+9 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 11 शेयर

*💐🙏#பூணூல்_என்ன?* *#பிராமணர்கள்_மட்டும்தான்_முப்பரிநூல்_அணியவேண்டுமா?* *$K 9842171532* சமஸ்க்ருதத்தில் யக்ஞோபவீதம்.. அதாவது யக்ஞத்துக்கு உபவீதம்... நாம் செய்யக் கூடிய கர்மாக்களுக்கு யக்ஞம் என்று பெயர். யக்ஞங்களை செய்யும் முன் உபவீதமாக அணிவதால் அது யக்ஞோபவீதம். பூணூலை அணியும் போது சொல்லும் மந்திரம். யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம்... ப்ரஜாபதே யத் ஸஹஜம் புரஸ்தாத்... ஆயுஷ்யம்.. அக்ரியம் ப்ரதிமுக்ஞ ஸுப்ரம் யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ: “யக்ஞோபவீதம்.என்னும் பூணுல் மிகவும் பரிசுத்தமானது. ப்ரஜாபதியால் அருளப்பட்டது. வெண்மையான இதை அணிவதால் ஆயுள் அபிவிருத்தி ஆவதுடன், பலமும், ப்ரம்ம தேஜஸும் கிடைக்கிறது” இவ்வாறு அணிபவர்கள் பிராமணர்கள் என்கிறது. பிராம்மணன் என்பவன் பிறப்பால் பிரம்மணீயத்தை ஏற்றுக் கொண்டவன் அல்ல. ‘பிரம்மம்’ என்பது பரம்பொருளைக் குறிக்கும் சொல் . பரப்பிரம்மத்தை குறிக்கும் சொல். எவன் ஒருவன் பிரம்மத்தின் தியானத்தில் ஈடுபடுகிறானோ அவனே பிரம்மணீயத்தைத் தழுவியவன். பிரம்மணீயம் என்பது ஜாதியல்ல. அது ஒரு “நிலை“. இறையானுபவத்தில் ஈடுபடும் எவரும் அந்த நிலைக்கு தங்களை கொண்டு செல்ல பிரயத்தனப்படுபவர்கள் ஆவார்கள். பூநூல் சாதி அடையாளமல்ல. மனிதன் மேம்பட்ட அறிவை குரு வழியாக பெற்று புதிய மனிதனாகிறான். அதன் காரணமாக ஏழு வயதுக்குள் உபநயனம் செய்து பூ நூல் அனுவித்து குருவிடம் கல்வி கற்க அனுப்பினர். கல்வி கற்குமுன் அறியாத பிறவியாக இருந்தவன் பின் கல்வி அறிவு பெற்ற பிறவி ஆகிறான். இதை வேதம் இரு பிறப்பாளர் (த்விஜர்) என கூறும். இந்த சடங்கு காலப்போக்கில் சுருங்கி பிராமணர் எல்லோருக்கும் அடையாள கயிறாகி விட்டது. இந்த பூநூல் வருட வருடம் ஆவணி அவிட்டம் என்று அழைக்கப்படும் உபாகர்மா அன்று அவரவர் சம்பிரதாயப்படி தனது பூநூலை மாற்றி புதியதை அனைத்து கொள்ளலாம். பிராமணர்களின் தன்மைகளை பகவத் கீதை இப்படி சொல்கிறது.. "அமைதி, சுயக்கட்டுப்பாடு, தவம், தூய்மை, சகிப்புத்தன்மை, நேர்மை, அறிவு, பகுத்தறிவு, ஆத்திகம் ஆகிய இயற்கையான தன்மைகளில் பிராமணர்கள் செயல்படுகின்றனர்."- 18.42 எந்த ஜாதியினரும் பூணுல் அணியலாமா ? விஷ்ணுவை வழிபடுவது மனித வாழ்வின் இலட்சியம் ஆகும். இதற்கான முதல் படியாக இருப்பதே வர்ணாஸ்ரம தர்மமாகும். உண்மையான வர்ணாஸ்ரம தர்மம் பகவத் கீதையில் (4.13) கூறப்படுவது . 'ஒருவனது குணத்தினையும், செயல்களையும் அடிப்படையாக வைத்து வெவ்வேறு மனிதர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர்.' பகவத் கீதையில் (4.13) அவர்கள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வகை வர்ணம்( சமுதாய பிரிவு ) அறியப்படுகின்றனர். இந்த பிரிவு கடவுள் உணர்வில் முன்னேறுவதற்கு பயிற்ச்சி அளிப்பதே வேத கலாச்சாரத்தின் நோக்கமாகும். உண்மையான வர்ணாஸ்ரம தர்மத்தில், ஒருவனின் வர்ணம் என்பது அவன் பெற்றுள்ள உண்மையான தன்மையை அடிப்படையாக கொண்டதே தவிர, பிறப்பு அல்லது கோத்திரத்தை வைத்து அல்ல. வேத,புராணங்களில் வரணத்தின் அடிப்படையில் வேத கல்வி அளிக்கப்படவில்லை ! இதற்கு ஸ்ரீ பாதராயணர் - சாந்தியோக்கிய