ஜோதிடம்

வீட்டை சுத்தம் செய்ய துடைப்பான் இரவு அமாவாசை,சனி கிழமைகளில் வாங்க கூடாது குடும்பத்தில் சண்டை, கடன் பிரச்சனை உருவாகும். இரவு நேரத்திலும், உச்சி காலத்திலும், ராகு காலம், எம கண்ட நேரத்திலும் வீட்டை அடிக்கடி பெருக்கி சுத்தம் செய்தால் பணவரவு குறைந்து கடன் சுமை கூடும். பழங்கால தண்டனை முறை துடைப்பத்தால் மனிதனை அடிப்பது, அடிபட்டவர் செல்வம், செல்வாக்கு, புகழ் அழிந்து நடத்தையும் கெட்டு விடுகிறது. ஊருக்கு கெடுதி செய்யும் மந்திரவாதிகள், சூனியகார்ர்களை துடைப்பத்தால் அடித்து ஊரை விட்டு வெளியேற்றுவார்கள். தீயசக்தி படைத்தவர்களின் நிழலை கூட பனைமர துடைப்பத்தால் தட்டினால் அவரின் சக்தி குறைந்துவிடும். சுபகாரியமாக செல்லும் போது விளக்குமாறு கால் இடரினாலும் , பெருக்கிய நீர் துடைப்பான் வழி மேலே பட்டாலும் செல்லும் காரியம் நடக்காது என அறியலாம். உபயோகித்த பின் வாயுமூலையில் ஒதுக்கி. வைக்க வேண்டும். கன்னி,ஈசான்ய மூலையில் வைக்க கூடாது. வீட்டை காலை பொழுதில் மட்டும் சுத்தம் செய்து வர லெட்சுமி கடாட்சம் ஏற்படும். அடிக்கடி சுத்தம் செய்ய கூடாது கடன் சுமை ஏறும்.

+5 प्रतिक्रिया 3 कॉमेंट्स • 2 शेयर
Senthil Kumar May 3, 2019

+9 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

கடன் பிரச்சனைகள் முழுவதுமாக நீங்க இந்த வழியை பின்பற்றுங்கள்...! முற்பிறவியில் நாம் செய்த வினைகளின் காரணமாக, இந்தப் பிறவியில் பல தொல்லைகளை அனுபவிக்கிறோம் அதில் ஒன்று தான் கடன் பிரச்சனை. இந்த கடன் பிரச்சனை விரைவில் தீர மூன்று பெளர்ணமி தினங்கள் குலதெய்வ கோவிலிற்கு சென்று மனமுருகி குலதெய்வத்தை வேண்டி, முறையாக வழிபட்டு வந்தால் கடன் தொல்லைகள் அனைத்தும் விலகும். ஒரு சிலருக்கு குலதெய்வ கோவில் வெகு தொலைவில் இருப்பதால் தொடர்ந்து மூன்று பெளர்ணமிகள் செல்ல இயலாத நிலை இருக்கும். அது போன்ற சமயங்களில் கீழே கூறப்பட்டுள்ள பரிகாரங்களை வீட்டிலேயே செய்யலாம். வீட்டில் குலதெய்வ படம் வைத்துள்ளவர்கள் அதன் முன்பாக ஐந்துமுக விளக்கில் நெயிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதன் பிறகு அவரவர் வழக்கம் படி குலதெயவத்திற்கு படையல் இட்டு வழிபட்டு, கடன் பிரச்சனைகள் முழுவதுமாக நீங்க வேண்டும் என்று மனமுருகி குலதெய்வத்திடம் பிரார்த்தனை செய்யவேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது பெளர்ணமிகள் குலதெய்வத்திற்கு படையலிட்டு வழிபட்டு வந்தால் உங்கள் கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். குலதெய்வ படம் வீட்டில் இல்லாதவர்கள் குலதெய்வ கோவில் உள்ள திசை நோக்கி இந்த வழிபாட்டை செய்யலாம். கடன் பிரச்சனை தீர சில பரிகாரங்கள்: ஒவ்வொரு வெள்ளியும் காலை குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று மகா லட்சுமியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மகா லட்சுமி வரவிற்கு குறைவே இருக்காது. வெள்ளிக்கிழமை காலை 5 வெற்றிலை 5 கொட்டை பாக்கு 5 ஒரு ரூபாய் நாணயம் அனைத்தும் பூஜையில் வைத்து லட்சுமி வழிபாடு செய்து, பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும். வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்சனை மற்றும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு மாதமும் செய்யலாம்.

