Krishnaveni B
Krishnaveni B Mar 28, 2020

mymandir ஆப்-இல் (https://goo.gl/RIU8qu) வந்த mymandir Senthil Selvam 's போஸ்ட்: https://ww🌷🌷🌷🌷🌷🌷OMNAMONARAYANA. 🌷w.mymandir.com/p/F7tPi?ref=share

+47 प्रतिक्रिया 10 कॉमेंट्स • 1 शेयर

कामेंट्स

AM GOKUL Mar 28, 2020
Good Evening. My.Dear Sister.🍵🍵🍵☕🍬🍫🍧🍧🍧🍦🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏

AM GOKUL Mar 28, 2020
Good Night Sweet Dreams. My.Dear Sister.🙏🍲🍜🍬🍬🍬🍫🍺🍺🍬🍨🍧🙏🙏🙏🙏🙏

AM GOKUL Mar 29, 2020
Good Morning Sister.🍁🌷🏵🌹💐🍲🍲🍧🍧🍨🍧🍨🍫🍫🍬🙏🙏🙏🙏🙏

Krishnaveni B Mar 30, 2020
@ಸಾಗರ THANK U BROTHER GOOD MORNING. 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️HAPPY MONDAY.🍺🍺🍺🍬🍫🍬🍫🕉🕉🕉NAMASIVAYA.