உபநிஷத்தில் - 4:4 to 9 இல் சத்யகாமனின் வரலாறு மூலம் விளக்குகிறார். கெளதம முனிவர் ஒரு சூத்திரனான - சாத்யகாமனுக்கு வேதம் சொல்லி கொடுப்பதாகவும். இதை படிக்க வர்ணங்கள் முக்கியமில்லை என கூறுகிறார் ! பின் அவனை சீடனாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு வேத அறிவை சொல்லிக்கொடுத்து பிராமணனாக ஆகுகிறார் ! வேத சாஸ்திரங்களில் இருந்து உதாரணம் : 1. ரிஷப தேவர் தனது 100 புதல்வர்களில் - முதல் 10 பேரை சத்திரியர்களாகவும், அடுத்த 9 பேரை பாகவத பேச்சாளர்களாகவும், மீதமுள்ள 81 புதல்வர்களை வேத வேள்விகள் செய்யும் அந்தணர்களாகவும் (பிராமணர்களாக) மாற்றினார் என்று ஸ்ரீமத் பாகவதம் ஐந்தாம் காண்டம் சொல்கிறது. 2. அதே போல், பிராமணராக இருந்த அஜாமிளன் தனது கெட்ட நடத்தையினால் சூத்திரனாக மாறினான். - பாகவதம் 5 காண்டம். 3. சத்திரிய குடும்பத்திலிருந்து வந்த விசுவாமித்திரர் காலப்போக்கில் தகுதிகளை வளர்த்து கொண்டு பின்னர் பிராமணராக மாறினார். 4. இராவணன் பிராமண குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும், அவனது அசுரர் சுபாவதினால் அவனை எவரும் ஒருபோதும் பிராமணராக ஏற்கவில்லை. 5. ஜபல உபநிஷத்தில், ஒரு சிறுவன் வேசிக்கு பிறந்தவனாக இருந்த போதிலும், அவனிடம் பிராமண தகுதிகள் இருந்த காரணத்தினால், அவனை கௌதம முனிவர் பிராமணராக ஏற்று கொண்டார். இவ்வாறு, வேத சாஸ்திரத்தில் பல இடங்களில் குணம், மற்றும் தொழிலை அடிப்படையாக வைத்து வர்ணங்கள் பிரிக்க பட்டது . வேத காலத்தில் பிறப்பு என்பது ஒரு அடையாளமாக எடுத்து கொள்ளபட்டதே தவிர, அதுவே நியதியாக ஏற்கப்படவில்லை. பொதுவாக வேத காலத்தில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறப்பவர் அக்குடும்பத்துக்குரிய குணத்துடன் இருப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால் கலியுகத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், முறையான தகுதியினால் ஒருவன் பிராமணராக ஆக முடியும் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது. மஹாபாரதத்திலிருந்து சில கூற்றுகள்.. மஹாபாரதம் வனபர்வம் பகுதி 311-ல், யுதிஷ்டிரர் யக்ஷனிடம் மேற்கொண்ட உரையாடலைக் காண்போம். யக்ஷன் யுதிஷ்டிரரிடம் வினவினார், "மன்னா, எத்தகைய பிறவி, நடத்தை, (வேத) படிப்பு அல்லது (சாஸ்திர) கல்வியினால் ஒரு மனிதன் பிராமணனாகிறான்? யுதிஷ்டிரர் பதிலளித்தார், "யக்ஷனே, கேள்! பிறவியோ, படிப்போ, பிராமணத் தன்மைக்குக் காரணமில்லை. நடத்தையே பிராமணத் தன்மையாகும், இஃது எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். நடத்தையைக் கெடாமல் பராமரித்தால். அவன் ஒருபோதும் கெடு நிலையை அடைவதில்லை. நான்கு வேதங்களைப் படித்தும், ஒருவன் இழிந்தவனாக இருந்தால், அவன் சூத்திரன். புலன்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவனே பிராமணன் என்று அழைக்கப்படுகிறான்." அதேபோல ஒருமுறை பீமன் நகுஷன் என்ற பாம்பிடம் அகப்பட்டு, அதன் உணவாக இருந்த நிலையில், பீமனை விடுவிக்கவேண்டி நகுஷனிடம் யுதிஷ்டிரர் வேண்டினார். தான் கேட்கும் கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான பதிலளித்தால் பீமனை விடுவிப்பதாக நகுஷன் கூறினான். அவ்வுரையாடலில், ஒரு சூத்திரன் பிறப்பால் மட்டுமே சூத்திரன் அல்ல என்றும், அதேபோல ஒரு பிராமணனும் பிறப்பால் மட்டுமே பிராமணன் அல்ல என்றும், யாரிடம் பிராமணருக்குரிய குணங்கள் இருக்கின்றனவோ அவரே பிராமணர் என்று ஞானமுள்ளோர் கூறியிருப்பதாகவும், யுதிஷ்டிரர் தனது முன்னவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நகுஷனிடம் பதிலளித்தார்.