உடல்நலம்

~சப்பாத்தி சாப்பிட்டா வெய்ட் குறையுமாமே டாக்டர் ? நெஜமாவா? எங்க அப்பாவுக்கு சுகர் இருக்கு. 10 வருஷமா டெய்லி ராத்திரி 4 சப்பாத்தி சாப்புடுறார்... ஆனாலும் சுகர் குறையல. சரி...சப்பாத்தி பத்தி இன்னைக்கு பாப்போம். சப்பாத்தி ல என்ன இருக்கு?? கோதுமை. இன்னும் தெளிவா சொல்லப்போனா குட்டை கோதுமை (Atta) சப்பாத்தி சாப்பிட்டா எப்டி சார் எடை குறையும்-ன்னு நெனைக்குறீங்க !! ~அதுல கலோரி கம்மி டாக்டர். இல்லைங்க. ~அதுல கார்போஹைட்ரேட் கம்மி டாக்டர் அதுவும் இல்லைங்க. சரி...இப்போ நாம எப்பவும் சாப்பிடுற அரிசி சாதத்தையும்,சப்பாத்தியையும் எடுத்துப்போம். *ஒரு Bowl அரிசி சாதத்துல இருக்க கலோரி - 281 *4 சப்பாத்தியில் உள்ள கலோரி - 360 *ஒரு Bowl அரிசி சாதத்துல இருக்க கார்போஹைட்ரேட்-62 கிராம் *4 சப்பாத்தியில் உள்ள கார்போஹைட்ரேட் - 69 கிராம். ஆக மொத்தம் அரிசியை விட சப்பாத்தியில கலோரியும் அதிகம்,கார்போஹைட்ரேட் உம் அதிகம். அப்புறம் எப்டி இந்த சப்பாத்தி சாப்பிடுற கலாச்சாரம் உருவாச்சு ?? 1980கள் ல உடல் பருமனும்,நீரிழிவு நோயும் தலை தூக்க ஆரம்பிச்சதும்,மக்கள் மேற்கொண்ட உணவு முறை தான் இந்த சப்பாத்தி. அதாவது நம்ம வீடு இருக்கு...அதுல பாயோ,வெறும்தரையிலோ படுத்து தூங்குறப்ப ஜம்முன்னு தூங்குவோம்..ஏன்னா நமக்கு பழக்கப்பட்ட இடம். இதுவே வேற யார் வீட்டுலயோ நமக்கு நம்ம பஞ்சு மெத்தையே குடுத்தாலும் தூக்கம் வராது. அதே கான்செப்ட் தான் இங்கேயும். ரொம்ப நாளா அரிசி சோறே சாப்பிட மக்களுக்கு,சப்பாத்தி ன்னு ஒன்னு குடுத்தா கம்மியா அளவோட சாப்பிடுவாங்க ன்னு அறிமுகம் செய்யப்பட்டது தான் இந்த சப்பாத்தி கலாச்சாரம்...ஆனா நம்ம ஆளுங்க வட இந்தியர்களை காட்டிலும் 10-12 சப்பாத்தி ன்னு வெளுத்து வாங்குராங்க. சப்பாத்தி ன்னு சொன்னதும் நமக்கு யார் நியாபகம் வர்றது. அதே தான்.."பஞ்சாபி சிங் ஹே". பஞ்சாபி ல இருக்க சிங் எல்லாருக்கும் சப்பாத்தி தான் நமக்கு அரிசி மாதிரி. ஆனா விஷயம் தெரியுமா பாஸ்....இந்தியாவிலேயே அதிக உடல் பருமனால் அவதிப்படும் மாநிலம் நம்ம சிங் சகோஸ் இருக்க பஞ்சாப் தான். அப்புறம்,இந்த சப்பாத்தி ல GLUTEN ன்னு ஒரு பொருள் இருக்கு...ரொம்ப கெடுதல் உடலுக்கு...வயிறு சம்மந்தப்பட்ட கெடுதல்கள்,Celiac Disease,Leaky Gut Syndrome,மூட்டு சம்மந்தப்பட்ட Reactive Arthritis ன்னு சகலத்தையும் வர வெச்சிடும் இந்த Gluten. சொல்லப்போனா இட்லி சாப்பிடுறவன விட 4 சப்பாத்தி சாப்பிடுறவனுக்கு தான் உடல் நிலை பாதிக்கும்...சுகர் ஏறும்.மூட்டு வலி,வயிற்றுப்போக்கு ன்னு எல்லாம் வரும். குறைவான மாவுச்சத்து மட்டும் தான் ஆரோக்கியமான வாழ்வியலுக்கு திறவுகோல். சப்பாத்தி ல அது இல்லவே இல்லை. அதனால சப்பாத்தி வெறும் சப்பை தான். #சர்க்கரைநோய் #சப்பாத்தி #தமிழ்டாக்டர் #தமிழ்மருத்துவம்