+6 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 2 शेयर

திருமணம் சீக்கிரம் நடைபெற இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்! அறம் எனப்படும் தர்மம் செய்யவும், சிறந்த எதிர்கால சந்ததிகளை உருவாக்கவும் பருவமெய்திய ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் திருமணம் எனும் புனிதமான சடங்கை நமது முன்னோர்கள் ஏற்படுத்தினர்! தற்காலத்தில் எந்த ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஜாதகத்தில் கிரக தோஷங்கள் மற்றும் இன்ன பிற காரணங்களாலும் திருமணம் என்பது மிகவும் தாமதமாக நடைபெறுவது மிகவும் சர்வ சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. ஒரு சிலருக்கு திருமணம் நடைபெறாத நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. இத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கி இனிமையான இல்லற வாழ்க்கையை மேற்கொள்ள உதவும் ஒரு பரிகார முறையை தெரிந்துகொள்ளலாம். நவகிரகங்களில் செவ்வாய் மற்றும் ராகு – கேது கிரகங்கள் ஒருவரின் திருமண வாழ்க்கையில் கணவன் – மனைவி ஒற்றுமை, குழந்தை பிறப்பு போன்றவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்த கிரகங்களாக இருக்கிறது. மேற்கூறிய கிரகங்களின் தோஷங்கள் ஒரு ஜாதகருக்கு இருந்தாலும், பாதகமான கிரகங்களின் தசா புத்தி நடைபெற்றாலும் ஜாதகருக்கு திருமண வாழ்க்கை ஏற்படுவதில் தடை, தாமதங்கள் ஏற்படும் நிலை இருக்கிறது. எத்தகைய தோஷங்களும் நீங்கி சீக்கிரம் திருமணம் நடக்க இறைவழிபாடு சிறந்த பரிகாரமாக இருக்கிறது. இங்கு அப்படியான ஒரு எளிய இறைவழிபாடு பரிகாரத்தை தெரிந்து கொள்ளலாம். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ராகு காலத்தில் அருகிலுள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சகரிடம் துர்க்கை அம்மனுக்கு கல்யாண அர்ச்சனை செய்ய சொல்லி துர்க்கை அம்மனை வழிபட வேண்டும். வழிபாடு முடிந்ததும் 5 மஞ்சள், 5 வெற்றிலை பாக்கு ஆகியவற்றை சேர்த்து அக்கோயிலிலேயே இருக்கும் சுமங்கலிப் பெண்களுக்கு ராகு காலத்தில் தானமாகக் கொடுத்து, அக்கோயிலை சுற்றிவந்து அம்பாளிடம் சீக்கிரம் தங்களுக்கு திருமணம் ஆக வேண்டும் என மனமுருகி வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை உங்களின் திருமணம் நடக்கும் காலம் வரை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் செய்து வரவேண்டும். திட சித்தத்தோடு மேற்கூறிய எளிய பரிகாரத்தை செய்து வருவதால் உங்களின் தோஷங்கள் அனைத்தும் நீங்கி, கூடிய விரைவில் திருமண வாழ்க்கை ஏற்பட துர்க்கை அம்மன் அருள் புரிவார்!!! ♥♥♥♥♥♥♥♥♥♥

+6 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 1 शेयर

இன்றைய பஞ்சாங்கம் மே 02-05-2019, சித்திரை 19, வியாழக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 03.21 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 01.01 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. சிறப்பு: சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. மத்ஸ்ய ஜெயந்தி. பகவான் மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் முதல் அவதாரமான மத்ஸ்ய ஜயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. மச்சாவதாரப் பெருமாளை வணங்கினால் நினைத்த காரியம் நிறைவேறும் வழிபாடு: சிவன் கோயில்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல். வேத நாராயண பெருமாள் இந்த மத்ஸ்ய ஜெயந்தி நாளில் வேதம் ஓதும் வேதியர்கள், அந்தணர்கள், ஜோதிடர்கள் ஆசிரியர்கள் மற்றும் மீனவர்கள் மீனை உண்பவர்கள்அனைவரும் ஊத்துக்கோட்டை நாகலாபுரத்தில் உள்ள வேதநாராயண பெருமாளை வணங்க அவர்கள் தொழிலினால் அவர்களுக்கு ஏற்பட்ட சாபங்களும் தோஷங்களும் நீங்கி உயர்வு ஏற்படும். இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 1 शेयर