(வனபர்வம் பகுதி 83) மேலும், மஹாபாரதத்தின் வனபர்வம் பகுதி 211-ல் தர்மவியாதன் என்ற வேடனை கௌசிகர் அணுகி நுட்பமான விஷயங்கள் குறித்து கேட்டறிந்தபோது, வேடன் பின்வருமாறு கூறலானான்: "ஒரு மனிதன் சூத்திர ஜாதியில் பிறந்திருக்கலாம், ஆனால் அவன் நற்குணங்களைக் கொண்டிருந்தால், வைசிய நிலையையும் சத்திரியருக்கு ஒப்பான நிலையையும் அடையலாம். மேலும், அவன் நேர்மையில் உறுதியாக இருந்தால், பிராமணராக ஆகலாம்." மேலும், மனு சட்டத்திலும் ஒரு வசனம் ... ‘சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம் க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ ச’ அதாவது – ‘சூத்திரன் பிராமணனாகி விடலாம்; பிராமணனும் சூத்திரனாகலாம்; அதே போல், க்ஷத்ரிய மற்றும் வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களின் மகன்களும், மகள்களும் வேறு வர்ணத்தை அடையலாம்’. அவர்கள் வேதம் ஓதும் பிராமணர்கள் கூட ஆகலாம் என்று சொல்கிறது. சைவ சமயத்தில் சூத்திரரும் பூணூல் அணியலாம் என்றே சிவாகமங்கள் கூறுகின்றன.சிவாகம கருத்துக்களை தமிழுக்கு மொழிபெயர்த்தருளிய ஸ்ரீமத் நிகமஞான சம்பந்த தேசிகர் என்றும் ஸ்ரீமத் மறைஞானசம்பந்த தேசிகரென்றும் அழைக்கப்படும் சைவ சித்தாந்த ஆச்சாரியானவர்,தமது நூலான "சைவ சமய நெறி"-ல் இவ்வாறு கூறியுள்ளார் : தர்ப்பணத்தி லர்ச்சனையி லாகுதியி லுந்தரிக்க விற்பயிலுஞ் சூத்திரரிந் நூல் (சைவ சமய நெறி : ஆச்சாரியரிலக்கணம் : 52 இல்லத்தில் ஒழுகின்ற சூத்திரர்,தர்ப்பண காலத்திலும் பூசாகாலத்திலும் அக்கினி காரிய காலத்திலும் இப்பூணூலைத் தரிக்கக் கடவர் உம்மையால் தீக்ஷா காலமும் உற்சவகால முதலியனவுங் கொள்க. இவரு ணயிட்டிகனெப் போதுந் தரிக்க வவனியிலு மாசையறுத் தால் (சைவ சமய நெறி : ஆச்சாரியரிலக்கணம் : 53 இச்சூத்திரருள் நயிட்டிகப் பிரம்மச்சாரியானவன் மண்ணாசை பொன்னாசை பெண்னாசை என்கின்ற மூவகை ஆசைகளையும் நீக்கியிருப்பானாகில் எக்காலத்தும் பூணூல் தரிக்கக் கடவன் ஆக, சூத்திரரும் பூணூல் அணியும் மரபு சைவத்தில் உண்டு என்று தெளிவாகியுள்ளது. எனவே ஸ்வபாவத்தால் ஏற்படுகின்ற தொழில் ஒன்றானாலும், சிந்தையால் ஒருவன் எப்படி வாழ்கிறான் என்பதன் மூலமே ஒருவன் உயர்ந்தவன் எனப்படுவதும், தாழ்ந்தவன் என்ப்படுவதும் ஆகும் . ஜாதி வேறுபாடுகளையும் , அவற்றின் அடிப்படையில் உயர்வு, தாழ்வுகளையும் வேதபுராணங்களில்் சொல்லவில்லை.💐🙏 Fwd *என்றும் அன்புடன்,* *எம்.சரவணக்குமார்@எஸ்.கே* *<எஸ்.கே>தமிழ் இணையம் ™ வாட்ஸ் ஆப் குழு* *மதுரை*👈🇮🇳🚀🌍 *வாட்ஸ் ஆப் எண்கள்* *9842171532* *9444771532*🌺🌻🌹 *முகநூல்: SMS KING SK*

+9 प्रतिक्रिया 2 कॉमेंट्स • 10 शेयर