+23 प्रतिक्रिया 6 कॉमेंट्स • 155 शेयर

பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா??? பெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும்.. தவறாமல் தவிர்க்காமல் முழுவதும் படிக்கவும்… பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப்பா! கூடவே அத்தனை அத்தனை நோய்களும். அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பூப்படைந்ததில் இருந்து பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை கட்டினார்கள்.இதற்கு காரணம் என்ன வென்று எப்போதாவது யோசித்தது உண்டா நீங்கள்..?? பருவமடைந்ததில் இருந்து கர்ப்பபை உள்ள இடத்திலும் தொப்பிளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்க்காகத் தான் பாவாடை தாவணி மற்றும் சேலை அனியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள். அப்போது தான் அங்கு அதிக உஷ்ணம் ஏற்படாமல் இருந்து கர்ப்பபையை காக்கும் என்பதற்காகத்தான்.ஆனால் இப்போதோ அந்த இடத்தை காற்றோட்டம் படாமல் ஜீன்ஸ், டீ சர்ட், சுடிதார் என்று போட்டுக்கொண்டு கொள்வதால் கர்ப்பபை உஷ்ணம் அடைந்து அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி உடலே கர்ப்பபையை காக்க நீர்கட்டியை கர்ப்பபையிக்குள் எற்படுத்தில் உஷ்ணத்தை குறைக்க முயற்சி செய்கிறது. கம்ப்யூட்டர் மொழியை கற்றுக்கொண்டவர்க்கு உடல் மொழியை கற்றுக்கொள்ள நேரம் இருப்பது இல்லை. ஆதி காலத்தில் பெண்கள் வீட்டினை சாணம் இட்டு மொழுவுவார்கள். அது ஓர் சிறந்த உடற்பயிற்சி. வயிற்றினை அழுத்தி மண்டியிட்டு வேலைசெய்யும் பொழுது, நரம்புகளும், இடுப்பு எலும்புகளும் வலுப்படும். இன்றோ அனைவருக்கும் உட்கார்ந்து மற்றும் நின்றுகொண்டு செய்யும் வேலை. ஐ.டி., சாஃப்ட்வேர் நிறுவனங்கள் என்று மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்யும் பணிகளிலேயே ஈடுபடுகின்றனர். இதனால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது. ஆகையால், ஹார்மோன்களும் சரிவர இயங்குவதில்லை. இரவில் கண் முழித்து, பல வேலை செய்து, பகலில் தூங்குவதினால், உடல் வெப்பம் மிகும். இதனால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களின் வயிற்றுப் பகுதியே. சகோதரிகளே தயவுசெய்து ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் நாகரீகம் வளர்ச்சி என்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் போதும் ஆரோக்கியம் என்ற விசயத்தில் பத்து அடி பின்னோக்கி செல்கிறீர்கள் என்பதனை மட்டும் மறவாதீர்கள் . நம் பாட்டி காலத்தில் நாம் கேள்விப்படாத புதுப் புதுப் பெயரில் பெண்களுக்கு நோய்கள் இப்போது கேள்விப்படுகிறோம்… இதற்கு எம் புதிய வாழ்க்கைமுறையே காரணம். வேகமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வேகாத உணவை வேகமாக உண்டு வேகமாக உடுத்தும் மோசமான உடைகளை உடுத்தி வேகமாக உழைத்து வேகமாகவே மடிந்தும் விடுகிறோம்… புதிய வாழ்க்கை முறையில்.. பருவம் அடையம் பிள்ளைகளை நகரில் உள்ள இளம் தாய்மார் பக்குவமாக கவனிக்காமல் விடுவதும் கர்ப்பப்பை வியாதிகளுக்கு காரணம் ஆகிறது!

