன்னை வணங்குபவர்களுக்கு உன்னுடைய கருணையானது தனம், வித்தை, அளவற்ற கீர்த்தி, நல்ல குழந்தைகள், மூவுலகிலும் மேன்மையை அடையும் நிலை ஆகியவற்றை விரைவிலேயே வரமாகத் தருகிறது. திரிபுரத்தையும் சம்ஹாரம் செய்த பரமேஸ்வரனின் பத்தினியே! பக்தர்களின் பாவத்தைப் போக்கும் தங்களின் சரணத்தில் செய்த நமஸ்காரமானது, எங்களுக்கு எதைத்தான் கொடுக்காது? என்று அர்த்தம்! பௌர்ணமி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், அம்பாளுக்கு உகந்த நாட்களிலும், அம்பாளுக்கு செவ்வரளி முதலான சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சகல நன்மைகளும் உண்டாகும். செல்வம், கல்வி கேள்வி என வித்தை, புத்திரப்பேறு, கீர்த்தி, உத்தியோகம் ஆகியவை கிடைக்கவில்லையே என வருந்தும் பக்தர்கள், இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யுங்கள். வீட்டில் சுபிட்சம் நிலவும் என்பது உறுதி!..

+47 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 32 शेयर