*#பெண்கள்விரும்பும் #வளையல்..* *$K 9842171532* வளையல் அணிவது உடல் வலிமையை மேம்படுத்துவதோடு அவர்களை நோய் தாக்கங்களில் இருந்தும் பாதுகாத்திருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்து வயது பெண்களின் கரங்களையும் அழகாக்கும் ஆபரணம், வளையல்கள். கடைவீதிகள், திருவிழாக்களுக்கு செல்லும் பெண்கள் அங்கு வண்ண நிறங்கள், டிசைன்களில் குவிந்து கிடக்கும் வளையல்களை வாங்காமல் வீடு திரும்பமாட்டார்கள். வளையல்கள் நமது கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்தவை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்கள் வளையல் அணிந்திருக்கிறார்கள் என்பது அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அேத நேரத்தில் இன்றைய காலகட்டத்தில் பேஷன் உலக புதுமைக்கு ஈடுகொடுக்க வளையல்கள் புதியரக டிசைன்களில் மின்ன தொடங்கி இருக்கின்றன. வளையல் அணிவதிலும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. ஸ்டைலுக்காக ஒரே ஒரு வளையல் மட்டும் அணிவது, ஒரே ஒரு கையில் மட்டும் வளையல் அணிவது போன்றவை கூடாதாம். வளையல்களை தளர்வாக அணிவதும் கூடாது. ஆனால் சிறிய அளவுகளில் இருந்து பெரிய அளவுகள் வரை அடுக்கடுக்காக அணியலாம். வளையல்கள் கைகளில் ஒட்டி இதமாக வருடிக்கொண்டிருக்க வேண்டும். வளைகாப்பில் கண்ணாடி வளையல்களை அணிவார்கள். அதன் ஓசை தாய்க்கும், வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும் சந்தோஷத்தை கொடுக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். கைகள் அசைவின்போது வளையல்கள் எழுப்பும் ஓசை குழந்தைக்கு கேட்டுக்கொண்டே இருக்கும். அது அதன் மூளையை சுறுசுறுப்படைய செய்யும். கேட்கும் திறனை அதிகப்படுத்தும். தாய்-சேய் இடையே நெருக்கமான பந்தத்தையும் ஏற்படுத்தும். உடுத்தும் ஆடை ரகங்களுக்கு ஏற்ப பொருத்தமான வளையல்களை பெண்கள் தேர்ந்தெடுத்து அணிகிறார்கள். புடவை உடுத்தும்போது கை நிறைய வளையல்களை அடுக்கலாம். ஆடைகளில் இடம் பெறும் டிசைன்களுக்கு இணையான, அலங்கார வேலைப்பாடுகளையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பட்டுச்சேலைக்கு கற்கள் பதித்த வளையல்கள் கூடுதல் அழகு சேர்க்கும். விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது ஜொலிக்கும் வளையல்களை அணிந்தால் எடுப்பாக இருக்கும். உயரமான பெண்கள் மெல்லிய வளையல்களை அணிய வேண்டும். குட்டையான பெண்களுக்கு பட்டையான வளையல்கள் பொருத்தமாக இருக்கும். கண்ணாடி வளையல்களில் ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு விதத்தில் மகத்துவம் கொண்டவை. மஞ்சள் நிறம் மகிழ்ச்சியை தரும், நல்ல எண்ணங்களை விதைக்கும், மங்கலம் சேர்க்கும். பச்சை நிறம் மனதை சாந்தப்படுத்தும், அதிர்ஷ்டம் தேடி தரும். ஊதா நிறம் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலை அதிகப்படுத்தும். சிவப்பு நிறம் எதையும் எதிர்கொள்ளும் சக்தியை கொடுக்கும். ஆரஞ்சு நிறம் வெற்றியை தேடித் தரும். வெள்ளை நிறம் இனிய தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கும். கருப்பு நிறம் மன தைரியத்தை அதிகரிக்கும். பச்சை மற்றும் சிவப்பு நிற வளையல்கள் சுப நிகழ்ச்சிகளில் அதிகம் இடம் பிடித்து உற்சாகத்தை வரவழைக்கும். கண்ணாடி வளையல்களில் இருந்து வெளிப்படும் ஓசை எதிர்மறையான எண்ணங்களை விரட்டியடிக்க உதவும். மனதை தெளிவடைய செய்யும். மூளையின் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக்கும். ரத்த ஓட்டத்தையும் இதய