+21 प्रतिक्रिया 10 कॉमेंट्स • 104 शेयर

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது சித்த மருத்துவர் பாக்கம் தமிழன் தமிழ் மருத்துவ அறிவுரைப்பா மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம் தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான் நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டை அம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு எள்ளெண்ணை உணர்ச்சிக்கு நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே கருப்பைக்கு அசோகுபட்டை களைப்பிற்கு சீந்திலுப்பு குருதிக்கு அத்திப்பழம் குரலுக்கு தேன்மிளகே! விந்திற்கு ஓரிதழ்தாமரை வெள்ளைக்கு கற்றாழை சிந்தைக்கு தாமரைப்பூ சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை கக்குவானுக்கு வசம்புத்தூள் காய்ச்சலுக்கு நிலவேம்பு விக்கலுக்கு மயிலிறகு வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர் நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர் வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ வெட்டைக்கு சிறுசெருப்படையே தீப்புண்ணா குங்கிலியவெண்ணை சீழ்காதுக்கு நிலவேம்பு நாப்புண்ணிற்கு திரிபலாவேலன் நஞ்செதிர்க்க அவரிஎட்டி குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான் குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர் பெரும்பாட்டிற்கு அத்திநாவல் பெருவயிறுக்கு மூக்கிரட்டை கக்கலுக்கு எலுமிச்சைஏலம் கழிச்சலுக்கு தயிர்சுண்டை அக்கிக்கு வெண்பூசனை ஆண்மைக்கு பூனைக்காலி வெண்படைக்கு பூவரசு கார்போகி விதைநோயா கழற்சிவிதை புண்படைக்கு புங்கன்சீமையகத்தி புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல் கரும்படை வெட்பாலைசிரட்டை கால்சொறிக்குவெங்காரபனிநீர் கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே உடல்பெருக்க உளுந்துஎள்ளு உளம்மயக்க கஞ்சாகள்ளு உடல்இளைக்க தேன்கொள்ளு உடல் மறக்க இலங்கநெய்யே அருந்தமிழர் வாழ்வியலில் அன்றாடம்சிறுபிணிக்கு அருமருந்தாய் வழங்கியதை அறிந்தவரை உரைத்தேனே!!