AM GOKUL Mar 30, 2020
Good Morning. Happy Monday.🙏🙏🍜🍜🍦🍧🍨🍬🍬🍬🍫🍵🍦🍡🙏🙏🙏🙏

Krishnaveni B Apr 4, 2020
OMNAMONARAYANA JAISREERAM. GOOD MORNING MY DEAR SISTER. 🌷🌷🌷🌷🥛🍬🍫🍀🌹🍀🌹🕉🕉🕉🕉🕉

skr Apr 4, 2020
good morning dr fr

sankariarul May 10, 2020

🌍108 திவ்ய தேசங்கள் வரலாறு🌍 💝தினம் ஒரு திவ்ய தேசம் -💝 உ.வே. ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்... 🌻🌺01.பூலோக வைகுண்டம் திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் போலாம் வாங்க.! வாங்க.!🌺🌻 💞ஊர்: திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) 💞மாவட்டம்: திருச்சிராப்பள்ளி 💞மாநிலம்: தமிழ்நாடு 💞நாடு: இந்தியா 🌺💞கோயில் தகவல்கள்:--💞🌺 💞மூலவர்: அரங்கநாதர் (விஷ்ணு) 💞உற்சவர்: நம்பெருமாள் 💞தாயார்: ரங்கநாயகி 💞தல விருட்சம்: புன்னை 💞தீர்த்தம்:-- 🌺சந்திர புஷ்கரணி, வில்வ தீர்த்தம், சம்பு தீர்த்தம், பகுள தீர்த்தம், பலாச தீர்த்தம், அசுவ தீர்த்தம் , ஆம்ர தீர்த்தம், கதம்ப தீர்த்தம் ,புன்னாக தீர்த்தம் 💞ஆகமம்: பாஞ்சராத்திரம் 💞பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் 🌻திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். 🌻காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது 🌻திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். 🌻இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 🌻இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. 🌻இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. 🌻திருவரங்கம் கோவிலைப் பாதுகாத்து, திருப்பணிகள் புரிய 1966இல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) இக்கோயிலுக்குத் தொழிநுட்ப உதவி அளிக்க முடிவு செய்தது. 🌻இந்த நிறுவனம் பாட்ரிக் பால்க்னர், ஜார்ஜ்ரைட், ஜுனைன் அபோயர் ஆகிய நிபுணர்களின் சேவையை அளித்தது. 🌻இவர்களுள் ஜுனைன் அபோயர் என்ற பெண்மணி இக்கோயிலின் வரலாற்றையும், அமைப்பையும் நன்கு ஆராய்ந்து பல ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளார். 💞🌺தல வரலாறு🌺💞 -------------------------------------- 🌻திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). 🌻பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். 🌻ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். 🌻இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். 🌻விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். 🌻எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். 🌻அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். 🌻பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான். 🌻குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே. 💞ஸ்ரீ தொண்டரடிப் பொடி ஆழ்வார் முதலாயிரம் திருமாலை 19 வது பாட்டு.💞 🌻கோயில் ஒழுகில் (Chronicle) தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. 🌻பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் ("வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; 🌻அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்" என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கது) மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். 🌻விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான். 💞🌺கோயில் அமைப்பு🌺💞 --------------------------------------- 🌻இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். 🌻இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 🌻மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. 🌻கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. 🌻இராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. 🌻வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது. 💞🌺திருச்சுற்றுகள்🌺💞 -------------------------------------------- 🌻இதன் ஏழு மதில் சுற்றுக்களையும் ஏழு உலகங்கள் என்று கூறுவர். 🌻மதில் சுற்றுகள் ஏழு உலகங்கள் மாடங்கள் சூழ்ந்துள்ள சுற்று பூலோகம் திரிவிக்ரம சோழன் சுற்று புவர்லோகம் அகளங்கனென்னும் கிளிச்சோழன் சுற்று ஸுவர்லோகம் திருமங்கை மன்னன் சுற்று மஹர்லோகம் குலசேகரன் சுற்று ஜநோலோகம் ராஜ மஹெந்திர சோழன் சுற்று தபோலோகம் தர்ம வர்ம சோழன் சுற்று ஸத்யலோகம் 💞🌺நவ தீர்த்தம்🌺💞 --------------------------- 🌻சந்திர புஷ்கரணி 🌻வில்வ தீர்த்தம் 🌻சம்பு தீர்த்தம் 🌻பகுள தீர்த்தம் 🌻பலாச தீர்த்தம் 🌻அசுவ தீர்த்தம் 🌻ஆம்ர தீர்த்தம் 🌻கதம்ப தீர்த்தம் 🌻புன்னாக தீர்த்தம் 💞🌺தெற்கு ராஜகோபுரம்🌺💞 ------------------------------------ 🌻மொட்டைகோபுரம் முந்தைய தோற்றம் 🌻ஸ்ரீரங்கத்திலுள்ள ரங்கநாதசுவாமி கோயில் இராஜகோபுரம். 🌻கோயில் தென்புறத்தில் 400 ஆண்டுகளுக்கு முன், நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப்பெறாத தெற்கு ராஜகோபுரம், 🌻அகோபில மடத்தின் 44 வது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் கட்டுமான பணிகள் 1979ல் தொடங்கி 8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.[1] 🌻ராஜகோபுரம் கட்டுமானம் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள்: 🌻1.7 கோடி செங்கற்கள் 🌻20,000 டன் மணல் 🌻1,000 டன் கருங்கல் 🌻12 ஆயிரம் டன் சிமெண்ட் 🌻130 டன் இரும்பு கம்பிகள் 🌻8,000 டன் வர்ண பூச்சு 🌻ராஜகோபுரத்தின் மொத்த எடை ஒரு இலட்சத்து 28 ஆயிரம் டன்கள் 💞🌺சங்க இலக்கியங்களில் திருவரங்கம் கோயில்🌺💞 --------------------------------------------------------------------------- 🌻சங்க காலத்திலிருந்தே திருவரங்கம் கோயில் புகழ் பெற்றது. 