துடிப்பையும் சீராக வைத்திருக்க உதவும். வளையல்கள் பெண்களின் மனவலிமையையும் அதிகரிக்கும். வயதான பெண்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக நீண்டநாட்கள் வாழ்ந்ததற்கும், வளையலுக்கும் தொடர்பு இருக்கிறது. வளையல் அணிவது உடல் வலிமையை மேம்படுத்துவதோடு அவர்களை நோய் தாக்கங்களில் இருந்தும் பாதுகாத்திருக்கிறது. ஆன்மிக ரீதியாகவும் கண்ணாடி வளையல் மகத்துவம் பெற்றிருக்கிறது. கண்ணாடி வளையல்களில் இருந்து வெளிப்படும் ஓசை, தீய சக்திகளை விரட்டி அடித்து தேவியின் அருள் கிடைக்க செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கெட்ட சக்திகளில் இருந்து பெண்களை காக்கும், திருஷ்டியை போக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. வளையல் அணியும் பெண்களின் கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் திருமணத்தின்போது மணப்பெண் சிவப்பு வண்ண புடவையும் கண்ணாடி வளையலும் அணிவது மங்களகரமான சடங்காக பின்பற்றப்படுகிறது. கண்ணாடி வளையல்கள் உடைந்திருந்தாலோ, கீறல் விழுந்திருந்தாலோ அதை அணியக்கூடாது என்பது மரபு.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 FWD *என்றும் அன்புடன்,* *எம்.சரவணக்குமார்@எஸ்.கே* *<எஸ்.கே>தமிழ் இணையம் ™ வாட்ஸ் ஆப் குழு* *மதுரை*👈🇮🇳🚀🌍 *வாட்ஸ் ஆப் எண்கள்* *9842171532* *9444771532*🌺🌻🌹 *முகநூல்: SMS KING SK*

+8 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 9 शेयर

குமிழித்தூம்புகள்: தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், “பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது’ (வரி:725-726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர். இதைப்போல, மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான “அறவணர் தொழுத காதை’ என்னும் பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார், “”பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி இரும்பெரு நீத்தம் புகுவது போல அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம் உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்” (1384-87) என்கிறார். “சுருங்கை’ என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும். அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள். 1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே “குமிழித்தூம்பு’ என்பதாகும். பழங்காலந்தொட்டு நடைபெற்றுவரும் நீர்மேலாண்மைக்கு பயன்பட்ட இவ்வகை குமிழித்தூம்புகள் தற்பொழுதுள்ள சூழலில் முற்றிலுமாய் தவிர்க்கப்பட்டு, வெறும் நினைவுச்சின்னங்களாய் காட்சியளிக்கிறது. பட.திலிருக்கும் குமிழிக்கல் கொடும்பாளூர் அருகேயுள்ள ஓர் ஊரணியிலிருந்தது. ஐநூற்றுவர் வணிகக்குழுவின் தன்மம் இது. #கொடும்பாளூர் #குமிழிக்கல் #நன்றி: #திருச்சிபார்த்தி,#இரா.#மதிவாணன்

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

भारत का एकमात्र धार्मिक सोशल नेटवर्क

Rate mymandir on the Play Store
5000 से भी ज़्यादा 5 स्टार रेटिंग
डेली-दर्शन, भजन, धार्मिक फ़ोटो और वीडियो * अपने त्योहारों और मंदिरों की फ़ोटो शेयर करें * पसंद के पोस्ट ऑफ़्लाइन सेव करें
सिर्फ़ 4.5MB