🙏🏻🙏🏻சிவ சிவ🙏🏻🙏🏻 திருச்சிற்றம்பலம். 🙇🏼‍♀🙇🏼‍♀எம்பிரான் நம்பிஆரூரர் பெருமான் நற்றமிழ் இன்னிசை 🙇🏼‍♀🙇🏼‍♀ 4.திருக்குருகாவூர் வெள்ளடை. 4.1:- இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான், பித்தனே என்று உன்னைப் பேசுவார் பிறர் எல்லாம், முத்தினை மணி தன்னை மாணிக்கம் முளைத்து எழுந்த, வித்தனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே. விளக்கம்:- 4.1:- எங்கள் பெருமானே! திருக்குருகா வூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளி இருப்பவனே! உனது திருவருட்செயல் இத்துணையதாயின காரணத்தை அறிந்திலேன். உன் இயல்பினை அறியாதவர் எல்லாம் உன்னை, பித்தன் என்று இகழ்ந்து பேசுவர். இஃது அவ்வாறாக நீ முத்தையும் மாணிக்கத்தையும் பிற மணிகளையும் தோற்றுவித்த வித்தாய் வெளிப்பட்டவன் அன்றே? வெள்ளடை என்றது கோயிலின் பெயர். பித்தரே என்றும்மை என்பது அறியாதார் திரித்தோதிய பாடம். 🙇🏼🙇🏼எம்பிரான் நம்பிஆரூரர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🙇🏼🙇🏼 🙏🏻சிவாயநம🙏🏻

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 2 शेयर

भारत का एकमात्र धार्मिक सोशल नेटवर्क

Rate mymandir on the Play Store
5000 से भी ज़्यादा 5 स्टार रेटिंग
डेली-दर्शन, भजन, धार्मिक फ़ोटो और वीडियो * अपने त्योहारों और मंदिरों की फ़ोटो शेयर करें * पसंद के पोस्ट ऑफ़्लाइन सेव करें
सिर्फ़ 4.5MB