🌻அதனால் 2000 ஆண்டுகளாக திருவரங்கம் விண்ணகரத்தில் வழிபாடு நடப்பது தெரிகிறது. 🌻சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் காடுகண் காதையில் "விரிந்த அலைகளோடு கூடிய மிகப் பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில் திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவரும், 🌻நீல நிறம் கொண்டவருமாகிய திருமால், ஆயிரம் தலைகளுடைய ஆதிசேஷன் என்னும் பாம்பணையாகிய பள்ளியின் மீது அழகுறச்சாய்ந்து கொண்டிருக்கும் தன்மை, 🌻நீல நிறமுடைய ஒரு மேகமானது பொன்மலையினைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கின்றது" என வர்ணிக்கப்படுகிறது. “ 💞சங்கம் மறுவிய காலத்தில், மதுரகவி ஆழ்வார் நீங்கலாக அனைத்து ஆழ்வார்களும் (கிபி 5ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரை) திருவரங்கத்தானை பற்றி பாடியுள்ளனர். நாலாயிய திவ்விய பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்கத்தான் மேல்தான்.💞 🌺திருமங்கை ஆழ்வார் 73 🌺தொண்டரடிப்பொடி ஆழ்வார் 55 🌺பெரியாழ்வார் 35 🌺குலசேகராழ்வார் 31 🌺திருமழிசையாழ்வார் 14 🌺நம்மாழ்வார் 12 🌺திருப்பாணாழ்வார் 10 🌺ஆண்டாள் 10 🌺பூதத்தாழ்வார் 4 🌺பேயாழ்வார் 2 🌺பொய்கையாழ்வார் 1 🌺9 ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலில் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. 🌻சோழ மன்னர்களும் சோழ பெரும்புள்ளிகளும் திருவரங்கம் விண்ணகரத்திற்கு பல கொடைகளும் கைங்கர்யமும் செய்துள்ளதாக கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. 🌻600 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் 9ம் நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டுவரை உள்ளன. 'கோவில் ஒழுகு' 11ம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்ட கோவில் வரலாறு ஆகும். 🌻கோவிலொழுகு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் சில பிரகாரங்களை கட்டச் செய்தார் என கூறுகிறது. 🌻கோவிலொழுகு காலப்போக்கில் திருவரங்கம் விண்ணகரத்தில் ஏற்பட்ட சம்பவங்களை தொகுக்கிறது. 🌻105 கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. இவை முதலாம் பராந்தக சோழன், இரண்டாம் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன், விக்ரம சோழர்களின் கொடைகள் கல்வெட்டிலுள்ளன. பிறகு பாண்டிய மன்னர்களும், ஹோய்சாலர்களும் ஸ்ரீரங்கத்தில் சிரத்தை காட்டினர். கிபி 1311 லும், 1323 லும் தில்லி சுல்தானின் தளபதி மாலிக் காபூர் தென்னிந்தியாவை சூரையாடுவதற்கு படையெடுத்தான். 🌻அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப் பட்டது. 1331 படையெடுப்பின் முன் , 🌻உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் பிள்ளை லோகாசாரியார் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. 🌻ஸ்ரீரங்கததின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331-1371) வீழ்ந்த பின், உற்சவ மூர்த்தி மறுபடியும் எழுந்தருள செய்யப் பட்டது. 🌻அது 13 மே 1371 ல் நடந்ததாக கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், தஞ்சை மன்னர்கள் பெருமளவில் உதவியிருந்தனர். 🌻இஸ்லாமியப் படையெடுப்பால் அழிக்கப்பெற்றதற்குப் பதிலாக கருடாழ்வாரின் புதிய செப்புச்சிலை செய்யப்பட்டு வழிபடப்பட்டது. 🌻(கி.பி.1415). 15,16 ஆம் நூற்றாண்டுகளில் பல தெய்வங்களின் சந்நிதிகள் மீண்டும் புதுப்பித்து அமைக்கப்பட்டன. கோபுரங்கள் கட்டப்பட்டன. 🌻கோவில் விமானம் மீண்டும் கட்டப்பட்டுப் பொன் வேயப்பட்டது. 🌻திருவரங்கம் விண்ணகரம் பல ஆன்மீக சான்றோர்களையும் ஈர்த்துள்ளது. ஆழ்வார்கள் கால கடைசியில் வந்தவர் கம்பர். அவர் ராமாயணத்தை சாலிவாகன வருடம் 🌻அதாவது கிபி 14 இல் ராமாயணத்தை திருவரங்கத்தில் கவியரங்கு ஏற்றினார். அம்மண்டபம் இன்றும் ரங்கநாச்சியார் சன்னதி முன்பு காணலாம். 💞🌺அம்மா மண்டபம் முகப்பு🌺💞 ----------------------------------------- 🌻திருச்சி திருவரங்கம் காவிரி ஆற்றங்கரையில் அம்மா மண்டபம் அமைந்திருக்கிறது. 🌻இந்துசமயத்தின் புனிதச் சடங்குகளுள் ஒன்றான நீத்தார் கடன் இப்பகுதியில் அதிகம் நடத்தப் பெறுகின்றன. 💞🌺வைகுண்ட ஏகாதேசி🌺💞 ====================== 🌻மார்கழி மாதத்தின் வளர்பிறை ஏகாதேசியானது 'வைகுண்ட ஏகாதேசி' என்று அழைக்கப்படுகிறது. 🌻இந்த விழா திருவரங்கத்தில் 21 நாட்கள் கொண்டாப்படுகின்றன. 🌻இத்தலத்தில் மூன்று பிரமோற்சவங்கள் நடைபெறுகின்றன. 🌻ஆதி பிரம்மோட்சவம், பூபதி திருநாள் என்று இந்த பிரமோட்சவங்கள் அழைக்கப்படுகின்றன. 👌நல்ல கோவில் சுற்றி சுற்றி பாா்த்தீங்களா ||  👌🙏ரங்கன கும்பிட்டு கொள்ளுங்கள்.🙏👌 🌺சர்வம் கிருஷ்ணார்பணம் 🌺 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

+7 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 9 शेयर

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 6 शेयर

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
சுமிதா May 9, 2020

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 2 शेयर

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 2 शेयर

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 3 शेयर
sivam May 8, 2020

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

भारत का एकमात्र धार्मिक सोशल नेटवर्क

Rate mymandir on the Play Store
5000 से भी ज़्यादा 5 स्टार रेटिंग
डेली-दर्शन, भजन, धार्मिक फ़ोटो और वीडियो * अपने त्योहारों और मंदिरों की फ़ोटो शेयर करें * पसंद के पोस्ट ऑफ़्लाइन सेव करें
सिर्फ़ 4.5MB