+34 प्रतिक्रिया 5 कॉमेंट्स • 100 शेयर

இருதய அடைப்பு சிகிச்சை: "அத்தனையும் களவாணித்தனம்" . சொல்பவர் டாக்டர் ஹெக்டே ! ------------------- இருதய அடைப்பை நீக்குவதை விட அதை அப்படியே விட்டுவிடுவது இருதயத்தின் ஆயுளை நீடிக்கும் என்றும் பைபாஸ், ஸ்டன்ட் வைப்பது என அத்தனையும் வியாபார நோக்குடன் செய்யப்படும் களவாணித்தனம் என்கிறார் பிரபல இருதய மருத்துவ நிபுணர் ஹெக்டே. கர்நாடக மாநிலம், உடுப்பியை சேர்ந்த பெல்ல மோனப்ப ஹெக்டே, இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட ஒரு இருதய மருத்துவர் (Cardiologist) , இந்திய அரசின் பத்பவிபூஷன் விருது பெற்றவர். மருத்துவர் தவிர அவர் சிறந்த கல்வியாளரும் மருந்தியல் ஆராய்ச்சியாளருமாவார். இவர் இருதயத்தில் அடைப்பு இருந்தால் தயவு செய்து அதனை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டாம். Blocks அகற்றுகிறோம் என்கிற பெயரில் stent உதவியுடன் ஆஞ்சியோபிளாஸ்டி மூலமும் பைபாஸ் மூலமும் அடைப்புகளை நீக்குவது ஒரு பித்தலாட்டம் என குற்றம்சாட்டியுள்ளார். இயற்கையாக இருதயத்தில் ஒரு அடைப்பு உண்டாகுமாயின், நரம்பு தனக்குத்தானே வேற ஒரு பாதையை கண்டுபிடித்து ரத்த ஓட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்கிறதாம். இயற்கை நமக்கு கொடுத்த வரம் அது என்கிறார் ஹெக்டே. ஆக்ஸிஜன் குறைந்த அளவு உள்ளிழுக்கப்படுவது இருதயத்திற்கு நன்மையை தான் தரும் என கூறும் அவர் "அதிகாலையில் எழுந்து வெற்று வயிற்றுடன் உடற்பயிற்சி செய்வதும், பிரணாயமமும் இதய அடைப்பை இயற்கையாகவே அகற்றம் என்கிறார்." இருதய அடைப்பை நீக்குவதை விட அதை அப்படியே விட்டுவிடுவது இருதயத்தின் ஆயுளை நீடிக்கும் என்கிறார் ஹெக்டே. ஆஞ்சியோ செய்வது இருமடங்கு மீண்டும் இதயவலியை கொண்டாக்கும் என்றும் பைபாஸ் செய்வது நான்குமடங்கு வாதம் வர வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஹெக்டே ,சென்னை ஸ்டான்லியில் இருந்த சமயத்தில், சுப்ரமணியசுவாமி தம்மிடம், இருதய அடைப்பு நீக்கத்திற்காக வந்ததாகவும் அதற்கு டாக்டர், அதெல்லாம் தேவையில்லை போங்க, என்று கூறியவுடன் சுப்ரமணியன் சுவாமி கோபமடைந்து டாக்டரை திட்டியதாகவும் கூறி சிரிக்கிறார் பி.எம்.ஹெக்டே. ! மனிதன் நோயுற்றவுடன் மருந்து என்று எதை கொடுத்தாலும் அதன் மீது நம்பிக்கை வைத்து பயபக்தியுடன் பத்தியத்துடன் உண்கிறான். அந்த மருந்து வேலை செய்வதை விட அவனது மூளை, தமது வலிக்கான மருந்து கிடைத்துவிட்டது என நினைத்து சமாதானமடைந்து, டென்சனை குறைத்து நிவாரணத்தை பரப்ப தொடங்குகிறது. எனவே உடலில் நோய் குணமாக , மருந்தைவிட நம்பிக்கையே கைகொடுக்கிறது என டாக்டர் ஹெக்டே தெளிவாக தெரிவித்தார்.

+21 प्रतिक्रिया 5 कॉमेंट्स • 116 शेयर

#மாத்திரையின்றி_ஜலதோஷத்தை_எப்படி_குணப்படுத்தலாம்..???? 🎷குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும். 🎷குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன. 🎷சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும். அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளைய அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும். இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும். 🎷இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நாம் மாத்திரைகள் கொண்டு தடுக்கும்போது, வெள்ளையணுக்கள் எதிர்த்து போரிடாமல் சோம்பேறியாகும். நமது உடல் எல்லாவ்ற்றிற்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும். ஆகவே முடிந்தாரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள். ☎குறிப்பு 1 : கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும். ☎குறிப்பு 2 ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம். ☎குறிப்பு 3 ; ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும். ☎குறிப்பு-4 : வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும். ☎குறிப்பு- 5 : மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம். ☎குறிப்பு- 6 : கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும். ☎குறிப்பு- 7 : வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

+14 प्रतिक्रिया 3 कॉमेंट्स • 96 शेयर

+18 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 85 शेयर